»   »  லட்சுமி வந்தாச்சு... புதிய திருப்பங்கள்... நிறைய சுவாரஸ்யங்கள்!

லட்சுமி வந்தாச்சு... புதிய திருப்பங்கள்... நிறைய சுவாரஸ்யங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு சீரியல் 400வது எபிசோடை எட்டியுள்ளது. இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகளின் ஏகோபித்த வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு சீரியல், புதிய திருப்பங்களை நோக்கி பயணிக்க உள்ளதாக கூறுகின்றனர் சீரியல் குழுவினர்.

நாட்டாமை குடும்பத்து மருமகள்கள் லட்சுமியும். தேன்மொழியும் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லட்சுமிக்கு சுகப்பிரசவம் மூலம் அழகான ஆண் குழந்தை பிறக்கிறது.

Lakshmi Vanthachu crosses 400 episodes mark

தேன்மொழியை சிசேரியன் அறைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அனைவரும் தேன்மொழிக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறதோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெற்றிவேல் தனது மனைவி லட்சுமியின் முகத்தையோ குழந்தையின் முகத்தையோ பார்க்க வரவில்லை. அதேபோல சக்திவேலும் மருத்துவமனைக்கு வரவில்லை. இந்த இரண்டு பேருக்கும் என்னவாயிற்று? ஏன் குழந்தைகளை பார்ப்பதை தவிர்க்கின்றனர் என்ற கேள்வி சீரியலை பார்க்கும் நேயர்களுக்கு எழுகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தருமாம் லட்சுமி வந்தாச்சு சீரியல்.

English summary
Zee Tamil's popular TV Serial Lakshmi Vanthachu is telecasting successfully with amazing viewership.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil