For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹாட்ரிக் வெற்றி பெற்ற வேடர்கள்.. லட்சுமி ப்ரியா மூளையோ மூளை என கொண்டாடும் ஃபேன்ஸ்!

  |

  சென்னை: சர்வைவர் தமிழ் 11வது எபிசோடில் நடந்த போட்டியில் மீண்டும் வேடர்கள் அணியினர் வெற்றிப் பெற்று சூப்பரான பரிசை தட்டிச் சென்றனர்.

  கஷ்டப்பட்டு போராடினாலும் காடர்களால் இந்த முறையும் வெற்றியை பெற முடியாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றமாகவே மாறியது.

  டேய் நண்பா… நிஜமாவே வேற லெவல்ல பண்ணி இருக்க…பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை புகழ்ந்த தீபிகா!டேய் நண்பா… நிஜமாவே வேற லெவல்ல பண்ணி இருக்க…பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை புகழ்ந்த தீபிகா!

  கடைசி நேரத்தில் லட்சுமி ப்ரியா தனது மூளை பயன்படுத்தியதே வேடர்கள் மீண்டும் வெற்றி பெற உதவியது என ரசிகர்கள் லட்சுமி ப்ரியாவை கொண்டாடி வருகின்றனர்.

  வேடர்களின் தலைவி

  வேடர்களின் தலைவி

  சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் வேடர்களின் தலைவியாக முதல் வாரம் பதவி வகித்த லட்சுமி ப்ரியா இரண்டாவது வாரத்திலும் தனது தலைமை பண்பை நிரூபித்து வருகிறார். என்ன தான் அம்ஜத் கான் அந்த அணியின் கேப்டனாக இருந்தாலும், நேற்றைய வெற்றிக்கு முழு காரணம் லட்சுமி ப்ரியா தான் என அந்த அணியினரே ஒப்புக் கொண்டது வேற லெவல்.

  ஆரம்பத்தில் அசத்தல்

  ஆரம்பத்தில் அசத்தல்

  காடர்கள் அணியின் புதிய தலைவியாக பொறுப்பேற்ற விஜயலட்சுமி அணிக்கு நிறைய லவ் கலந்து அளித்த உணவு போட்டியின் போது நல்லாவே வேலை செய்தது. இதுவரை திறமையாக விளையாடாத ராம் எல்லாம் தாவிக் குதித்து நல்லாவே விளையாடினார். ஆரம்பம் முதலே அசத்தலாக சென்ற காடர்கள் அணி கடைசியில் கோட்டை விட்டது.

  சர்வைலன்ஸ் கேமரா

  சர்வைலன்ஸ் கேமரா

  சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் சர்வைலன்ஸ் கேமராவாகவே சரண் மாறி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கேம் ஃபயர் கேமிலும் எதிர் அணி நேரடியாக கயிற்றுக்கு நெருப்பு வைத்ததை கண்டுபிடித்த சரண், நேற்றைய போட்டியில் வேடர்கள் அணி செய்யும் ஒவ்வொரு தப்பையும் சுட்டிக் காட்டிக் கொண்டே தனது வேலையை பார்த்து வந்தார்.

  சொதப்பிய ஐஸ்

  சொதப்பிய ஐஸ்

  தான் ஒரு ஸ்போர்ட்ஸ் உமன் என்பதால் அனைத்திலும் முதல் ஆளாக செல்ல வேண்டும் என முனைப்பு காட்டி வந்த ஐஸ்வர்யா கிருஷ்ணன் கயிற்றில் தொங்கி மணி அடிக்கும் டாஸ்க்கில் நீண்ட நேரத்தை எடுத்ததே வேடர்கள் அணி ஆரம்பத்தில் சொதப்ப காரணமாக அமைந்தது.

  Recommended Video

  Survivor Aishwarya Krishnan Biography | Personal Trainer, Rowing Champion
  வெறும் வாய் மட்டும் தான்

  வெறும் வாய் மட்டும் தான்

  என்ன கேப்டன் ஆக்க வேண்டும், ரவி வேண்டாம் நான் விளையாடணும்னு நினைச்ச பார்வதியால் மற்றவர்கள் தாண்டி கடந்த மரப்பாலத்தை தாண்ட முடியாமல் கடைசி வரை திணறியது ரசிகர்களை கடுப்பாக்கியது. உங்களுக்கு வெறும் வாய் மட்டும் தான் வேலை செய்யுது என கலாய்த்து வருகின்றனர்.

  புத்திசாலி

  புத்திசாலி

  ஆரம்பத்தில் காடர்கள் வெறி கொண்டு அனைத்திலும் அசத்தி முன்னேறினாலும், கடைசியாக வேடர்கள் இந்த புதிர் போட்டியில் வெல்ல உதவியாக இருந்தது லட்சுமி ப்ரியா மட்டுமே. அவரது புத்திசாலித் தனம் தான் அந்த புதிர் பெட்டிகளை சரியாக அடுக்கி வைத்து தனது அணிக்கு ஹாட்ரிக் வெற்றியை பெற்று தர முடிந்தது.

  மூளையோ மூளை

  மூளையோ மூளை

  லட்சுமி ப்ரியாவால் மீண்டும் வெற்றியை இழந்த காடர்கள் அணியினர் பயங்கர கடுப்பான நிலையில், ரசிகர்களோ லட்சுமி ப்ரியாவை மூளையோ மூளை என கமெண்ட்டுகள் போட்டு கொண்டாடி வருகின்றனர். அணியாக பார்க்கும் போது காடர்கள் அணியை விட வேடர்கள் அணியினர் பலரும் திறமையானவர்களாகவே உள்ளார்கள் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  பார்வதி வேணாம்

  பார்வதி வேணாம்

  இந்த வாரமே விஜே பார்வதியை எலிமினேட் செய்து வெளியேற்றி விடுங்கள். வேடர்கள் அணிக்கு இருக்கும் ஒரே பலவீனம் அவர் மட்டுமே என்று ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து பார்வதியை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

  நம்ப முடியலையே

  நம்ப முடியலையே

  உணவு இன்றி அவதிப்படுவதாக அர்ஜுன் கேட்க கேட்க புலம்பும் சர்வைவர்கள் போட்டியில் காட்டும் வேகத்தை பார்த்தால் இவங்களாம் சோத்துக்கு செத்தவங்க மாதிரி தெரியலையே.. எல்லாரும் நல்லா ஃபிரஷ்ஷா ஹெல்தியா தானே இருக்காங்க.. அந்த மசாலா பொருளுக்கா இப்படி ஒரு போட்டி என்று ரசிகர்கள் நிகழ்ச்சியின் ரியாலிட்டி தன்மை மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

  English summary
  Actress Lakshmi Priya again helps Vedargal team for their Hatrick victory in Suruvivor Tamil latest episode. Kaadargal team this time put a tough fight but unfortunately they lose the game.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X