மனைவி இல்லடா அம்மா.. சீரியல் நடிகைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்த சிறுவன்.. பாடம் புகட்டிய நடிகை
சென்னை: நடிகையாக பொது வாழ்க்கைக்கு வந்துட்டாலே பலருடைய பார்வை அந்த நடிகை மீது தவறான ஒரு கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறது. நடிகை என்பதால், அந்த நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும், பொது இடத்தில் அவர்களிடம் அத்துமீறியும் சிலர் நடந்து கொள்கிறார்கள். அது மட்டுமில்லாமல், நடிகையின் தீவிர ரசிகன் என சொல்லிக் கொள்ளும் சிலர், சோசியல் மீடியாவில் நடிகைகள் பதிவிடும் புகைப்படத்திற்கு கீழே ஏடாகூடமான கமாண்டுகளையிம், ஆபாசமான புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு கொண்டேதான் இருக்கின்றனர். இது எல்லாம் ஒரு விஷயம் இல்லை என நடிகைகள் கடந்து போனாலும், ஒரு சில கமெண்ட்கள் அவர்களை பாதிக்கும் வகையில் தான் இருக்கு. அப்படி 17 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து கொடுத்த டார்ச்சரால், பாதிக்கப்பட்ட நடிகை அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
மலையாளத் தொலைக்காட்சியில் தொடர்களான 'ஆத்மசகி' மற்றும் 'பவுர்ணமி திங்கள்' போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அவந்திகா மோகன். சீரியலில் மூலம் கிடைத்த பெயரால் பிரபலமான இவர் 'யக்ஷி ஃபெய்த்ஃபுல்லி யுவர்ஸ்' என்ற மலையாள திரைப்படம் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, தமிழ் மற்றும் கன்னட திரைப்படத்திலும் நடித்து வரும் இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். விரைவில் ஒளிபரப்பாக உள்ள மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவரின் பெயர் அடிபட்டு வருகிறது.

மலையாள நடிகை: நடிகை அவந்திகா மோகனை இன்ஸ்டாகிராமில் 1.5 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இதில் ரசிகர்களுடன் நேரலையில் பேசுவது, அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அவந்திகா மோகனின் அழகால் ஈர்க்கப்பட்ட 17 வயது சிறுவன் ஒருவன் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தொடர்ந்து மெசேஜ் செய்து வருகிறான். இதைப்பார்த்து ஆத்திரப்பட்ட அவந்திகா மோகன், அந்த சிறுவனுக்கு புரியும்படி சரியான பதில் கொடுத்துள்ளார். அதாவது,
மனைவி இல்லடா அம்மா: என் குட்டி ரசிகரே, நீங்கள் சில நாட்களாக எனக்கு மெசேஜ் அனுப்பி வருகிறீர்கள். அந்த மெசேஜை பார்த்து நான் கவலையும் அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த நேரத்தில் நான் உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும், நீங்கள் 16 அல்லது 17 வயது சிறுவன். உங்களுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்றே புரியதா வயது. நீ, என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஒரு வருடமாக மெசேஜ் அனுப்பி வருகிறார்கள். உங்களில் வயது திருமணத்தை பற்றி கவலைப்படும் வயது இல்லை. நீங்கள் உங்கள் தேர்வுவை பற்றி கவலைப்பட வேண்டும். என்னைவிட உங்களுக்கு வயது மிகவும் குறைவு. ஒருவேலை நாம் திருமணம் செய்துகொண்டால், என்னை உன் மனைவியாக பார்க்க மாட்டார்கள். அம்மாவாகத்தான் பார்ப்பார்கள். எனவே, நீ படிப்பில் கவனம் செலுத்துங்கள், சரியான நேரத்தில் காதல் உன்னை தேடிவரும் என்று அந்த சிறுவனுக்கு பதில் அளித்துள்ளார். நடிகையின் இந்த பக்குவமான பதிலைப்பார்த்த பலர் தெளிவாக பதில் என்றும், 17 வயது சிறுவன் இப்படி பேசலாமா என அவனை திட்டாமல், அவனுக்கு நல்ல படத்தை புகட்டி உள்ளார் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்


Click it and Unblock the Notifications











