»   »  சன் டிவியில் குஷ்பு தயாரிக்கும் சரித்திர தொடர்... ராதிகா நேரத்தை கைப்பற்றினார்

சன் டிவியில் குஷ்பு தயாரிக்கும் சரித்திர தொடர்... ராதிகா நேரத்தை கைப்பற்றினார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை குஷ்பு சன் டிவிக்காக சரித்திர தொடர் ஒன்றை தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

90 களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த குஷ்புவிற்கு கோவிலே கட்டினார்கள். சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடித்த குஷ்பு ஒரு கட்டத்தில் லிவிங்ஸ்டன், பாண்டிராஜன் போன்ற நடிகர்களுடன் கூட ஜோடி சேரும் அளவிற்கு மார்க்கெட் டல் அடித்தது.

உடனே சின்னத்திரை பக்கம் தனது கவனத்தை திருப்பினார் சுந்தர் கே. விஜயன் இயக்கிய குங்குமம் சீரியல் மூலம் சன் டிவியில் அறிமுகமானார். சீரியல் ஹிட் அடிக்க, மருமகள், கல்கி என பல சேனல்களில் ஓளிபரப்பான சீரியல்களில் நடித்தார் குஷ்பு.

ஜாக்பாட் ஜாக்கெட்

ஜாக்பாட் ஜாக்கெட்

ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்தினார் குஷ்பு. அவரது தமிழ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்தியது. நிகழ்ச்சிக்காக குஷ்பு அணிந்து வந்த ஜாக்கெட் பிரபலமானது.

கலைஞர் டிவி

கலைஞர் டிவி

திமுகவில் குஷ்பு இணைந்த உடன் ஜெயா டிவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கலைஞர் டிவியில் நடன நிகழ்ச்சியில் நடுவரானார். அங்கே பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற சீரியலை தயாரித்து நடித்தார். குஷ்பூ நடித்த சீரியல்களுக்கும் நேயர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.

மாறிய காட்சிகள்

மாறிய காட்சிகள்

திமுகவில் இருந்து விலகிய குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கலைஞர் டிவியில் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகளையும் அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டார். பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற சீரியலையும் பாதியோடு முடித்தார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகள்

ரியாலிட்டி நிகழ்ச்சிகள்

சிம்ப்ளி குஷ்பூ, நினைத்தாலே இனிக்கும், நம்ம வீட்டு மகாலட்சுமி, போன்ற நிகழ்ச்சிகளில் சில சேனல்களுக்காக தொகுத்து வழங்கினார். இப்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் நடுவராக வந்து மார்க் போடுகிறார்.

சன் டிவிக்கு சரித்திர தொடர்

சன் டிவிக்கு சரித்திர தொடர்

அடுத்தபடியாக அவர் ஒரு சரித்திர தொடரை சன் டிவிக்காக தயாரிக்கப்போகிறாராம். அதுவும் இவரது தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகப் போகிறதாம். டல் அடிக்கும் சீரியல்களை எடுத்துவிட்டு புதிய சீரியல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது சன் டிவி.

ராதிகாவிற்கு போட்டி

ராதிகாவிற்கு போட்டி

சன் டிவியில் 20 ஆண்டுகாலமாக ராதிகாவிற்கு இரவு 9.30 மணி ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி மாறினாலும் அவர் சேனல் மாறவில்லை. முக்கிய அங்கம் வகித்து வருபவரான ராதிகா தற்போது வாணி ராணி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அப்போ ராதிகா?

அப்போ ராதிகா?

ராதிகாவுக்கு கொடுக்கப்பட்டு வந்த நேரத்தில், குஷ்புவின் தொடரை ஒளிபரப்பு செய்து கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாம். ராதிகாவின் ராடான் நிறுவனம் இனி ஜெயா டிவிக்கு சீரியல் தயாரிக்குமோ?

English summary
Kushboo will produce new historic and epic serial for Sun TV in night 9.30 PM
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil