»   »  ரொம்ப பிஸி ஆனாலும் விஜய் டிவிக்கு சீரியல் தயாரிக்கும் குஷ்பு!

ரொம்ப பிஸி ஆனாலும் விஜய் டிவிக்கு சீரியல் தயாரிக்கும் குஷ்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரசியலில் பிஸியாக இருந்தாலும் விஜய் டிவிக்காக சீரியஸாக சீரியல் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறார் குஷ்பு.

சின்னத்திரையில் ஜெயா டி.வியில் ஒளிபரப்பான ஜாக்பாட் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் குஷ்பு. அதையடுத்து, விஜய் டி.வியில் மருமகள் சீரியலில் நடிகையாக பிரவேசித்தார். பின்னர் ஜனனி, குங்குமம், கல்கி போன்ற தொடர்களிலும் நடித்தார்.

ராதிகா, தேவயானி நடித்த சீரியல்களைப் போன்று குஷ்பூ நடித்த சீரியல்களுக்கும் நேயர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.

ஆனால், சினிமா தயாரிப்பிலும் குஷ்பூவின் கவனம் இருப்பதால், அவரால் சீரியல்களில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை.

பார்த்த ஞாபகம் இல்லையோ

பார்த்த ஞாபகம் இல்லையோ

ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின்னர் கலைஞர் டிவியில் பார்த்த ஞாபகம் இல்லையோ தொடரை தயாரித்து நடித்தார் குஷ்பு.

கலைஞருக்கு டாட்டா

கலைஞருக்கு டாட்டா

திமுகவில் இருந்து விலகிய பின்னர் அந்த சீரியலையும் அவசரம் அவசரமாக முடித்துவிட்டு கலைஞர் டிவிக்கு மங்களம் பாடினார்.

நம்ம வீட்டு மகாலட்சுமி

நம்ம வீட்டு மகாலட்சுமி

ஜீ தமிழ் டிவியில் நம்ம வீட்டு மகாலட்சுமி கேம் ஷோவை கலக்கலாக தொகுத்து வழங்கினார்.

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

வேந்தர் டிவியில் நினைத்தாலே இனிக்கும் பிரபலங்களுடன் ஜாலியாக கலந்துரையாடுகிறார் குஷ்பு.

டிவி தொடர் தயாரிப்பு

டிவி தொடர் தயாரிப்பு

கிரி, ரெண்டு, கலகலப்பு, நகரம் மறுபக்கம், தீயா வேலை செய்யனும் குமாரு போன்ற படங்களை தயாரித்துள்ள குஷ்புவுக்கு தற்போது, விஜய் டி.வியில் ஒரு நெடுந்தொடர் தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

நடிகர் – நடிகையர் யார்

நடிகர் – நடிகையர் யார்

தன்னை சின்னத்திரையில் முதன்முதலாக நடிக்க வைத்த விஜய் டி.விக்காக அவர் தற்போது ஒரு மெகா தொடர் தயாரிக்கிறார். அதற்கான கதை வசனம் எழுதும் வேலைகள் நடந்து கொண்டிருக்க, நடிகர்-நடிகைகள் தேர்வு செய்யத் தொடங்கியிருக்கிறார் குஷ்பு.

அரசியலில் பிஸி

அரசியலில் பிஸி

திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு பிஸியாகிவிட்டார் குஷ்பு. அரசியல் வேலைகளில் தீவிரமாக இருந்தாலும் சீரியல் தயாரிப்பது உறுதி என்கின்றனர். ஆனால் இந்த சீரியலில் குஷ்பு நடிக்க மாட்டாராம்.

English summary
Kushboo Sundar's Avni Tele Media is all set to present a new serial for Vijay TV
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil