twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்களுக்கு கவுன்சிலிங் தரும் கேளடி பெண்ணே!

    By Mayura Akilan
    |

    பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கேளடி பெண்ணே' நிகழ்ச்சியில் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    உயிர் யாரிடம்?' என்ற பகுதியில் வாழ்வின் வெற்றிக்கான வழிமுறைகளையும் சொல்லித் தரப்படுகிறது. மேலும், 'உங்கள் நினைவிற்கு' என்ற பகுதியில் மருத்துவ ஆய்வுகள், வீட்டு மருத்துவம், எளிய முதலுதவி போன்ற பல்வேறு பயனுள்ள தகவல்களை டாக்டர் பிரியா கண்ணன் தொகுத்து வழங்குகிறார்.

    Women

    கல்யாணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். பத்துப் பொருத்தம் பார்த்து மணம் முடிப்பார்கள். ஆணை விட பெண்ணுக்கு ஐந்து வயதாவது குறைவாக இருந்தால் தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பார்கள். இந்த வரைமுறை எல்லாம் இப்போது மாறிவிட்டது.

    பெரும்பாலான துறைகளில் ஆணும், பெண்ணும் இரவு பகல் பாராது வேலை செய்யும் சூழல் வந்து விட்டது. அதனால் ஏற்படும் நெருக்கம் காரணமாக உடன் பணி புரிபவர்களை திருமணம் செய்வதும் அதிகரித்துள்ளது.

    இதில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்னவென்றால் ஆணும், பெண்ணும் சம வயதினராக இருப்பதும், தன்னை விட வயதில் மூத்த பெண்ணை ஆண்கள் திருமணம் முடிப்பதும் தான். இது மருத்துவரீதியிலும், சமுதாய ரீதியிலும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக விளக்குகிறார் டாக்டர் ஜெயம் கண்ணன்.

    இந்த நிகழ்ச்சி பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கேளடி பெண்ணே' நிகழ்ச்சியில் சிறப்புப் பகுதியாக இடம்பெறுகிறது. கேளடி பெண்ணே நிகழ்ச்சியை, ஏ.கே.கம்யூனிகேஷன் சார்பில் அரசு கிருத்திகா தயாரித்து வழங்குகிறார்.

    English summary
    This program features various segments on health and wellbeing, problems faced by women and counselling for women to overcome the problems.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X