»   »  ச்சும்மா... கிழி... கிழி... கிழி... கின்னஸ் சாதனை படைத்தது "கலா"க்காவின் "மானாட மயிலாட"... !

ச்சும்மா... கிழி... கிழி... கிழி... கின்னஸ் சாதனை படைத்தது "கலா"க்காவின் "மானாட மயிலாட"... !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கலா மாஸ்டர் இயக்கி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மானாட மயிலாட நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

பல முன்னணி நடிகர்கள் நடுவர்களாக வீற்றிருக்க, கலா மாஸ்டர் இயக்கத்தில் மானாட மயிலாட 10 சீசன் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

நடன நிகழ்ச்சிகளில் ஏம்ஸ் ரூம் இல்யூசன் என்ற முறை உள்ளது. அதாவது, விதவிதமான மேடைகளை அமைப்பது, ஒரே மேடையில் ஒருவரே பலத் தோற்றங்களில் தோன்றி மாயத் தோற்றத்தை உருவாக்குவது.

ஏம்ஸ் ரூம் இல்யூசன்...

ஏம்ஸ் ரூம் இல்யூசன்...

அந்த வகையில், மானாட மயிலாடவில் அத்தகைய எபிசோட் ஒன்று படமாக்கப் பட்டது. உலகத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிக நீண்ட நேரம் ஏம்ஸ் ரூம் இல்யூசன் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது.

நேரில் பார்த்தனர்...

நேரில் பார்த்தனர்...

ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்த அந்தப் படப்பிடிப்பை கின்னஸ் ரெக்கார்ட் பிரதிநிதிகள் நேரில் பார்த்தனர். பின்னர் இந்த நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப் பட்டது.

கின்னஸ் சான்றிதழ்...

கின்னஸ் சான்றிதழ்...

கின்னஸ் சான்றிதழை கின்னஸ் ரெக்கார்ட் அதிகாரி லூசியா சினிகேலியினியி லண்டனில் இருந்து வந்து கலா மாஸ்டரிடம் நேரில் வழங்கினார். உலக சாதனை புரிந்த அந்த எபிசோட் கலைஞர் டிவியில் வரும் மே 3ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப் படுகிறது.

முதல்முறை...

முதல்முறை...

இந்தச் சாதனைக்கான விருதை டிவி ரியாலிட்டி ஷோ ஒன்று வாங்குவது இது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The popular dance reality show Maanada Mayilada has added another feather to its cap. The dance show has entered the Guinness Book of Records for creating the largest Ames Room Illusion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil