»   »  உயிரோடு வந்த லட்சுமி... திடீர் திருப்பம்... : ஜீ தமிழ் லட்சுமி வந்தாச்சு சீரியல்

உயிரோடு வந்த லட்சுமி... திடீர் திருப்பம்... : ஜீ தமிழ் லட்சுமி வந்தாச்சு சீரியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டாமை நாச்சிமுத்துவின் இரண்டாவது மருமகள் லட்சுமி. இந்த லட்சுமி வந்த பின்னர்தான் நாட்டாமை வீட்டில் நல்லது நடந்தது. அனைத்து மகன்களுக்கும் திருமணம் நடந்தது. மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மனைவி வள்ளியம்மையின் நினைவு திரும்பியது.

பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் தனது கணவனின் அண்ணன் குழந்தையை தன்னிடம் வைத்துக்கொண்டு, தன் குழந்தையை மாற்றிக்கொடுத்து வளர்த்து வருகிறாள் லட்சுமி.

ஊனமான குழந்தையை பார்க்காமல் இருந்த லட்சுமியின் கணவன் வெற்றி இப்போது குழந்தையை பாசத்துடன் கவனித்து வருகிறான். யாராவது ஒரு வில்லியோ வில்லனோ வந்து லட்சுமிக்கு இடைஞ்சல் தருகின்றனர். 450 எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகிவரும் லட்சுமி வந்தாச்சு சீரியல் இனிவரும் வாரங்களில் திடீர் திருப்பங்களை காணலாம்.

மும்பை வில்லி

மும்பை வில்லி

மும்பையிலிருந்து வந்திருக்கும் வள்ளியம்மையின் தம்பி மகளாகிய மதுமிதாவின் சூழ்ச்சியால், வெற்றியும், லட்சுமியும் நாச்சிமுத்துவின் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இறந்து போன லட்சுமி

இறந்து போன லட்சுமி

லட்சுமியின் மகனுக்கு காய்ச்சல் ஏற்பட, அவனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு லட்சுமி விரைகிறாள். பின் வீடு திரும்பும் லட்சுமிக்கும் காய்ச்சல் வந்துவிட, இதைக் கண்டு நடுங்கும் வெற்றி, அவளை எவ்வளவு அழைத்தும் மருத்துவமனைக்கு வராததால், லட்சுமியின் உயிர் பிரிகிறது. இது வெற்றிக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சிதான்.

விஷம் குடிக்கும் வெற்றி

விஷம் குடிக்கும் வெற்றி

லட்சுமியின் இறப்பு வீட்டில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. லட்சுமியின் கணவன் வெற்றியும், மகனும் லட்சுமியின் நினைவாகவே இருக்கின்றனர். விஷம் குடிக்கவும் முயற்சி செய்கின்றனர். ஆவியாக வந்த லட்சுமி அனுவை எழுப்பிவிட்டு இருவரையும் காப்பாற்ற சொல்கிறாள்.

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

லட்சுமி இல்லாத அந்த வீட்டில் தானும் இருக்க விருப்பமில்லாமல் வெற்றி, தன் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறான். அச்சமயம் ஒரு கான்ஸ்டபிள், வெற்றி மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் இன்ஸ்பெக்டர் அழைக்கிறார் என்று கூறி அழைத்துச் செல்கிறார்.

திரும்ப வந்த லட்சுமி

திரும்ப வந்த லட்சுமி

காவல்நிலையத்தில் ஆச்சரியம் காத்திருக்கிறது. உங்கள் இரண்டாவது மருமகள் என்று கூறிக் கொண்டு ஒருத்தி வந்திருக்கிறாள் என்று இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணை காட்ட, லட்சுமியின் உருவம் கொண்ட அவளை பார்த்து அனைவரும் வியப்படைகின்றனர்.

விடை கிடைக்குமா?

விடை கிடைக்குமா?

இவள் என் லட்சுமியாக இருக்க முடியாது என்று வெற்றி உறுதியாகக் கூற, நான்தான் உங்கள் லட்சுமி என்று கதறுகிறாள் அவள். அப்படியென்றால் இறந்தவள் யார்? என்ற கேள்விக்கு விடை தருகிறது லட்சுமி வந்தாச்சு, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

மாண்டவர்கள் மீள்கிறார்கள்

மாண்டவர்கள் மீள்கிறார்கள்

லட்சுமி வந்தாச்சு சீரியலே வாணி போஜனை வைத்துதான் டிஆர்பி ஏறியது. என்ன காரணமோ லட்சுமியை சாகடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை. அதனால்தான் புது லட்சுமி கதாபாத்திரத்தை கொண்டு வந்து விட்டனர். இனி கதையின் போக்கு எப்படியிருக்குமோ பார்க்கலாம்.

English summary
Lakshmi Vanthachu is an Tamil soap opera that airs on Zee Tamil. The show is launched on 2 February 2014 and airs successful telecast on 450 episode. The show stars Vani Bhojan in the lead female role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil