»   »  கழுத்தை அறுத்து கொல்... கற்றுக்கொடுக்கும் டிவி சீரியல்கள்

கழுத்தை அறுத்து கொல்... கற்றுக்கொடுக்கும் டிவி சீரியல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுவாதியை ரயில் நிலையத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவத்தின் வடு மறைவதற்கு முன்பாகவே அதே பாணியில் பல கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழகம் முழுவதும் கடந்த வாரங்களில் மட்டும் பல கொலைச்சம்பவங்கள் கூலிப்படையினரால் நிகழ்த்தப்பட்டுள்ளன.

டிவி சீரியல்களைப் பார்த்துதான் பல கொலைகள் நடக்கின்றன என்று அரசியல் தலைவர்கள் கூறி வரும் நிலையில் அதற்கு வலு சேர்ப்பது போல பல சீரியல்களில் கூலிப்படையினர் கொலை சம்பவங்களை அரங்கேற்றுவது போல காட்சிகள் அமைக்கப்படுகின்றன.

சன் டிவியில் மட்டுமல்லாது ஜீ தமிழ், கலைஞர் டிவி, வேந்தர் டிவி என பல சேனல்களிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

உயிருக்கு போராடும் அர்ச்சனா

உயிருக்கு போராடும் அர்ச்சனா

வம்சம் சீரியலில் கூலிப்படையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அர்ச்சனா, உயிருக்கு போரடுகிறாள். ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள அர்ச்சனாவை கொலை செய்ய ஆக்சிஜன் சிலிண்டரை நிறுத்துகிறாள் கூலிப்படை தலைவி. கணவரை என்கவுண்டரில் கொலை செய்த பொன்னுரங்கத்தை பழி வாங்க இந்த கொலை முயற்சியாம்.

மெடிக்கல் காலேஜ் கொலை

மெடிக்கல் காலேஜ் கொலை

சந்திரலேகா சீரியலில் மருத்துவக்கல்லூரியில் பணத்துக்காக சீட் கொடுக்க திட்டமிட்ட கல்லூரி முதல்வர், ஏழை மாணவியை கொன்று கிணற்றில் போடுகிறார். பெற்ற மகளின் கணவர் என்றும் நினைக்காமல் மருமகனை கொல்ல கூலிப்படையை அமர்த்துகிறார்.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

போலீஸ் மருமகனை கொல்வதற்காக துப்பாக்கியால் குறி பார்க்கிறான் கொலையாளி. ஆனால் அந்த சம்பவத்தில் பலியாகிறாள் மங்கை. குழந்தையும், கணவரும் அநாதைகளாகின்றனர்.

கழுத்தை அறு

கழுத்தை அறு

பிரியமானவள் சீரியலில் சதீஷ் கொலை வழக்கு இன்னும் முடிந்தபாடில்லை. முதலில் 5 பேரை கடத்தி வைத்திருந்த போலீஸ் கிரி, இப்போது கிருஷ்ணன் வீட்டு மருமகள்கள் இருவரை கூலிப்படையினர் மூலம் அவர்கள் வீட்டிற்குள்ளேயே கடத்தி கழுத்தில் அரிவாளை வைத்திருப்பது கொடுமை.

வாணி ராணி

வாணி ராணி

வாணி ராணி தொடரில் கொலைகாரன் ஆர்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் வீட்டிற்குள்ளேயே புகுந்து மனைவி பூஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து விடுவதாக மிரட்டுவது கொடூரம்.

அலமு கதி என்னவாச்சோ

அலமு கதி என்னவாச்சோ

குலதெய்வம் தொடரில் காதலன் என்று பூபாலன் பின்னால் சென்ற அலமுவை கத்தி முனையில் கட்டி போட்டு வைத்திருக்கிறான் பூபாலன். கூடவே நாதனையும் கடத்தி வைத்துக் கொண்டு கழுத்தை அறுத்து விடுவதாக கூறுகிறான். சீரியல்களில் ஒரே கழுத்தறுப்பு சீன்கள்தான்.

கொலை மிரட்டல்கள்

கொலை மிரட்டல்கள்

தமிழ் சீரியல்களில் இன்றைக்கு கொலைகளும், கொலை மிரட்டல்களும் அதிகரித்து வருகின்றன. சிறுவர்கள் கூட கையில் கத்தியுடன் அலைகின்றனர். கத்தியுடன் அலையும் கூலிப்படை கலாச்சாரம் டிவி சீரியல்களில் அதிகரித்து வருவதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

English summary
The serials in Tamil are becoming killers nowadays and they teach us the dangerous tactics to ruin the famil ethics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil