twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவை கண்டுக்கல...சர்வைவர் டீம் மீது குற்றச்சாட்டை அடுக்கிய லேடி காஷ்

    |

    சென்னை : ஜீ தமிழ் சேனலில் சர்வைவர் என்ற சாகச நிகழ்ச்சிக்கான ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 12 ம் தேதி நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் வழி நடத்தி வருகிறார். இந்த போட்டியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இதன் ஷுட்டிங் தென்னாப்பிரிக்காவில் உள்ள தீவு ஒன்றில் நடத்தப்பட்டு வருகிறது. கிட்டதட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் போட்டியாளர்கள் 90 நாட்கள் இந்த தீவில் வசிக்க வேண்டும். உடல் மற்றும் மனவலிமையை சோதிக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது.

    டாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்!டாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்!

    வெளியேறிய லேடி காஷ்

    வெளியேறிய லேடி காஷ்

    ஒரு குறிப்பிட்ட நாள் இடைவெளியில் எவிக்ஷன் நடைபெறும். இதில் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கர், சிருஷ்டி டாங்கே போன்றோர் எலிமினேட் செய்யபப்ட்டு, வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது பாடகியும் பாடலாசிரியருமான லேடி காஷ் தானாகவே போட்டியில் இருந்து விலகி உள்ளார். அதோடு, கோவிட் அறிகுறிகளை சர்வைவர் நிகழ்ச்சி நடத்துபவர்கள் கண்டு கொள்ளவில்லை என கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். இவர் எந்திரன், கபாலி, எங்கேயும் காதல் போன்ற படங்களில் பாடி உள்ளார்.

     உடல்நிலை பாதிப்பு

    உடல்நிலை பாதிப்பு

    போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு யூட்யூப் சேனலில் பேசி உள்ள லேடி காஷ், அது பற்றி விரிவாக சோஷியல் மீடியா பக்கத்திலும் எழுதி உள்ளார். அவரின் மிக நீண்ட பதிவில், மூன்று போட்டியாளர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். செப்டம்பர் 24 ம் தேதி தான்சானியாவில் அவர்களுக்கு கோவிட் பாசிடிவ்வாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து பலருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது.

     கொரோனா அறிகுறி

    கொரோனா அறிகுறி

    கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போதும் கொரோனா டெஸ்ட் எடுக்க நிகழ்ச்சி நடத்துபவர்கள் முன்வரவில்லை. Zanzibar தீவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இருந்தாலும் அவர் டெஸ்ட் எடுக்க தயாராக இல்லை. அர்ஜுன் கேட்டுக் கொண்ட பிறகே டெஸ்ட் எடுக்கப்பட்டது. எனக்கு நெகட்டிவ் என வந்தது. ஆனால் எனக்கு அனைத்து கொரோனா அறிகுறிகளும் இருந்தது. எழுந்து நிற்க கூட முடியவில்லை என்னால்.

    போட்டியாளர்களுக்கு கொரோனா

    போட்டியாளர்களுக்கு கொரோனா

    எங்கள் உடல் நிலை மற்றும் உயிர் பற்றி கவலை ஏற்பட்டதால், மிகவும் கெஞ்சி கேட்டதால், மூன்று நாட்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பெரும்பாலான சமயங்களில் நாங்கள் தனிமையில் தான் இருந்துள்ளோம். அது எங்களின் உடல்நிலை மற்றும் மனநிலையை மிகவும் பாதித்தது. செப்டம்பர் 27 ம் தேதி தான் சொன்னார்கள் டெஸ்ட் எடுக்கப்பட்டவர்களில் மூன்று பேருக்கு பாசிட்டிவ். மற்றவர்களுக்கு நெகடிவ் என வந்து விட்டதால் அவர்கள் தொடர்ந்து விளையாட்டில் பங்கேற்கலாம் என்று.

    ஓய்வெடுக்க அனுமதி மறுப்பு

    ஓய்வெடுக்க அனுமதி மறுப்பு

    மீண்டும் என்னால் விளையாட முடியாமல் போனதால் ஓய்வு எடுத்துக் கொண்டு, பிறகு மீண்டும் விளையாட்டில் பங்கேற்பதாக நானும் எனது மேனேஜரும் போட்டி நடத்துபவர்களிடம் கேட்டோம். எனக்கு கொரோனா பாசிடிவ் இல்லை என்பதை காரணமாக கூறி போட்டி நடத்துபவர்கள் ஓய்வெடுக்க அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். ஆனால் அப்போதும் எனக்கு அனைத்து அறிகுறிகளும் இருந்தது.

    யாரும் கண்டுக்கல

    யாரும் கண்டுக்கல

    அதனால் உடனடியாக போட்டியில் இருந்து வெளியேறி, வீட்டிற்கு வர முடிவு செய்தேன். 48 நாட்களாக போட்டியில் பங்கேற்று 8 வது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளேன். உயிருக்கு ஆபத்தான நோய் தொற்று, எனது தலையில் ஏற்பட்ட காயம் என எதையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. தலையில் ஏற்பட்ட காயத்தில் மருத்துவ பரிசோதனை கூட செய்யப்படவில்லை. எனது இடது காலை பாதி நாள் வரை என்னால் அசைக்க முடியவில்லை.

    கனத்த இதயத்துடன் திரும்பினேன்

    கனத்த இதயத்துடன் திரும்பினேன்

    ஓய்வு எடுத்துக் கொண்டு, சரியான பிறகு போட்டியில் தொடர்வதாக தான் கூறினேன். மிகுந்த கனத்த இதயத்துடன், ஏமாற்றமான மனநிலையுடன் தான் எனது விளையாட்டு பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டேன். என்னால் என் குடும்பத்தினருடன் கூட பேச முடியவில்லை. எனது உடல்நிலை, மனநிலை மற்றும் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு தான் நான் சென்னை திரும்பி விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

    செலவை கூட ஏற்கவில்லை

    செலவை கூட ஏற்கவில்லை

    நான் திரும்பி வந்த செலவை கூட போட்டி நடத்துபவர்கள் ஏற்கவில்லை. எனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிறைய பணம் வீணடிக்கப்பட்டதால் சில நாட்கள் போட்டியை நிறுத்திக் கூட வைத்திருந்தனர். கொரோனா தொற்று காலத்தில் நாங்கள் எங்கள் உயிர் பற்றி கவலைப்படுகிறோம். ஆனால் போட்டி நடத்துபவர்களின் ஒரே கவலை பணம் பற்றி தான். மீதமுள்ள 20 எபிசோட்களை குறுகிய காலத்திற்குள் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    டிவி சேனலும் பேசவில்லை

    டிவி சேனலும் பேசவில்லை

    மீண்டும் போட்டியில் இணைய ஏதாவது வழி இருக்கிறதா என பேசி பார்த்தோம். ஆனால் அது போட்டி விதிகளுக்கு புறம்பானது என கூறி விட்டார்கள். நான் போட்டியை தொடரவே விரும்புகிறேன். ஆனால் அவர்கள் அதற்கு வாய்ப்பே இல்லை என மறுத்து விட்டனர். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சேனலை தொடர்பு கொண்ட போது, இது பற்றி தாங்கள் இப்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது என கூறி விட்டனர் என்றார்.

    English summary
    after quiting from survivor program lady kash penned long shocking statement against organisers. she told that organisers didn't care about contestants health. they not even ready to take covid test for contestants.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X