»   »  'கர்ணன்:சூரியபுத்திரன்' பாலிமர் டிவியின் புதிய சரித்திரத் தொடர்!

'கர்ணன்:சூரியபுத்திரன்' பாலிமர் டிவியின் புதிய சரித்திரத் தொடர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி வரிசையில் பாலிமர் டிவியும் சரித்திரத் தொடரை கையிலெடுத்துள்ளது.

சரித்திரத் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு குறைந்ததில்லை. மற்றவகைளைப் போல இல்லாமல் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்த மாதிரி சீரியல்களைப் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

Karnan Suriyaputhiran Polymer tv new Serial

மகாபாரதம், ராமாயணம், ஜெய் ஹனுமான், சனி பகவான் என பல்வேறு சரித்திரத் தொடர்கள் தற்போது சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வரிசையில் பாலிமர் டிவியும் கர்ணன் கதையைக் கையிலெடுத்துள்ளது. கர்ணனின் குழந்தைப் பருவம் முதல் இறப்பு வரை முழுக்க கர்ணனின் வாழ்க்கையை ஒளிபரப்பும் இத்தொடருக்கு 'கர்ணன் சூர்யபுத்திரன்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இன்று முதல் இத்தொடர் நாள்தோறும் இரவு 7.30 மணிக்கு மணிக்கு பாலிமர் டிவியில் ஒளிபரப்பப்படவிருக்கின்றது. மூன்று முடிச்சு, என் கண்மணி, உறவே உயிரே என பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகும் இந்தி சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்த வரிசையில் இந்தக் கர்ணனும் இணைவாரா? என்று காத்திருந்து பார்க்கலாம்.

English summary
Polymer tv Telecast Karnan Suriyaputhiran Serial from Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil