twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விளம்பரங்களுக்கும் கத்திரி போட வேண்டும்- குஷ்பு கருத்து!

    By Mayura Akilan
    |

    சின்னத்திரைகளில் நள்ளிரவு 11 மணிக்கு மேல் ஒளிபரப்ப வேண்டிய விளம்பரங்களை காலை நேரத்திலேயே ஒளிபரப்புகின்றனர் எனவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு கண்டிப்பாக சென்சார் தேவை என்கிறார் நடிகை குஷ்பு.

    கலைஞர் டிவியில் பார்த்த ஞாபகம் இல்லையோ.... டான்ஸ் ஷோ நடுவர்... தந்தி டிவியில் அச்சம் தவிர்... என அசத்தல் நிகழ்ச்சிகளை நடத்திவரும் குஷ்பு திருமணமான நடிகைகளுக்கு சின்னத்திரைதான் வசதி என்கிறார்.

    சினிமாவை விட பெரிய மீடியம் சின்னத்திரைதான் என்கிறார். காரணம் பிரேக்கிங் நியூஸ் வருவது டிவியில்தான் என்றும் கூறியுள்ளார்.

    வளரும் டிவி

    வளரும் டிவி

    சினிமா என்பது உலக அளவில் பெரிய விசயமாக இருந்தாலும் டிவி என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

    டி.ஆர்.பி ரேட்டிங்

    டி.ஆர்.பி ரேட்டிங்

    டிவியை பொருத்தவரை டி.ஆர்.பி முக்கியம். ஒரு சீரியலில் ஒருநாள் அந்த ரேட்டிங் குறைந்தாலும் சேனலில் இருந்து போன் வரும். நிமிடத்திற்கு நிமிடம் பார்க்கிறார்கள்.

    எல்லாம் சூழ்நிலைதான்

    எல்லாம் சூழ்நிலைதான்

    சினிமாவில் ஆண்கள் வில்லன்களாகவும், சின்னத்திரையில் பெண்களை வில்லிகளாகவும் சித்தரிக்க சூழ்நிலைதான் காரணமாக இருக்கிறது.

    மக்கள் பார்க்கிறார்கள்

    மக்கள் பார்க்கிறார்கள்

    டிவியில் பெண்களை வில்லியாகவும், மோசமானவர்களாகவும் காட்டுவதைத்தான் மக்கள் பார்க்கிறார்கள். டி.ஆர்.பி ஏறுகிறது. மக்கள் எப்போ அந்த காட்சிகளை பார்க்க மறுக்கின்றார்களோ நாங்கள் அப்போ நிறுத்திவிடுவோம்.

    சென்சார் தேவை

    சென்சார் தேவை

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு சென்சார் தேவை. அதேபோல விளம்பரங்களுக்கும் சென்சார் தேவை. சிறுவர்கள் அதிகமாக பார்க்கும் கிரிக்கெட் போட்டிகளின் இடையே ஒளிபரப்பாகும் விளம்பரங்கள்தான் மோசமாக இருக்கிறது.

    English summary
    Actress Kushboo has said that censorship should be implemented to the TV ads too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X