Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் வந்த லட்சுமி அம்மா... என்ன நடந்தது ?
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம், அண்ணன் - தம்பி பாசத்துடன் வழக்கமான சீரியல்களில் வரும் ஆள்கடத்தல், போலீஸ், வில்லிகளின் சதி வேலைகள் போன்றவை இல்லாமல் யதார்த்தமாக குடும்ப சூழலை மையமாக சொல்வதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்.
Recommended Video
சென்னையில் ஒரு சாலைக்கு நடிகர் நாகேஷின் பெயரைச் சூட்ட வேண்டும்... நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை!
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் - நடிகைகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களில் மிக சரியாக பொருந்தி நடிப்பதும் இந்த சீரியலுக்கு மற்றுமொரு ப்ளஸ். அனைவரும் கேரக்டர்களாகவே ரசிகர்களின் மனதில் பதிந்து, தங்களுக்கென பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளனர்.

லட்சுமி அம்மாவின் இறப்பு
கலகலப்பாக சென்று கொண்டிருந்த சீரியலில், கடைசி தம்பியான கண்ணனின் திருமணத்திற்கு பிறகு மொத்தமாக கதையே மாறி விட்டது. ஐஸ்வர்யாவை திருமணம் செய்யும் கண்ணன், வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார். கண்ணனை நினைத்து உடல்நிலை சரியில்லாமல் போகும் லட்சுமி அம்மா, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் திடீரென உயிரிழக்கிறார்.

எகிறிய ரேட்டிங்
அதற்கு பிறகு கடந்த 10 நாட்களாக ஒரே அழுகை காட்சிகள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில். லட்சுமி அம்மாவை நினைத்து அழுகும் குடும்ப உறவுகள், அம்மா முகத்தை கடைசியாக பார்க்க முடியாததால் அழுது தவிக்கும் கண்ணன், நிஜத்தில் நடப்பதை போல் அனைத்து சடங்குகளும் நடத்தப்படுவது என டிஆர்பி ரேட்டிங் எங்கோ சென்றது. சோஷியல் மீடியாவில் பலர் கண்ணனுக்கு ஆதரவாகவும், பலர் கண்ணனுக்கு எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கண்ணனை சந்தித்த லட்சுமி அம்மா
இதற்கிடையில் சீரியலுக்காக நிஜமாகவே மொட்டை அடித்துக் கொண்டுள்ளார் கண்ணன். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் லட்சுமி அம்மா கேரக்டரில் நடித்த நடிகை ஷீலா. இவர்கள் சந்திப்பு ஃபோட்டோக்கள் இணையத்தில் செம வைரலாகின. லட்சுமி அம்மா கேரக்டர் திடீரென மரணமடைந்ததாக காட்டப்பட்டதால் ரசிகர்கள் பலர் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த வார ப்ரோமோ
இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், மூர்த்தியின் கோபத்தால் சாப்பிடாமல் எழுந்து சென்ற கண்ணனுக்கு, கடைசியல் வேலை செய்யும் சரவணனிடம் யாருக்கும் தெரியாமல் சாப்பாடு கொடுத்து அனுப்புகிறாள் தனம். இதை மூர்த்தி கவனித்து விடுகிறார். அதே சமயம் வீட்டில், அண்ணன் தன்னை ஏற்காததை ஐஸ்வர்யாவிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறான் கண்ணன். அப்போது அண்ணி கொடுத்து விட்டதாக சரணவன் சாப்பாடு கொண்டு வந்து தருகிறான். அதோடு கண்ணனுக்கு ஆறுதலும் சொல்கிறான்.

மீண்டும் வந்த லட்சுமி அம்மா
கண்ணனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டதை பற்றி தனத்திடம் கேட்கிறார் மூர்த்தி. அவன் பாவம் என கண்ணனுக்கு ஆதரவாக பேசுகிறாள் தனம். பேசி விட்டு தூங்கும் தனத்தின் கனவில் லட்சுமி அம்மா வருகிறார். தலை நிறைய மல்லிகை பூ, பொட்டு என மங்களகரமாக வீட்டிற்குள் வரும் லட்சுமி அம்மா, நான் எங்கும் போகவில்லை. உங்களுடன் தான் இருக்கிறேன் என தனத்திடம் சொல்கிறார். இதைக் கேட்டு தனம் அழுது கொண்டிருப்பதாக ப்ரோமோ முடிகிறது.

இன்னும் இருக்கா சோக காட்சி
இறந்து போனதாக வரும் காட்சிகளுடன் லட்சுமி அம்மா கேரக்டருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தனத்தின் கனவில் வருவது போல் நடிகை ஷீலா நடிக்கும் காட்சிகள் மீண்டும் இடம்பெற்றுள்ளன. இதனை ரசிகர்கள் வரவேற்றாலும், ஏற்கனவே 10 நாள் எபிசோட்டை துக்க காட்சிகளிலேயே கொண்டு சென்றீர்கள். அடுத்த 10 நாள் எபிசோட்டையும் தனம் கனவு காண்பதிலேயே ஓட்டி விடுவீர்களா என பலர் கேள்வி கேட்டுள்ளனர்.