இரண்டு மனைவிகள் பிரச்னையிலும் பிசினஸில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மாதம்பட்டி.. வீடியோ தரமா இருக்கே!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்னை கடந்த சில மாதங்களாகவே மிகவும் பரபரப்பாக தான் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இப்படி இருக்கும்போது தனது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா தனது பெயரை மாதம்பட்டி ரங்கராஜ் என்று பயன்படுத்துவதால் தனது கேட்டரிங் நிறுவனம் வணிக ரீதியாக நஷ்டத்தைச் சந்திப்பதாக தெரிவித்தார். இப்படி இருக்கும்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகரும் புகழ் பெற்ற சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கி பலரது கவனத்தை ஈர்த்தார். அந்த நிகழ்ச்சியை மிகவும் ஜாலியாக கொண்டு போக தனது ஈடுபாட்டை செலுத்தி வருகிறார்.

இப்படி இருக்கும் போது, ஏற்கனவே திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தகப்பனான மாதம்பட்டி ரங்கராஜ், இரண்டாவதாக ஆடை வடிவமைப்பாளார் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டார். இதில் பிரச்னையே முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்றபோதே தகவல்கள் வெளியே வரவில்லை. சில மாதங்களுக்குப் பின்னர் தான் தகவல்கள் வெளியே வந்தது.

Madhampatty Rangaraj Shares New Video About Vijay Television Awards

இரண்டு மனைவி பிரச்னை: இரண்டாவது திருமணம் நடைபெற்றது தொடர்பாக முதன் முதலில் வெளியே அறிவித்தவர் ஜாய் கிரிசல்டா தான். மேலும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனது குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்றும் தெரிவித்து, வழக்கு தொடர்ந்தார். வழக்கில் மாதம்பட்டி தன்னை ஏமாற்ற முயற்சிப்பதாக குறிப்பிட்டார். இப்படி இருக்கையில் இந்த வழக்கு விசாரணையில் இருக்க, மாதம்பட்டி ரங்கராஜோ, சென்னை உயர்நீதிமன்றத்தில், தனது பெயரைக் குறிப்பிடும் போது ரங்கராஜ் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும், மாதம்பட்டி என்று பயன்படுத்துவதால் தனது தொழிலில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவும் விசாரணையில் உள்ளது.

விஜய் டெலிவிஷன் விருதுகள்: இப்படி இருக்கும்போது கடந்த வாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி முதன் முதலாக இந்த விவகாரம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி இருக்கும்போது மதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த விஜய் தொலைக்காட்சி சின்னத்திரை விருதுகள் நிகழ்ச்சியில் தனது மாதம்பட்டி கேட்டரிங் நிறுவனம் உணவுகளை ஏற்பாடு செய்ததை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதைப் பார்த்த பலரும் இரண்டு மனைவிகள் பிரச்னை ஒருபுறம் பரபரப்பாக போய்க் கொண்டு இருந்தாலும், மனுஷன் தொழில்ல ரொம்பவும் கவனமாக தான் இருக்காரு என்று பாராட்டி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X