அண்ணியுடன் முதல் முறையாக நடிக்கிறேன்.. கார்த்தி ஹேப்பி டிவீட்
Recommended Video
சென்னை: நடிகர் கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் பாபநாசம் திரைப்பட இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதையடுத்து மிகவும் மகிழ்ச்சியாக படத் தொடக்கம் குறித்த தகவலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
சூர்யா, கார்த்தி இதுவரை இணைந்து நடித்ததில்லை. அதேபோல தனது அண்ணி ஜோதிகாவுடன் ஒ ரு படத்தில் கூட கார்த்தி நடித்ததில்லை. இந்த நிலையில் முதல் முறையாக வெள்ளித்திரையில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதை மகிழ்ச்சிகரமாக டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் கார்த்தி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், முதன் முறையாக அண்ணியுடன் வெள்ளித் திரையில் நடிக்கும் எனக்கான இடத்தை பகிர்ந்துக்க ஆவலா இருக்கேன்.
ரொம்ப எதிர்பார்ப்பு.. திரில்லிங்கா இருக்கு. ஜித்து ஜோசப் சார் உடன் பணிபுரிவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. சத்யராஜ் சார் எங்களுக்கு படத்துக்கு ரொம்ப பலமா இருப்பார்னு சொல்லணும்.. உங்கள் எல்லா ஆசீர்வாதங்களுடன் இன்று படப்பிடிப்பு... என்று பதிவிட்டுள்ளார்..
கார்த்திக்கு இந்த ஒரு தருணம் நடிப்பு பயணத்தில் நலல மார்க் செய்யும்.. திரையில் ஜோ உடன் உன்னைப் பார்க்க மிகவும் உற்சாகமாக. காத்திருக்கிறேன். திரைப்பட அணிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.. வாழ்த்துக்கள் என்று மகனின் ட்வீட்டுக்கு சிவகுமார் பதில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
நடிகை ஜோதிகா திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். பிறகு விளம்பர படங்களில் நடித்தார்.அடுத்து 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு வந்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
கார்த்தி, ஜோ சேர்ந்து நடிக்க இருக்கும் படத்தைப் பார்க்க ரசிகர்கள்தான் ஆவலாக இருக்கின்றனர் என்று பார்த்தால், அவரது குடும்பமே பெரும் ஆவலுடன் காத்திருக்கிறது என்பதை அப்பா சிவகுமாரின் ட்வீட் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications











