»   »  சன் டிவி கிச்சன் கலாட்டாவில் ஃபரினாவின் டிரஸ்தான் ரகம் ரகமா இருக்கு!

சன் டிவி கிச்சன் கலாட்டாவில் ஃபரினாவின் டிரஸ்தான் ரகம் ரகமா இருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கிச்சன் கலாட்டா சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஃபரீனா அணிந்து வரும் ஆடைகளுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. சமையல் நிகழ்ச்சியில் என்ன அயிட்டம் என்றும் பார்க்கும் இல்லத்தரசிகள் கூட ஃபரினாவின் காஸ்ட்யூமிற்கு ரசிகர்களாகிவிட்டனராம்.

குண்டு கண்ணத்தில் அழகாய் குழி விழ கண்களை உருட்டி உருட்டி க்யூட்டாக பேசும் ஃபரினா, அன்றைய ஸ்பெஷல் அயிட்டத்திற்கு தகுந்தவாறு உடை அணிவதில் கில்லாடி. சாதாரணமாக உடுத்தும் புடவையை கூட கலக்கல் ப்ளவுஸ் போட்டு கலர்ஃபுல் காஸ்ட்யூமாக மாற்றி விடுகிறார் ஃபரினா.

ஆரம்பத்துல எல்லாம் கிச்சன் ஷோக்கு இப்படி மாடர்ன் காஸ்ட்யூம் எதுக்கு? சாரி, சுடிதார் போதாதான்னு நினைச்சாங்க. ஆனாலும் ட்ரை பண்ணி பாப்போமேன்னு இப்படி டிசைன் பண்ணோம். அது சூப்பர் ஹிட் ஆகிடுச்சு என்கிறார் ஃபரினா.

சின்னத்திரை தொகுப்பாளினி

சின்னத்திரை தொகுப்பாளினி

ப்ளஸ் 1 படிக்கும் போதே நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியை தொடங்கிய ஃபரினா, ராஜ் டிவி, புதுயுகம், ஜீ தமிழ் சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாராக இருந்து இப்போது சன் டிவியில் கிச்சன் கலாட்டா தொகுத்து வழங்கி வருகிறார். எல்லா சேனல்களிலுமே சமையல் நிகழ்ச்சிதான் தொகுத்து வழங்கியிருக்கிறாராம்.

செமையாக சாப்பிடும் ஃபரினா

செமையாக சாப்பிடும் ஃபரினா

கிச்சன் கலாட்டா நிகழ்ச்சியில் சமைக்கும் உணவுகளை கண்களை மூடிக்கொண்டு ரசித்து சுவைக்கும் ஃபரினா, பயங்கரமான நான் - வெஜ் பிரியை. இப்போ கொஞ்ச நாளாத்தான் காய்கறி எல்லாம் சாப்பிட ஆரம்பித்திருக்கிறாராம்.

பயம் கிடையாது

பயம் கிடையாது

சினிமா, சீரியலில் பெண்களை கரப்பான்பூச்சிக்குபயப்படுபவர்களாத்தான் சீன் வைக்கின்றனர். ஆனால் எனக்கு அப்படி எல்லாம் பயம் எதுவும் இல்லை என்கிறார் ஃபரினா.

எதிர்காலத்தின் நடிப்பேன்

இப்போதைக்கு நடிப்பு பக்கம் வரும் ஆர்வம் எல்லாம் இல்லை. வருங்காலத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம். நல்ல கதை.. நல்ல கேரக்டர்.. நல்ல டைரக்டர் கிடைத்தால் நடிப்பேன் என்கிறார் ஃபரினா.

English summary
Farina Azad is an Anchor from Sun Tv, Who predominantly hosts Kitchen Galatta.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil