»   »  குடும்பத்தில் பிரச்சினையா... தேடு டாஸ்மாக்கை தேடு... சீரியல் சொல்லித் தரும் "சில்லறைத்தனம்"!

குடும்பத்தில் பிரச்சினையா... தேடு டாஸ்மாக்கை தேடு... சீரியல் சொல்லித் தரும் "சில்லறைத்தனம்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக ஆண்கள் டாஸ்மாக்கைத் தேடித்தான் போக வேண்டும் என்ற தவறான வழியை சொல்லித் தருகின்றன தமிழ் சீரியல்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரியமானவள் சீரியலில், அவந்திகாவின் குட்டுக்கள் உடைந்து கணவரின் கோபத்திற்கு ஆளாகிறார். இதனால் வீட்டை விட்டு அவர் வெளியேற்றவும் படுகிறார்.

கணவரைப் பிரிந்த அவந்திகா தன் அப்பா வீட்டிற்கு போகிறார். ஆனால், மனைவியை விரட்டி விட்டு கணவர் அடுத்து போகும் இடம் எது தெரியுமா... டாஸ்மாக்.

மது தான் மருந்தா...

மது தான் மருந்தா...

அதிலும் நல்ல பாசமான, கட்டுப்பாடான குடும்பத்தைச் சேர்ந்தவராக காட்டப்படும் அவந்திகாவின் கணவர், எப்படி தன் மனக்காயத்திற்கு மருந்து மது தான் என முடிவெடுக்கிறார் எனத் தெரியவில்லை.

அதுக்குத் தானே இருக்கோம்...

அதுக்குத் தானே இருக்கோம்...

கடை வாசலில் நின்று கொண்டு உள்ளே போகலாமா, வேணாமா என யோசிக்கும் அவரை, ப்ரெயின் வாஷ் செய்வதற்கென்றே சில கேரக்டர்கள் உள்ளனர்.

அட்வைஸ்...

அட்வைஸ்...

மனக் காயங்களுக்கெல்லாம் மருந்து சரக்கு தான் என அவர்கள் நட்ராஜுக்கு அட்வைஸ் பண்ணுகிறார்கள். இதனால் மது குடிக்க பழகுகிறார் அவர்.

இருக்கவே இருக்கு வைத்தி வீடு...

இருக்கவே இருக்கு வைத்தி வீடு...

குடித்து முடித்த பிறகு அவர் எங்கும் போவதில்லை. தனது தாய்மாமன் வைத்தி வீட்டுக்குப் போய் தஞ்சமடைகிறார். விடிந்ததும் மாமாவே கூட்டி வந்து வீட்டிலும் விடுகிறார்.

இதுவரைக்கும் 2 வாட்டி...

இதுவரைக்கும் 2 வாட்டி...

இதுவரை 2 வாட்டி இப்படி ஆகி விட்டது. இவர் போய் குடிப்பது, மாமா வீட்டில் தங்குவது.. அவர் வந்து காலையில் டிராப் செய்து விட்டுப் போவது என்று ஓடிக் கொண்டிருக்கிறது.

எல்லாம் உன்னால் தான்...

எல்லாம் உன்னால் தான்...

இதனை தன் மனைவியிடமும் நடராஜ் கூறுகிறார். உன்னால் ஏற்பட்ட பிரச்சினையால் தான் நான் குடிக்கப் பழகினேன் என்று. அதை விட உனக்கு கஷ்டமா இருக்க. அப்ப டெய்லி குடிப்பேன்டி என்றும் சவால் விடுகிறார்.

யோகாலாம் தீர்வு இல்லையா...

யோகாலாம் தீர்வு இல்லையா...

அப்படியானால் குடும்பத்தில் பிரச்சினை என்றால் தாராளமாகக் குடிக்கச் செல்லலாம், அது ஒன்றே சரியான தீர்வு என ஆண்கள் மனதில் தோன்றாதா. ஏன் யோகா செய்து மனதை ஒருநிலைப் படுத்தினேன் எனக் காட்சிகள் வைக்கலாமே. யோசிப்பீர்களா டைரக்டர்ஸ்...!

அப்படி யோசிக்க கஷ்டமா இருந்தா...! முதல்ல நீங்க யோசிச்சுப் பாருங்கப்பா.. அப்புறம் நாங்க எங்க ஐடியாவைச் சொல்றோம்!

English summary
The television mega serials are encouraging liquor, as they are showing men's taking liquor for disappointment with family.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil