»   »  தீபாவளிக்கு தனுஷூடன் மல்லு கட்டப் போகும் இளைய 'கேப்டன்'!

தீபாவளிக்கு தனுஷூடன் மல்லு கட்டப் போகும் இளைய 'கேப்டன்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செஞ்சிருவேன்-.... இது வேற மாரி.... என்னடா இது என்று பார்க்கிறீர்களா? விஜய் டிவியில் தீபாவளி நாளில் ஒளிபரப்பாகும் மாரி படத்திற்கான முன்னோட்டம்தான். இன்னும் ஆயுத பூஜை, விஜயதசமியே முடியலையே அதுக்குள்ள என்ன தீபாவளி படத்திற்கான முன்னோட்டம் என்கிறீர்களா? எல்லாம் விளம்பர வருமானத்திற்காகத்தான்.

இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று என்னென்ன திரைப்படங்கள் தியேட்டரில் ரீலீஸ் ஆகிறது என்று இன்னமும் தெரியவில்லை. ஆனால் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் சிலவற்றை பற்றி முன்னோட்டம் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. விஜய் டிவியில் மாரி, ஜீ தமிழ் டிவியில் இந்தியா பாகிஸ்தான், ராஜ் டிவியில் வன்மம், கேப்டன் டிவியில் சகாப்தம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தீபாவளிக்கு தனுஷ் உடன் மோதப்போகிறார் சின்ன விஜயகாந்த் சண்முகப் பாண்டியன்.

திரைப்படம் என்னவோ இரண்டரை மணிநேரம்தான் என்றாலும் இரண்டு மணிநேரம் விளம்பரம் போட்டு நான்கரை மணிநேரம் ஜவ்விழுப்பு இழுத்து விடுவார்கள் டிவி சேனல்களில், வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் ரசிகர்களை கவருவதற்காகவே புத்தம் புது படங்களை தீபாவளிக்கு ரிலீஸ் செய்கின்றனர். பட்டாசு வெடித்து விட்டு பலகாரம் சாப்பிட்டுக்கொண்டே டிவி சேனல்களை புதுப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.

மாரி... செஞ்சிருவேன்

மாரி... செஞ்சிருவேன்

ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் இருந்தே விஜய் டிவியில் மாரி படத்தின் முன்னோட்டம் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். அடிக்கடி மீசையை முறுக்கி செங்சிருவேன்...செஞ்சிருவேன் என்று பயமுறுத்தி வருகிறார் தனுஷ்.

விஜய் ஆன்டணி

விஜய் ஆன்டணி

ஜீ தமிழ் சேனலில் விஜய் ஆன்டணி நடித்த இந்தியா பாகிஸ்தான் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இந்த படம் வெளியாகி சில மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது.

ராஜ் டிவியில் வன்மம்

ராஜ் டிவியில் வன்மம்

விஜய் சேதுபதி, கிருஷ்ணா நடித்த வன்மம் திரைப்படம் ராஜ் டிவியில் தீபாவளி சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாகிறது.

கேப்டன் டிவியில் சின்ன விஜயகாந்த்

கேப்டன் டிவியில் சின்ன விஜயகாந்த்

விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்த சகாப்தம் திரைப்படம் கேப்டன் டிவியில் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளதாக கேப்டன் டிவி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன், கலைஞர் டிவி

சன், கலைஞர் டிவி

தீபாவளி சிறப்பு திரைப்படங்களை பிற சேனல்கள் போட்டி போட்டு அறிவித்து வரும் நிலையில் சன்டிவி கலைஞர் டிவி சேனல்களில்களில் இன்னமும் அதைப்பற்றி எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை. புத்தம் புது திரைப்படங்கள் பலவற்றை கைப்பற்றியுள்ள சன்டிவி எந்த படத்தை களமிறக்கப்போகிறதோ தெரியலையே.

English summary
Maari movie premiere on ur Starvijay this Diwali.Starring Dhanush,Kajal Agarwal,RoboShankar,Vijayyesudas,Directed by Balaji mohan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil