»   »  கல்யாணத்தை நிப்பாட்ட மாப்பிள்ளையை கடத்துறதே வேலையா போச்சுப்பா

கல்யாணத்தை நிப்பாட்ட மாப்பிள்ளையை கடத்துறதே வேலையா போச்சுப்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீப்பை ஒளிச்சி வச்சிட்டா கல்யாணம் நின்னு போயிருமா என்று கிராமத்து பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் டீவி சீரியல்களில் கல்யாணத்தை நிப்பாட்ட செய்யும் வில்லத்தனங்களும், மாப்பிள்ளையை கடத்த போடும் திட்டங்களுமே கதைகளாக ஒளிபரப்பாகிறது.

சன்டிவி, கலைஞர் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என எந்த சீரியல் எடுத்துக்கொண்டாலும் மாப்பிள்ளையை கடத்திவிட்டு அந்த இடத்தில் வில்லன் மாப்பிள்ளையாவதுதான் கதையாக இருக்கிறது.

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் பிரியசகி தொடரில் திவ்யாவிற்கும் கார்த்திக்கிற்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில் கார்த்திக்கையும் அவரது தோழி காயத்ரியையும் கடத்திவிட்டு அந்த இடத்தில் மாப்பிள்ளையாக அமர நினைக்கிறான் வில்லன். அதேபோல திட்டம் போட்டு செயல்படுத்தியும் விடுகிறான்.

இதேபோல சன் டிவியில் பிரியமானவன் சீரியலிலும் சரவணன் - பூமிகா திருமணத்தை நிறுத்த மாப்பிள்ளை சரவணனை கடத்திவிட்டு அந்த இடத்தில் மாப்பிள்ளையாக அமர்ந்து பூமிகா கழுத்தில் தாலி கட்ட நினைக்கிறான் கண்ணன். நல்லவேளையாக சரவணன் தப்பிவந்து பூமிகா கழுத்தில் தாலி கட்டவே சுபமாக முடிந்து விட்டது.

மாப்பிள்ளை கதை

மாப்பிள்ளை கதை

முன்பெல்லாம் திருமணத்தை நிறுத்த பெண்ணை கடத்துவதுபோல சினிமாவில் சீன் வைப்பார்கள். தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் ஹீரோயின் ஹன்சிகாவிற்கு பார்த்த மாப்பிள்ளையை கடத்திவிட்டு அவருக்கு பதிலாக தனுஷ் மாப்பிள்ளையாவார். அதே சீன்தான் இப்போது பெரும்பாலான சீரியல்களில் வைக்கப்படுகிறது.

பிரியமானவள்

பிரியமானவள்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரியமானவர் சீரியலில் அவந்திகா - நடராஜ் திருமணத்தை நிறுத்த மாப்பிள்ளையின் அம்மாவை கடத்தினார்கள். அப்புறம் ஒருவழியாக திருமணம் நடந்து முடிந்து விட்டது.

பூமிகா - சரவணன்

பூமிகா - சரவணன்

இதே பிரியமானவள் சீரியலில் அவந்திகாவின் தங்கை பூமிகாவிற்கும், நட்ராஜின் தம்பி சரவணனுக்கும் நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்த முயற்சி செய்த மானங்கெட்ட மாப்பிள்ளை சதீஷை கொலை செய்தார்கள் உமாவும், பூமிகாவும். அதே நேரத்தில் சரவணனை கடத்திய கண்ணன், மாப்பிள்ளையாக வர புது திருப்பம் ஏற்பட்டது.

தாலி கட்டிய சரவணன்

தாலி கட்டிய சரவணன்

ஒருவழியாக கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி வந்த சரவணன், பூமிகா கழுத்தில் தாலி கட்டிவிட்டான். ஆனால் பூமிகாவும், உமாவும் செய்த கொலை கழுத்திற்கு கீழே கத்தியாக தொங்கிறதே அதை எப்படி சமாளிக்கப் போகிறன்றரோ?

பிரியசகி சீரியல்

பிரியசகி சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரியசகி சீரியலிலும் திவ்யாவிற்கும் கார்த்திக்கிற்கும் திருமணம் நடக்கப்போகிறது. ஆனால் அதற்கு முன்னதாக மாப்பிள்ளையையும், பெண்ணின் தோழியையும் கடத்திவிட்டார்கள் வில்லன் கோஷ்டிகள்.

கல்யாணம் பண்ணிட்டாங்களே

கல்யாணம் பண்ணிட்டாங்களே

கார்த்திக் காயத்திரிக்கு கடத்தல்காரர்கள் திருமணம் செய்து விட்டார்கள் அதுதான் இந்த சீரியலில் மிகப்பெரிய திருப்பம். இங்கே திருமண மண்டபத்தில் மணப்பெண் திவ்யா ரெடியாக இருக்க மாப்பிள்ளை கார்த்திக்கை காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்க வில்லனோ மாப்பிள்கை கெட் அப்பில் வந்து அதிர்ச்சி கொடுக்கிறான்.

திவ்யா திருமணம் என்னவாகுமோ?

திவ்யா திருமணம் என்னவாகுமோ?

காயத்ரியுடன் கார்த்திக் ஓடிப்போய்விட்டதாக கதை கட்ட திருமண மண்டபமே அதிர்ச்சியடைகிறது. கடைசியில் திவ்யாவின் திருமணம் யாருடன் நடைபெறுகிறது என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம் என்று சஸ்பென்ஸ் வைத்து விட்டார்கள்.

புதுசா யோசிங்களேம்பா

புதுசா யோசிங்களேம்பா

சீரியல் இயக்குநர்களே புதிதாக கதையை யோசித்து சீன் வைக்கலாமே. வம்சம் தொடரில் மருமகளுக்கு வயதான வக்கீலுடன் திருமணம் செய்து வைக்க மாமியார் முயற்சி செய்ய, மருமகளோ, அதே வயதான வக்கீலுக்கு மாமியாரை திருமணம் செய்து வைக்கப்போவதாக கூறுகிறார். இந்த கதை நல்லா இருக்கே என்று யோசிக்கின்றனர் இல்லத்தரசிகள். இப்படி புதுசு புதுசா யோசிங்க. எல்லா டிவியிலயும் ஒரே கதையை பார்க்க எங்களுக்கும் போர் அடிக்கிதுப்பா.

English summary
Kidnappings have become a part and parcel of the Tamil mega serials,

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil