For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வள்ளி, வாணி ராணி, தெய்வமகள், வம்சம் ஒரு ஒற்றுமையிருக்கு தெரியுமா?

  By Mayura Akilan
  |

  1990களில் தூர்தர்சனில் சீரியல் என்றாலே 13 வாரம்தான் அதிகபட்சம் இருக்கும். அப்புறம் விழுதுகள், சாந்தி என நெடுந்தொடர்கள் ஒளிபரப்பானது. மதிய சாப்பாட்டை கூட தியாகம் செய்து விட்டு சீரியல் பார்த்த காலம் உண்டு.

  சேட்டிலைட் சேனல்களின் வருகையால் சீரியல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. பாலச்சந்தரின் சீரியல்கள் கையளவு மனசு தொடங்கி பல சீரியல்கள் 200க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தாண்டியது.

  பிற்பகல் நேரத்தில் சீரியல்கள் ஒளிபரப்பான பின்னர் ஏவிஎம் சீரியல்கள் ஆயிரம் எபிசோடுவரை ஒளிபரப்பானது. சித்தி சீரியலின் கிளைமேக்ஸ் பார்க்க திருப்பதி லட்டு தயாரிப்பையே நிறுத்தினார்களாம். மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல் என ஆயிரத்து 200 எபிசோடுகளை தாண்டிய சீரியல்களும் உள்ளன.

  ஆயிரம் எபிசோடு தாண்டிய சீரியல்கள்

  ஆயிரம் எபிசோடு தாண்டிய சீரியல்கள்

  சன்டிவியில்தான் அதிக அளவில் ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டியும் அதிக அளவில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. 5 வருடங்களுக்கு அசாராமல் அந்த சீரியல் கதாபாத்திரங்களுடனேயே வாழ்ந்து, சாப்பிட்டு, தூங்கி எழுவார்கள். ஞாயிறு சீரியலுக்கு லீவா? அடடா இவங்களை எல்லாம் பார்க்க முடியாதே என்று ஏங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

  வள்ளி 1197

  வள்ளி 1197

  சன்டிவியில் ஒளிபரப்பாகும் வள்ளி சீரியல் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் பார்ப்பதற்காக மதிய தூக்கத்தையே தியாகம் செய்கின்றனர் நமது இல்லத்தரசிகள். டபுள் ஆக்ட் கதை. கொழுந்தன், அண்ணி மோதல்தான். கூடுதல் சுவாரஸ்யம் வில்லி இந்திரசேனா. பாட்டியாக நடித்த ஜோதிலட்சுமி, மாமாவாக நடித்த வியட்நாம் வீடு சுந்தரம் மரணம் இந்த சீரியலுக்கு கொஞ்சம் இழப்புதான். ஆனாலும் ஜோதிலட்சுமியின் இடத்தை ஈடு செய்து விட்டார் லதா. இந்த சீரியல் 1200 வது எபிசோடினை இன்னும் சில தினங்களில் எட்டிவிடும்.

  வாணி ராணி

  வாணி ராணி

  சன்டிவியில் சித்தி, அண்ணாமலை, செல்வி, செல்லமே என தொடங்கி இப்போது வாணி ராணியாக வந்திருக்கிறார் ராதிகா. 1173வது எபிசோடுகளை கடந்துள்ளது வாணி ராணி. வாணி, ராணி என இரண்டு கதா பாத்திரங்கள். அப்பாவி ராணி, அதிரடி வக்கீல் வாணி என ராதிகாவின் நடிப்பை குறை சொல்ல முடியாது. கடத்தல், கொலை, என்கவுண்டர் என போகிறது சீரியல்.

  தெய்வமகள் 1150

  தெய்வமகள் 1150

  சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியல் அண்ணியார் காயத்ரி, கொழுந்தன் பிரகாஷ் இடையே போட்டிதான். ஜெய்ஹிந்த் விலாஸ் வீடும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக உள்ளது. வில்லி காயத்ரிதான் என்றாலும் அவ்வப்போது சில வில்லன்கள், வில்லிகள் எட்டிப்பார்க்கின்றனர். அதிகம் விமர்சனத்திற்கு ஆளானாலும் தாசில்தார் சத்யாவிற்காக இளைஞர் பட்டாளம் இந்த சீரியலைப் பார்க்கிறது. 1150 எபிசோடுகளை எட்டியுள்ள இந்த சீரியல் விரைவில் 1200வது எபிசோடினை எட்டிவிடும்.

  வம்சம்

  வம்சம்

  ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியரில் டபுள் ஆக்ட் போடதவர்களே இருக்கமாட்டார்கள். குழந்தை தேவிகா தவிர எல்லோருமே இரட்டை வேடம் போட்டு விட்டார்கள். கொலை, ஆள் கடத்தல், கூடவே மூளை நினைவு செல்களை அழிப்பது, வாழைப்பழம் சாப்பிட்டு நினைவு திரும்புவது. நாடு விட்டு நாடு கடத்துவது. கலெக்டர் அர்ச்சனா காப்பாற்றுவது என கதை போகிறது. சீரியலை பார்ப்பவர்களின் காதில் முழம் முழமாய் பூ சுற்றினாலும் 1090 எபிசோடுகளை கடந்து விட்டது. வில்லன் நந்தகுமார் மரணத்துடன் முடிந்து விடும் என்று நினைத்தால் மீண்டும் கொலை, கடத்தல் என்று மறுபடியும் ஆரம்பித்து விட்டார்கள்.

  சீக்கிரம் முடிங்க சாமிகளா

  சீக்கிரம் முடிங்க சாமிகளா

  சன்டிவியில் என்னதான் பழைய சீரியல்கள் ஒளிபரப்பானாலும் பல பிரம்மாண்ட டப்பிங் சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. எனவே அரசப்பழசான சீரியலை முடித்து புது கான்செப்ட்க்கு மாறுங்கள் சீரியல் தயாரிப்பாளர்களே என்று கூறி வருகின்றனர் சீரியல் ரசிகர்கள். சன் தொலைக்காட்சி நிறுவனமே பிரம்மாண்டாக பாம்பு சீரியலை தயாரித்து வருகிறது. அதை பார்த்து பிற சீரியல் தயாரிப்பாளர்களும் பிரம்மாண்டமாக சீரியலை தயாரித்தால் மட்டுமே ரசிகர்கள் கவர முடியும்.

  English summary
  Some of the mainstream serials are crossing 1200th episode in Tamil TV channels.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X