»   »  பாம்பு கதையாக மாறிய கேளடி கண்மணி... ஜீரணிக்க முடியாத ரசிகர்கள்

பாம்பு கதையாக மாறிய கேளடி கண்மணி... ஜீரணிக்க முடியாத ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யுகி... மாயா என்று காதல் கதையாகவும், இவர்களை பிரித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கு வில்லி தோழியாகவும் போய் கொண்டிருந்த சன்டிவியின் கேளடி கண்மணி சீரியல் இப்போது கதை மொத்தமும் மாறி பாம்பு கதையாகி விட்டது. இதனால் பல ரசிகர்கள் இந்த சீரியல் பார்ப்பதையே நிறுத்தி விட்டார்களாம். மாயாவை மாற்றியது பல ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம்.

வங்கி அதிகாரி பவானியின் மகள் மனநலம் குன்றிய மாயாவை ஒரு கட்டத்தில் மணக்கிறான் யுகி. இது யுகியின் தாய்க்கு பிடிக்கவில்லை. பிரதாப் தன் தாய் எஸ் கே நடத்திய நாடகத்தை அறியாமல் யுகியை வெறுக்க, இன்பா செய்யும் தவறுகள் அனைத்தையும் யுகி மீது திரும்புகிறது. அக்கா மாலதி, மாமா பச்சை இருவரும் யுகியின் தாய் பாக்கியம் அவர்களிடம் மாற்றி சொல்லி வெறுப்பை அதிகப்படுத்துகின்றனர்.

Keladi Kanmani viewers want bring back maya

தங்கை குட்டியை தவிர வீட்டில் உள்ள அனைவருக்கும் யுகி மீது வெறுப்பு ஏற்படும்படி செய்கிறது. இதனால் வீட்டை விட்டு யுகி வெளியேற்ற படுகிறார், பிரதாப் யுகி தாயை கேவலமாக பேச மின்விசிறில் தூக்கு போட்டு தொங்க போக மாலதி அவரை காப்பாற்றுகிறார். இதனை தங்கை குட்டி யுகிக்கு தெரியப்படுத்த, வந்து பார்க்கும் பிள்ளையிடம் மணைவி மாயாவை தேடி போக கூடாது, எஸ் கே வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்.

யுகியும் தாயின் விருப்பப்படி மன்னிப்பு கேட்டு, தன் நண்பன் வேலுவிடம் இனி தன் அம்மாவுக்கு பிடிக்காத எதையும் செய்ய போவது இல்லை என்றும், மாயாவை பற்றி நினைக்க போவது இல்லை, தங்கைகளுக்கு நல்ல அண்ணனாக இருக்க போவதாக கூறும் யுகியை பார்த்து நண்பன் திகைக்கிறார்.

Keladi Kanmani viewers want bring back maya

சுவாமியார் சொல்லதை கேட்டு மூலிகை மருந்துக்காக பவானி நாகாத்தம்மண் புற்று முன்பு தியானம் செய்ய, நாகமே மயங்கி விழுந்த பவானிக்கு அருளி தெய்வீக சிறுமியாக வந்து மூலிகை மருந்தை கொடுக்க, நகாதம்மண்னே சாமியாருக்கு உதவி மாயாவை குணப்படுத்துகிறார்.

அதே சமயத்தில் பவானி அம்மன் முன்பு உயிரை விடுகிறார். மாயா புதிய தோற்றதுடன் நாகத்தின் மகளாகிறாள். கதை புதிய கிராமத்தை நோக்கி பயணம் ஆகிறது.

நாகதோஷம் உள்ள குடும்பம், தந்தை தில்லை, மணைவி பேச்சி,மகன் ஜெயமணி, சின்னவர் விஜய், இவர் யுகி போலவே இருக்கிறார். தில்லையின் மூத்த மகள் அம்பிகா, சின்னவள் ஷாலினி என குடும்பத்தினர்.

அம்பிகாவை பெண் பார்க்க வரும் அனைவருக்கும் ஏதோ ஒரு தடை ஏற்படுவது, தந்தை, மகன் இருவரும் கோயில் குத்தகை கிடைக்காமல் போக, கோபத்தில் புற்றை இடிக்க கிளம்புகிறார் தில்லை. இதனை தடுக்கிறார் ஊர் பெரியவர் சிதம்பரம். புது தோற்றதுடன் வரும் மாயா அந்த நேரத்தில் மயங்கி விழுகிறாள். ஊர் பேர் தெரியாத மாயாவை, சிதம்பரம் தன் மகளாக தத்து எடுத்துக்கொண்டு மஹாலட்சுமி என பெயர் வைக்கிறார். கோயில் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

தில்லை மகன் ஜெயமணி ஒரு பெண்ணை பலாத்காரம் முயல அவரை மஹாலட்சுமி அடித்து பஞ்சாயத்தில் நிறுத்த, அவரையே திருமணம் செய்து கொள்ளுவதாக கூறியும் மறுக்கிறாள் அந்த பெண்.

ஜெயமணி அவன் தன் தங்கை மகன் என்று கூறும் சிதம்பரம், கோபத்தில் துடிக்கும் தில்லையும், அவரது மகனும், பழி வாங்கும் நோக்கத்துடன் குறி சொல்லுபவளை மடக்கி ஊர் நன்மைக்கு கன்னி பெண்ணை நிர்வாணமாக வலம் வர அவர் ஏற்ட்பாடு செய்கின்றனர்.

Keladi Kanmani viewers want bring back maya

அந்த குடத்தில் அனைத்து சீட்டுக்களிலும் மஹாவின் பெயரை எழுத, இதை அறியாமல் தெய்வ சடங்குக்கு மஹா ஒப்புக்கொண்டது, நடுவில் வந்து விஜய் அவரின் மானத்தை காப்பாற்ற தாலி கட்டி மனைவியாக வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

தில்லை மஹாவை பழிவாங்கும் எண்ணத்தில் வீட்டுக்கு அழைத்து வர கூறுகிறார். கருகிய பூ, விஷமாக மாறிய பால், ஆகியவை மஹா வீட்டில் கால் வைத்தவுடன் சரியானது என நகருகிறது கதை. காதல் கதையாக இருந்த கதை இப்போது பாம்பு கதையாக நகருகிறது.

மஹாவை பாம்பை விட்டு கொல்ல நினைக்கிறான் ஜெயமணி. ஆனால் நாகத்தின் மகளை நாகத்தால் எப்படி கொல்ல முடியும்? பரபரப்பான திருப்பங்களுடன் நகர்கிறது கேளடி கண்மணி.

திடீரென இப்படி கதை மாற்றத்துக்கு காரணம் என்ன என்பது புரியவில்லை. அழகான, அப்பாவியான, குழந்தை தனமான மாயா முகத்திற்கு பதில் மஹாலட்சுமியாக வேறு ஒருவர் வந்துள்ளதை ரசிகர்களால் ஏற்கத்தான் முடியவில்லை. கதை தடம் புரண்டு விட்டதாகவே ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர். பலர் இந்த சீரியல் பார்ப்பதையே நிறுத்தி விட்டார்களாம். புது மஹாலட்சுமி வேண்டாம்... எங்களுக்கு பழைய மாயாவை திரும்ப தாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

பேய் கதை, பாம்பு கதையை சீரியலாக எடுத்தால் ஹிட் அடிக்கலாம் என்று இயக்குநர்கள் இனியும் விபரீத முயற்சிகள் இறங்கமாட்டார்கள் என்றே நினைக்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Sun TV serial Keladi Kanmani Total twist with no connection no meaning change of characters, out dated 25 yr old concept, doesn't fit to any crowd.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more