»   »  ‘அரைகுறை உடைகள்’... ‘குலதெய்வத்தைப்’ பார்த்து முகம் சுளிக்கும் குடும்பத் தலைவிகள்!

‘அரைகுறை உடைகள்’... ‘குலதெய்வத்தைப்’ பார்த்து முகம் சுளிக்கும் குடும்பத் தலைவிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்பப் பாங்கான சீரியல்களுக்கு பெயர் போனவர் இயக்குநர் திருமுருகன். தற்போது சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இவரது குலதெய்வம் சீரியல் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளுடன் களேபரமாக உள்ளது.

திருமுருகன் என்ற பெயரை விட அவரை கோபி என்று சொன்னால் தான் மக்களுக்குப் புரியும். அந்த வகையில் தனது முந்தைய இரண்டு சீரியல்களிலும் கோபி என்ற பெயரில் மக்கள் மனதில் வாழ்ந்தவர் திருமுருகன்.

திருமுருகனின் மெட்டி ஒலி ஆகட்டும், நாதஸ்வரம் ஆகட்டும் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்தது. காரணம் கிராமம், அதில் வாழும் வெள்ளந்தியான மக்கள், ஆபாசமில்லாத காட்சிகள், முகம் சுளிக்க வைக்காத உடைகள், முக்கியமாக இயல்பான வசனங்கள் போன்றவை தான்.

தாவணி தேவதைகள்...

தாவணி தேவதைகள்...

திருமுருகனின் சீரியல்கள் மட்டுமின்றி அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே ஆபாசமில்லாத குடும்பக் கதையாகத் தான் இருந்தது. இரண்டு படங்களிலுமே நாயகிகள் தாவணி தேவதைகளாகத் தான் வலம் வந்தனர்.

சராசரி மனிதர்களின் கதை...

சராசரி மனிதர்களின் கதை...

ஐந்து பெண் குழந்தைகளின் தந்தையைப் பற்றிய கதையான மெட்டி ஒலி நாடகத்திலும் சராசரி மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றித் தான் அவர் பேசியிருந்தார். அந்த நாடகத்தில் சிங்கப்பூர் சென்று வேலை பார்க்கும் கடைசிப் பெண்ணான பவானி கூட, சில இடங்களில் மட்டும் தான் சுடிதார் அணிவார்.

நாயகிகளின் உடை...

நாயகிகளின் உடை...

மற்றபடி, அனைத்துக் காட்சிகளிலும் தாவணி அல்லது சேலையில் தான் நாயகிகள் இருப்பர். அரைகுறை உடை அணிந்து எந்தக் கதாபாத்திரமும் வரவில்லை.

கண்களை உருத்தாத உடை...

கண்களை உருத்தாத உடை...

இதேபோல், நாதஸ்வரம் சீரியலும் அண்ணன், தம்பி அவர்களின் குடும்பம், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றிய கதைக்களம் தான். கிராமத்து பின்னணியில் உருவான இந்தக் கதையிலும் பெண்கள் அனைவருமே கண்களை உருத்தாத உடைகளைத் தான் அணிந்திருப்பர்.

குலையை நடுங்க வைக்கிறது...

குலையை நடுங்க வைக்கிறது...

மெட்டி ஒலி முடிந்ததும், நாதஸ்வரம் தொடங்கியது திருமுருகனின் ரசிகர்களாக குடும்பத்தலைவிகளுக்கு நிம்மதி தந்தது. ஆனால், தற்போது நாதஸ்வரம் முடிந்து குலதெய்வம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் குலையை நடுங்க வைப்பதாக உள்ளது.

காணாமல் போன குடும்பத்தலைவிகள்...

காணாமல் போன குடும்பத்தலைவிகள்...

இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு இல்லை என்றே கூறப்படுகிறது. 7.30 மணியானால் திருமுருகன் சீரியல் வரும் என டிவி முன் அமர்ந்தவர்களில் பாதிப்பேர் காணாமல் போனதாகவே தெரிகிறது.

மாடர்ன் மங்கைகள்...

மாடர்ன் மங்கைகள்...

காரணம் இந்த முறை திருமுருகன் தேர்ந்தெடுத்த கதைக்களம் தான். கிராமம் மற்றும் நகரம் இரண்டும் கலந்த கதைக்களம். ஆனால், நகரத்து மக்களுக்கு நிகராக கிராமத்தில் வாழும் பெண்களும் மாடர்ன் டிரஸ் அணிகிறார்கள்.

ஆபாசமில்லாத சீரியல்...

ஆபாசமில்லாத சீரியல்...

உண்மையைத் தானே காட்டுகிறோம் என சீரியல் தரப்பு நினைத்தாலும், மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது அதுவல்ல. சினிமாக்களுக்கு நிகராக ஆபாசமான காட்சிகள் சீரியலிலும் பெருகி வரும் நிலையில், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க நல்ல சீரியலைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மாடர்ன் மங்கையான மலர்...

மாடர்ன் மங்கையான மலர்...

கிராமத்திலே வாழும் சிறுமி, யூனிபார்ம் தான் அணிந்துள்ளார் என்றாலும் அவர் காலை மட்டும் குளோஸ் அப்பில் காட்டுவது ரசிக்கும் படி இல்லை என்பது குடும்பத்தலைவிகளின் வருத்தம். அதோடு, நாதஸ்வரத்தில் பொறுப்பான மருமகளாக, கணவர் குணமறிந்து நடக்கும் மனைவியாக குடும்ப குத்து விளக்காக வந்த மலர், இந்த நாடகத்தில் ஆரம்பம் முதலே மாடர்ன் டிரஸ்ஸில் வருகிறார்.

ஆபத்தான யோசனைகள்...

ஆபத்தான யோசனைகள்...

அதோடு, ஆரம்பத்திலேயே பெற்றோரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வீட்டை விட்டு வெளியேறும் சிறுமி, சுற்றுலாவின் போது காதலனோடு தப்பிச் செல்லும் மாணவி என குடும்பத் தலைவிகளை முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் ஏராளமாக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

யோசிப்பீங்களா சார்...

யோசிப்பீங்களா சார்...

திருமுருகனுக்கென்று தனி ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. இதில் குடும்பத் தலைவிகள் ஏராளம். எனவே, அவர்களைக் கருத்தில் கொண்டு இனி வரும் நாட்களில் காட்சிகளை அமைப்பது நல்லது.

English summary
Unlike director Thirumurugan's past mega serials like Nathaswaram, Metti Oli, the presently running Kulatheivam mega serial in Sun TV has covered only few viewers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil