»   »  டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகும் அகில உலக சூப்பர்ஸ்டார்!

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகும் அகில உலக சூப்பர்ஸ்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடிகர் சிவா- வீடியோ

சென்னை : நடிகர் மிர்ச்சி சிவா புதிதாகத் தமிழில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகியிருக்கிறார்.

ரேடியோ ஜாக்கி, நடிகர் என வளர்ந்ததைத் தொடர்ந்து தற்போது, சின்னத்திரை தொகுப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கிறார் மிர்ச்சி சிவா.

கலர்ஸ் டிவி-யில் குழந்தைகள் பங்குபெறும் 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் சிவா.

மிர்ச்சி சிவா

மிர்ச்சி சிவா

வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. அதன் பிறகு சரோஜா, தமிழ்ப்படம், வ குவார்ட்டர் கட்டிங், கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை உள்பட பல படங்களில் நடித்தார்.

அகில உலக சூப்பர்ஸ்டார்

அகில உலக சூப்பர்ஸ்டார்

சிவாவின் கிண்டலான பேச்சுக்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மிர்ச்சி எஃப்.எம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானதால் மிர்ச்சி சிவா என்றே அழைக்கப்படுகிறார். 'அகில உலக சூப்பர்ஸ்டார்' எனும் பட்டத்தையும் தனதாகக் கொண்டவர்.

டிவி தொகுப்பாளர்

டிவி தொகுப்பாளர்

இந்த நிலையில் இவர் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக மறு அவதாரம் எடுத்திருக்கிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் டிவி-யில் கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் சிவா.

புதுமையான நிகழ்ச்சி

புதுமையான நிகழ்ச்சி

இதுவரை யாரும் காணாத ஒரு நிகழ்ச்சியாக இது இருக்குமாம். ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான குழந்தைகள் உலக அளவில் கண்டறியப்படுவார்களாம். குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கும் மதிப்பெண் கொடுப்பது மற்றும் நீக்குதல் என்ற விஷயமே இந்த ஷோவில் கிடையாதாம்.

English summary
Actor Mirchi Siva is presenting a program in Colors TV. Siva is anchoring a show called 'Colors Super Kids' on Colors TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil