twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கனா காணும் காலங்கள்: புதிய முகங்களைத் தேடி ஒரு பயணம்

    By Mayura Akilan
    |

    Kanum Kalangal5 Puthiya Mugam New dreams and new faces
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை'யில் நடிக்க புதிய முகங்கள் நேர்முகத் தேர்வு ஞாயிறன்று கோவையில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொடரில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'கனா காணும் காலங்கள்' தொடர் பெரும் வரவேற்பினை பெற்ற ஒரு தொடர். 2006 ம் ஆண்டில் பள்ளி மாணவர்களின் கலாட்டாக்களை ஒளிபரப்பியது. இந்தத் தொடரில் பள்ளிப்பருவம், பாடம், படிப்பு, நட்பு, மாணவர்களுக்கே உரித்தான குறும்புகள் என்று அத்தொடர் நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது.

    கனா காணும் காலங்கள் வெற்றியைத் தொடர்ந்து அக்கதையின் தொடர்பாகங்கள் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. பள்ளிப் பருவத்தை தாண்டி அந்த கதாபாத்திரங்கள் கல்லூரியில் காலடி எடுத்துவைக்கும் கதையாகிய 'கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை' கடந்த ஆண்டு 2011 தொடங்கப்பட்டது. இத்தொடரும் நேயர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து 300 எபிசோடுகளையும் தாண்டி வெற்றிகரமாக திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரின் இயக்குனர் பரவீன் பெனட். இதில் சிந்து, எலிஸபெத், திரு, கார்த்திக், சாய் பிரமோதித்தா, விஷ்ணு, சிவாஜி, சத்திரியன், பாலா, அழகப்பன், ஹரிணி, வித்யா, கணேஷ், திவ்யா, சத்தி, ரமேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    இத்தொடரில் மேலும் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. அதற்காக வரும் 09 தேதி கோவையில் பிரம்மாண்டமாக ஒரு தேடல் நிகழ்வை நடத்துகிறது. இந்த தேர்வில் 18 வயது முதல் 25 வயதுவரை உடைய இளைஞர்கள் பங்கேற்கலாம். இந்த நேர்முகத்தேர்வில் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்று நடிப்புத்திறன் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    நிகழ்ச்சியில் பெயர் 'மெகா மார்ட் கனா காணும் காலங்கல் தேடல் பவர்ட் பை ஹீரோ கிளாமர்'. இந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்பவர்கள் கே.எஸ்.ஜி ஆர்ட்ஸ் அன் சயின்ஸ் கல்லூரி, காமராஜர் சாலை, வரதராஜபுரம், சிங்காநல்லூர், கோவை என்ற முகவரிக்கு நேரடியாக சென்று பங்கேற்கலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு 'கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை' யில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

    English summary
    Kanum Kalangal Thedal powered by Hero Glamour' will be held at Coimbatore on 09th September providing an opportunity for the young talents to act in K5 serial. Those interested in acting can walk in for the on the spot registration on Sunday, 09 September between 7 am and 9 am at KSG College of Arts and Science, Kamaraj Road, Varatharajapuram, Singanallur, Coimbatore - 641 015. Age limit for participation is 18 - 25 years.
 
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X