விஜய் டிவி.,யின் பிரபல ஷோவில் களமிறங்கும் 4 தலைவிகள்... குஷியில் ரசிகர்கள்

சென்னை : டிவி ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானதும், அதிக ரசிகர்களைக் கொண்டதும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். ஏற்கனவே 4 சீசன்கள் முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது துவங்கும், அப்டேட், ப்ரோமோ போன்றவைகள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இருந்தாலும் இடைவிடாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்க ஏதாவது ஒரு நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்திக் கொண்டே இருக்கிறது. அதில் ஒன்று தான் பிக்பாஸ் ஜோடிகள்.

இறுதிக்கட்டத்தில் பிபி ஜோடிகள்

இறுதிக்கட்டத்தில் பிபி ஜோடிகள்

ஏற்கனவே நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை ஒன்று சேர்த்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

அசத்தும் போட்டியாளர்கள்

அசத்தும் போட்டியாளர்கள்

இதில் சோம் சேகர், ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ், அனிதா சம்பத், சம்யுக்தா, ஆஜித், கேப்ரியலா, ஷாரிக், ஃபாத்திமா பாபு, மோகன் வைத்யா, மரியா ஜுலியானா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்று அசத்தி வருகின்றனர். நடுவர்களாக ரம்யா கிருஷ்ணனும், நகுலும் பங்கேற்று வருகின்றனர்.

முன்னணி போட்டியாளர்கள்

முன்னணி போட்டியாளர்கள்

இதில் போட்டியாளர்கள் தங்களுக்குள் ஒளிந்துள்ள டான்ஸ் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இந்த டான்ஸ் போட்டியில் மரியா ஜுலியானா, அனிதா சம்பத், ஷாரிக், அரந்தாங்கி நிஷா, சம்யுக்தா உள்ளிட்டோர் அதிக முயற்சி எடுத்து, நடந்து முடிந்த சுற்றுக்களில் முன்னணியில் உள்ளனர்.

களமிறங்கும் தலைவிகள்

களமிறங்கும் தலைவிகள்

இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. இந்நிலையில் 4 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் லாஸ்லியா, ஓவியா, சாக்ஷி அகர்வால், ரம்யா பாண்டியன், அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் சிறப்பு எபிசோட்டில் பங்கேற்க உள்ளனர்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

நான்கு சீசன்களிலும் லாஸ்லியா, ஓவியா, ரம்யா பாண்டியனுக்கு என தனி ஆர்மியே அமைத்து, இப்போது வரை அவர்களின் ரசிகர்கள் தலைவி என கொண்டாடி வருகின்றனர். முதல் சீசனில் பங்கேற்ற ஓவியாவில் துவங்கி கடைசியாக நடந்து முடிந்த சீசனில் ரம்யா பாண்டியன் வரை தலைவி என ஒரு கூட்டமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

வைரலாகும் போட்டோக்கள்

வைரலாகும் போட்டோக்கள்

இந்த சிறப்பு எபிசோட் தொடர்பான ஃபோட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இறுதிப்போட்டிக்கு முன், ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த நாயகிகள் பங்கேற்கும் எபிசோட் ஒளிபரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றியாளர்களாக அனிதாவும், ஷாரிக்கும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X