»   »  அமானுஷ்ய, ஆச்சரியங்களை பகிரும் மதன்... புதுயுகம் டிவியில் மனிதனும் மர்மங்களும்

அமானுஷ்ய, ஆச்சரியங்களை பகிரும் மதன்... புதுயுகம் டிவியில் மனிதனும் மர்மங்களும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனை நாளைக்குத்தான் டிவி சீரியல்களில் மாமியார் மருமகள் சண்டையை பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அதை விட இந்த உலகத்தில் ஆச்சரியமான அமானுஷ்ய நிகழ்வுகள் உள்ளன என்கிறார் எழுத்தாளர் மதன். மனித மூளையை விட பல ஆச்சரியமான சம்பவங்களை 'மனிதனும் மர்மங்களும்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் ரசிக்கும் வகையில் தரப்போகிறார் இந்த நிகழ்ச்சி புதுயுகம் டிவியில் வரும் 12ம் தேதியன்று தொடங்குகிறது. திங்கள் முதல் புதன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி

ஆவிகள், பேய்கள், பறக்கும் தட்டுகள் , டெலிபதி எனப்படும் மனம் மூலம் செய்தி பரிமாற்றம், தொலைவில் நடப்பதை உணர்தல் , மனோசக்தியாலே பொருட்களை நகர்த்துதல் போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றிய உண்மைகளையும், அதைப்பற்றிய நம்பிக்கைகளையும் மக்களுக்கு விளக்குகிறார் தொகுப்பாளர் மதன்.

Madhan host Manithanum Marmangalum on Pudhuyugam TV

நம்மிடைய உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான், ஆவிகள் பற்றிய மர்மங்களையும் விஞ்ஞான வடிவில் நம்பவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.

புறத்தூண்டுதல் இல்லாமல் நகர்வது, நகர்த்துவது போன்ற மனிதனின் மனம் சம்பந்தப்பட்ட அதீத சக்திகளைப் பற்றிப் பேசுகிறது இது மனிதனும் மர்மங்களும் நிகழச்சி.

பறக்கும் தட்டு?பற்றியும் ஏலியன்ஸ் பற்றியும் ஆங்கிலப் படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் வேற்றுக்கிரக மனிதர்களைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னவர்கள் உண்டு. அவர்களின் 'விசேஷ' அனுபவங்கள். ஆவிகளுக்கும் அமானுஷ்ய விஷயங்களுக்கும்கூட வாழ்க்கை வரலாறு உண்டு என்பதைப் பல சம்பவங்களோடும் கேள்விகளோடும் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டு போகிறது

யாராலும் விளக்கவே முடியாத வண்ணம் பொருட்களை நகர்த்தியது, பறக்கச்செய்தது, தானும் பறந்தது, ஸ்பூனை பார்வையினாலேயே வளைத்தது என அற்புதங்கள் நிகழ்த்திய அதிசய மனிதர்களைப் பற்றி இந்த நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் புதுயுகம் தொலைக்காட்சியின் சேனல் ஹெட் இக்கி.

பறக்கும் தட்டுகள் பற்றியும், ஏலியன்கள் பற்றியும் சுவாரசிய தகவல்களுடன், ஏலியன்ஸுகளுடன் மனிதர்களுக்கு ஏற்பட்ட ஏராளமான நிகழ்வுகளை சுவாரஸ்யமாகவும், மர்மங்கள், திகில் திருப்பங்களுடன் ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வருகிறது 'மனிதனும் மர்மங்களும்' என்று கூறியுள்ளார் புதுயுகம் டிவியின் சேனல் ஹெட் திரு. இக்கி.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் எழுத்தாளரும் கார்டூனிஸ்டுமான மதன், ஏற்கனவே 'மனிதனும் மர்மங்களும்' என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் வெளிநாட்டில் நடந்த சம்பவங்களைப் பற்றிக் கூறியுள்ளார். புதுயுகம் டிவியில் இந்தியாவில், தமிழகத்தில் மக்கள் சந்தித்த அமானுஷ்ய நிகழ்வுகளை, ஆச்சரியங்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார். புதுயுகம் டிவியில் திங்கள் முதல் புதன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

English summary
Manithanum Marmangalum, by Madhan, From September-12 Onwards, Monday to Wednesday at 9:00PM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X