»   »  லட்சுமி ராமகிருஷ்ணன், ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு 4 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு

லட்சுமி ராமகிருஷ்ணன், ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு 4 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் கதையல்ல நிஜம் தொடங்கி இன்றைய சன்டிவியில் நிஜங்கள் வரை குடும்ப பஞ்சாயத்துக்களைப் பேச வந்து விட்டனர் பிரபல நடிகைகள். லட்சுமி ஆரம்பித்து வைத்த இந்த குடும்ப பஞ்சாயத்து, ஜீ டிவியில் நிர்மலா பெரியசாமியிடம் வந்தது. லட்சுமி ராமகிருஷ்ணன், கேப்டன் டிவியில் குட்டி பத்மினி, ஜெமினி டிவியில் ரோஜா, புதுயுகம் சேனலில் விஜி சந்திரசேகர் என பயணப்பட்டு இப்போது சன்டிவியில் நிஜங்களாக வந்து நிற்கிறது.

எல்லாமே நடுத்தர மக்களின் குடும்ப பஞ்சாயத்துக்கள்தான். விஜி சந்திரசேகர் பிரிந்து போன உறவை சேர்த்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார். மக்களின் கண்ணீர்தான் இங்கே காசு ஆகிறது. அதிகம் ஆழுதால், சண்டை போட்டால் டிஆர்பி எகிறுகிறது.

ஒருகொலை கண்டு பிடிக்க உதவிய இதுபோன்ற பஞ்சாயத்துதான், ஒரு தற்கொலைக்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன், 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா'என்று அவர் சொல்லி சொல்லி அந்த வசனத்தை பிரபலப்படுத்தினார். அதுவே பாடலாக , காமெடியாக, வசனமாக என்று எல்லோரும் பயன்படுத்தி ட்ரெண்டானது. ஒரு கட்டத்தில், இந்த டயலாக்கை வைத்து நம்மை கலாய்க்கிறார்கள் என்று கேஸ் போட்டுடுவேன் என்று சொன்னார்.

ரோஜாவின் ரக்ஷா பந்தன்

ரோஜாவின் ரக்ஷா பந்தன்

தெலுங்கில் ரக்ஷா பந்தன் என்ற நிகழ்ச்சி தெலுங்கு சேனலான ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகை ரோஜா தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொருவரும் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் பேசி அவர்களுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி தான் இந்த ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி.

குஷ்பு நிஜங்கள்

குஷ்பு நிஜங்கள்

இந்நிகழ்ச்சியைப் போன்றே சன்டிவியில் நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். இதனை நடிகை குஷ்பு தொகுத்து வழங்குகிறார். சன் டிவியில் தினமும் 12.30 மணிமுதல் 1.30 மணிவரை ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் தேர்வும், படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போது முன்னோட்டம் போடும் சன்டிவி விரையில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.

பிரிக்குமா? இணைக்குமா?

பிரிக்குமா? இணைக்குமா?

புதுயுகத்தில் விஜி சந்திரசேகர் நடத்தும் நிகழ்ச்சியான 'உறவைத் தேடி' பிரிந்த குடும்ப உறவுகளை இணைக்கும் நிகழ்ச்சி என்கின்றனர். குஷ்புவின் நிஜங்கள் நிகழ்ச்சி குடும்பத்தை பிரிக்கப் போகிறதா? இணைக்கப் போகிறதா? போகப் போகத் தெரியும்.

English summary
Kushboo new avathar in Sun TV reality show in Nijangal. This is the same concept Lakshmi Ramakrishnan's Solvathellam Unmai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil