»   »  ரியாலிட்டி ஷோக்களில் சொல்வதெல்லாம் உண்மைதானா?- லட்சுமி ராமகிருஷ்ணன்

ரியாலிட்டி ஷோக்களில் சொல்வதெல்லாம் உண்மைதானா?- லட்சுமி ராமகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரியாலிட்டி ஷோக்கள் என்று நம்பி பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கே செய்வதெல்லாம் உண்மைதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.

மிகுந்த விளம்பரம் மற்றும் பிரமாண்டத்துடன் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோ விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்.

பெரும்பாலும் சர்ச்சைகளின்றி இந்த ஷோக்கள் முடிந்ததில்லை. இந்த ஆண்டு ஷோவிலும் பெரும் சர்ச்சை.

Lakshmi Ramakrishnan's comments on Super singer show

புதியவர்களுக்கான போட்டி இது என்ற தோற்றத்துடன் நடக்கும் இதில், இந்த முறை 10 படங்களுக்கும் மேல் பிண்ணனி பாடிய ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்ற கேரள இளைஞருக்கு முதல் பரிசு தருவதாக விஜய் டிவி அறிவித்தது.

இந்த அரவிந்தாக்ஷன் யார்.. அவர் பின்னணி என்ன என்று எந்த கட்டத்திலும் அறிவிக்கவே இல்லை விஜய் டிவி. இது திட்டமிட்ட மோசடி என பலரும் குற்றம்சாட்டிய நிலையில், மோசடி எதுவும் நடக்க வில்லை என்று விஜய் டிவி ஒரு விளக்கம் அளித்தது.

ஆனாலும் எதிர்ப்புகள் அடங்கியபாடில்லை.

பிரபல நடிகையும் இயக்குநரும் ரியாலிட்டி ஷோ நடத்துவதில் பரபரப்பு கிளப்பியவருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

தான் இயக்கிய முதல் படமான ஆரோகணத்தில் அரவிந்தாக்ஷனுக்கு பின்னணி பாடும் வாய்ப்பைத் தந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அரவிந்தாக்ஷன் விஜய்டிவியின் முதல் பரிசை வாங்கியது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன நினைக்கிறார்?

"ஆனந்த் அரவிந்தக்‌ஷன் ரொம்ப திறமையானவர்தான். ஆனால் இந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானதுன்னு தெரியமாமல் அவருக்கு முதலில் வாழ்த்துச் சொல்லிவிட்டேன். இப்ப அவரை பத்தின செய்திகள் வருவதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருக்கு. இதெல்லாம் விஜய் டிவிக்கு தெரியாம நடந்திருக்காதுனு நான் நினைக்குறேன்.

விஜய் டிவி இப்போ சொல்லும் விளக்கங்கள் ஏற்கும்படி இல்லை. இதில் பங்கேற்ற எத்தனை போட்டியாளர்கள் இப்ப பாதிக்கப்பட்டிருப்பாங்க?

வெளிநாட்டில் நடந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்திருக்கேன். ஆனால் அங்கே என்னோடு போட்டியிட்டு ஒரு செஃப் வெற்றிப் பெற்றார். இதை நான் அப்பவே கண்டிச்சேன். இது போல நிறைய நிகழ்ச்சிகள் உதாரணம் சொல்லலாம். புதியவர்களுடன் அனுபவஸ்தர்கள் போட்டி போடும்போது புதியவர்கள் பாதிப்பார்கள்தானே...

ரியாலிட்டி ஷோக்கள் என்று நம்பி பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கே செய்வதெல்லாம் உண்மைதானா?"

English summary
Actress - Director Lakshmi Ramakrishnan condemned the way Vijay TV hiding the truth about Super Singer winner Anand Aravindakshan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil