»   »  மானாட மயிலாட நிகழ்ச்சியில் இருந்து விலகும் கீர்த்தி

மானாட மயிலாட நிகழ்ச்சியில் இருந்து விலகும் கீர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மானாட மயிலாட நிகழ்ச்சியின் ஆஸ்தான தொகுப்பாளர் கீர்த்தி, அந்த பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார் கீர்த்தி.

மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. இதுவரை 10 சீசன்களை கடந்துள்ளது. நடன இயக்குநர் கலா இயக்கும் இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்று நடனமாடினர்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் பிரபலம். நடுவர்களாக குஷ்பு, ரம்பா, நமீதா, பிருந்தா, பிரசாந்த், மீனா, ஸ்ரீகாந்த் என பிரபலங்கள் பங்கேற்று மதிப்பெண் போடுவார்கள். நமீதாவின் மச்சான் கமெண்ட் பிரபமானது.

பத்து சீசன்களை வெற்றிகரமாக தொட்டுள்ள இந்த நிகழ்ச்சியை சஞ்சீவ், கீர்த்தி தொகுத்து வழங்கி வருகின்றனர். நடிகர் சாந்தனுவை சமீபத்தில் கீர்த்தி திருமணம் செய்து கொண்டார். எனினும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

கனடாவில் இறுதிப்போட்டி

கனடாவில் இறுதிப்போட்டி

மானட மயிலாட 10வது சீசனின் இறுதிப் போட்டி அக்டோபர் 24ம் தேதி கனடா நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், மானாட மயிலாட நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டத்திலிருந்தே அதன் தொகுப்பாளராக இருந்த கீர்த்தி, தற்போது நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கீர்த்தி அறிவிப்பு

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கீர்த்தி, "மானாட மயிலாட சீசன் 10 வெற்றிகரமாக முடியப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் இந்நிகழ்ச்சியில் என் பங்கும் முடிகிறது.

புதிய தொகுப்பாளர்

புதிய தொகுப்பாளர்

மானாட மயிலாட பல அழகான நினைவுகளை எனக்கு தந்திருக்கிறது. பலரை சென்றடைய சரியான தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இறுதிப் போட்டியில் எனக்கு பதிலாக புதிய தொகுப்பாளர் இடம்பெறுவார். மேற்கொண்டு மற்ற சீசன்கள் நடக்குமேயேனால் அவர் தொடர்வார் என நினைக்கிறேன்

கலா மாஸ்டருக்கு நன்றி

கலா மாஸ்டருக்கு நன்றி

நான் இந்த நிலையை எட்ட உதவிய அனைவருக்கும், என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். முக்கியமாக கலா மாஸ்டருக்கு என் நன்றி. என் அடுத்த திட்டங்களை விரைவில் அறிவிக்கிறேன். இறைவனுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி.

English summary
Kalaingnar TV Anchor Keerthi, the anchor of Maanada Mayilada is all set to say good bye to the programme. She will end her journey with the 10th season of the programme.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil