புடவையும், நகைகளும் சூப்பர்: ரசிகையின் பாராட்டில் நெகிழ்ந்த குஷ்பு

By Mayura Akilan

சினிமாவில் நடிக்கும் போதும் சரி... சின்னத்திரைக்கு வந்த பின்னரும் சரி சூப்பர்ஸ்டாரினியாக திகழ்கிறார் குஷ்பு.

ஜாக்பாட் கேம் ஷோ தொடங்கி இன்றைக்கு நம்ம வீட்டு மகாலட்சுமி வரை குஷ்பு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு சின்னத்திரை ரசிகர்களிடையே தனி வரவேற்பு உள்ளது.

ரியாலிட்டி நடன நிகழ்ச்சியான மானட மயிலாட, டாக் ஷோ வான அச்சம் தவிர், போன்ற நிகழ்ச்சிகளுக்கும் குஷ்புவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளன.

இது தவிர தமிழ் தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது வட இந்திய தொலைக்காட்சிகளில் அரசியல், உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பான பல விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று கருத்து கூறி வருகிறார்.

சூப்பர் குஷ்பு

சூப்பர் குஷ்பு

சின்னத்திரையின் குஷ்புவின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து ரசிக்கும் ரசிகர்கள் குஷ்பு அணியும் உடைகளை கவனித்து பாராட்டத் தவறுவதில்லை.

நம்ம வீட்டு மகாலட்சுமி

நம்ம வீட்டு மகாலட்சுமி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குஷ்பு நடத்தும் ‘நம்ம வீட்டு மகாலட்சுமி' நிகழ்ச்சியைப் பார்த்த அவரது ரசிகை ஒருவர், குஷ்புவின் புடவை, நகைகள், ஜாக்கெட் போன்றவைகளைப் புகழோ புகழ் என்று புகழ்ந்துள்ளாராம்.

மகிழ்ந்து போன குஷ்பு

மகிழ்ந்து போன குஷ்பு

ரசிகையின் கருத்துக்கு நன்றி சொல்லியுள்ள குஷ்பு, தன்னுடைய உடையலங்காரத்தை பல நிகழ்ச்சிகளில் பின்பற்ற முடிவு செய்துள்ளார்.

ஜாக்பாட்டில் தொடங்கி…

ஜாக்பாட்டில் தொடங்கி…

ஜெயா டிவியில் குஷ்பு நடத்திய ஜாக் பாட் நிகழ்ச்சியின் குஷ்புவின் ஜாக்கெட் பலரது கவனத்தைக் கவர்ந்தது. 2000 ஜாக்கெட்டுகள் வரை வைத்துள்ளாராம் குஷ்பு.

மானாட மயிலாட குஷ்பு

மானாட மயிலாட குஷ்பு

அதே சமயம் மானட மயிலாட நிகழ்ச்சியில் மூன்று நடுவர்கள் என்பதால் மூவரிலும் குஷ்பு தனியாகவே தெரியும் வகையில் ஆடை அலங்காரங்களை செய்து வருகிறார்.

அச்சம் தவிர்

அச்சம் தவிர்

தந்தி டிவியில் அச்சம் தவிர் என்ற டாக் ஷோ நடத்தும் குஷ்பு. மக்கள் பிரச்சினையை பேசுகிறார். இதில் சாதரணமான எளிமையான புடவை, மேக் அப்பில் ரசிகர்களை கவர்கிறார்.

சீரியல் குஷ்பு

சீரியல் குஷ்பு

சன் டிவியில் குங்குமம் சீரியல் தொடங்கி கலைஞர் டிவியில் பார்த்த ஞாபகம் இல்லையோ போன்ற சீரியல்வரை குஷ்பு தனக்கென ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்றே கூறலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X