»   »  வம்சம் மதன் ருபினி ஆன கதை தெரியுமா?

வம்சம் மதன் ருபினி ஆன கதை தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஹீரோக்களுக்கு ஹீரோயினி ஆகும் ஆசை வந்தது போல இப்போது டிவி சீரியல் வில்லன் கம் ஹீரோக்களுக்கும் ஹீரோயினி ஆகும் ஆசை வந்து விட்டது. ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் தலைமறைவாக இருக்கும் மதனுக்கு பெண் வேஷம் போட்டு விட்டுவிட்டார்கள்.

[Read This Too: நான் தான்பா உன் மாமியார் பேசுறேன்: சதிஷிடம் போனில் கூறிய கீர்த்தியின் அம்மா]

மதனை ரூபினியாக மாற்றிவிட்டதால் இனி அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது என்று கலெக்டர் அர்ச்சனா சொல்லிவிட்டார். மதனும் நிம்மதியாக இனி ஓடி ஒளியாமல் தைரியமாக வெளியே நடமாடுவார்.

வம்சம் சீரியல்

வம்சம் சீரியல்

வம்சம் சீரியலில் ஆள் ஆளுக்கு இரட்டை வேடம் போட்டு விட்டார்கள். கலெக்டர் அர்ச்சனாவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் தொடங்கி, ஜோதிகா வரை இரட்டை வேடம்தான். விட்டால் குட்டிக்குழந்தை தேவிகாவிற்கும் இரட்டை வேடம் போட்டு விடுவார்கள். இரட்டை வேடம் போட்டு நடித்த பொன்னுரங்கம் என்னவானார் என்பது அர்ச்சனாவிற்கு மட்டுமே தெரியும்.

கடத்தும் வில்லன்

கடத்தும் வில்லன்

நந்த குமாரை கொலை செய்து விட்டதாக நம்பும் மதன் டீ கடையில் மறைந்து கொண்டிருக்கிறார். ஜோதிகா போல முகமுடி அணிந்த வேதிகா, குழந்தை தேவிகாவை கடத்திக் கொண்டு போய்விடுகிறாள். விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் ஜோதிகாவை, வேதிகா உதவியுடன் கடத்திக்கொண்டு போகிறான் நந்தக்குமார்.

மாறுவேடம்

மாறுவேடம்

பல வேடங்களில் குடுமியை மறைக்காமல் வந்தாலும் நந்தக்குமாரை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதுதான் கொடுமை. அதை சொன்ன பிறகுதான் இப்போது குடுமையை மறைத்து சிங் வேடத்தில் அலைகிறார் நந்தகுமார்.

பெண் வேடத்தில் மதன்

பெண் வேடத்தில் மதன்

குழந்தை வேதிகாவையும் கடத்திக்கொண்டு போய் நந்தகுமார்மிரட்ட, அதை லட்டு கூடைக்குள் வைத்து தப்பிக்க வைக்கிறார் கடத்தப்பட்ட ஜோதிகா. நந்த குமாரை கண்டு பிடிக்க மதன், பெண் வேடத்தில் வர, அதைப்பார்த்த அர்ச்சனாவிற்கே ஆச்சரியம் தாங்கவில்லை. சினிமா ஹீரோக்களைப் போல இனி வரிசையாக சீரியல் ஹீரோக்களும் பெண் வேடம் கட்டுவார்கள். அதையும் தலையெழுத்தே என்று நாம் பார்க்கத்தான் வேண்டும். டிஆர்பிக்காக இன்னும் என்ன செய்யப்போறாங்களோ?

English summary
Vamsam serial sees another double action as Mathan turned woman charector.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil