குடும்பத்தைக் கெடுப்பேன், சண்டை போடுவேன்.. 'வள்ளி' வில்லி கன்யா 'கணீர்' பேச்சு!
வித விதமான உடைகள்.... வித்தியாசமான நகைகளை அணிந்து கொண்டு சீரியலில் வில்லத்தனம் செய்கிறார் கன்யா.
ராதிகாவின் செல்லமே தொடர்தான் அநேக நேயர்களுக்கு இவரை அடையாளம் காட்டியது. முதலில் காவ்யாஞ்சலி தொடரில் அமைதியான அஞ்சலியாக நடித்த கன்யா, செல்லமே, மீரா, வள்ளி, தெய்வம் தந்த வீடு ஆகிய தொடர்களில் செம வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
"செல்லமே' தொடரில் எப்பொழுதும் மது பாட்டிலும் கையுமாக இருந்து கணவரை திட்டிக்குவித்த மதுமிதாவாக நடித்தார். வள்ளி தொடரில் அலட்டல் மாமியார், தெய்வம் தந்த வீடு தொடரில் சம்பந்தி வீட்டு குடும்பத்தைக் கெடுக்கும் கதாபாத்திரம் என தன்னுடைய கதாபாத்திரத்தை தனியாக ஸ்கோர் செய்கிறார் கன்யா. சீரியலில் ஆக்ரோசமான வில்லியாக நடிக்கும் கன்யா, நிஜத்தில் அமைதியானவராம்.

மலையாள பட உலகில்
முதன் முதலில் டெலி ஃபிலிம் மூலமாக மீடியா உலகிற்குள் நுழைந்த கன்யா, "நங்கூரம்' என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பிறகு நிறைய படங்களில் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறார்.

காவ்யாஞ்சலி தொடர்
சன் டிவியில் "நீலவானம்' என்ற தமிழ்த் தொடரில் நடித்த காவ்யா அதன் பிறகு "காவ்யாஞ்சலி' தொடரில் நடித்துள்ளார். அமைதியான பெண்ணாக நடித்த கன்யாவிற்கு பேரும், புகழும் வாங்கி கொடுத்ததாம்.

செல்லமே தொடர் மதுமிதா
"செல்லமே' தொடரில் மதுமிதாவாக வந்து வில்லத்தனம் செய்தார் காவ்யா. மதுபாட்டிலும் கையுமாக வந்து கணவரை, குழந்தைகளை வார்த்தைகளால் வறுத்தெடுப்பார்.

வள்ளி வில்லி மாமியார்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் வள்ளி தொடரில் வில்லத்தனம் செய்யும் மாமியாராக நடிக்கும் கன்யா, விஜய் டிவியில் தெய்வம் தந்த வீடு தொடரிலும் குடும்பத்தைக் கெடுக்கும் கதாபாத்திரம்தான்.

அசத்தும் ஆடைகள்
சீரியலில் கன்யா உடுத்தும் ஆடைகள் சற்றே அசத்தலாக அமைந்திருக்கும். தன்னுடைய ஆடைகளை அவரே டிசைன் செய்து கொள்வாராம். கன்யாவைப் பார்க்கிற நிறையபேர் அவரிடம் ஆடைகளைப் பற்றித்தான் முதலில் விசாரிக்கிறார்களாம்.

ஹீரோயின்களுடன் சண்டை
வில்லத்தனம் செய்வதால் சீரியலில் ஹீரோயின்களுடன் சண்டை போடும் கன்யா, நிஜத்தில் அனைவருடனும் நட்பு பாராட்டுவாராம்.


Click it and Unblock the Notifications











