»   »  அழகாய் அழும் சீரியல் கதாநாயகிகள்... 2015ன் டாப் லிஸ்ட்

அழகாய் அழும் சீரியல் கதாநாயகிகள்... 2015ன் டாப் லிஸ்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரே அழுகைதான்... இல்லையா கண்களை உருட்டி மிரட்டி வில்லத்தனம் செய்யும் அழகிகள் என சின்னத்திரையில் பெண்களின் ஆதிக்கம்தான். ஹீரோக்களும், அப்பாக்களும் சீரியல்களில் ஒப்புக்குச் சப்பாணிகள்தான். இந்த ஆண்டு புதிய சீரியல் நிறைய ஒளிபரப்பாகிவருகின்றன. சீரியல்களில் பல இளம் நாயகிகள் அறிமுகமாகியுள்ளனர்.

சினிமாவும், ரியாலிட்டி ஷோவும் போதும் இளைய தலைமுறையினரை ஆக்கிரமித்திருந்த நிலையில் அழகான சீரியல் நாயகிகள் பலர் இளைய தலைமுறையினரை சீரியலின் பக்கம் திருப்பியுள்ளனர். கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கூட இன்றைக்கு சீரியல் பார்க்க காரணமாக இருப்பது அழகாய் அழும் சீரியல் நாயகிகளால்தானாம்.

சன்டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி, புதுயுகம் என பல சேனல்களில் புத்தம் புதிதாய் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல் ஹீரோயின்களின் முக்கிய வேலையே குடம் குடமாய் கண்ணீர் விடுவதுதான். 2015ம் ஆண்டில் மட்டும் கதை என்ன புதிதாகவா எழுதப்போகிறார்கள். ரசிகர்களுக்குப் பிடித்த நாயகிகளைப் பட்டியலிட்டுள்ளோம் படியுங்களேன்.

ஓ... பிரியா... பிரியா...

ஓ... பிரியா... பிரியா...

நடிப்பது என்னவோ ஒரு சீரியல்தான் என்றாலும், இளைய தலைமுறையினரை சீரியல் பார்க்க வைத்த பெருமை பிரியாவையே சாரும். பொறியியல் பட்டதாரியான பிரியா, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராக டிவி நேயர்களுக்கு அறிமுகமானவர். செய்திகளை கேட்டு மட்டுமே பழகியவர்கள், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வரவிற்குப்பிறகு, செய்தி சேனல்களின் ரசிகர்கள் ஆகினர். இந்த ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலின் அடிமைகளாகவும் மாறியது பிரியாவின் வரவிற்குப் பிறகுதானாம்.

வாணி போஜன்

வாணி போஜன்

ஏர்ஹோஸ்டஸ் வேலையை விட்டு விட்டு சின்னத்திரைக்கு வந்தார் வாணி போஜன். ஆஹா, மாயா சீரியலில் நடித்த கையோடு சன் டிவியின் தெய்வமகள் தொடரில் நடிக்க வந்தார். இப்போது ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு தொடரின் நாயகியும் இவர்தான். ஆனாலும் இவரது சொந்தப் பெயரை விட சத்யா என்ற பெயர்தான் நிலைத்திருக்கிறது. இவருக்கு ரசிகர்மன்றமும் இருக்கிறதாம்.

பிரியசகி - மித்ரா குரியன்

பிரியசகி - மித்ரா குரியன்

காவலன் படத்தில் விஜய் மனைவியாக நடித்தவர் மித்ரா குரியன். திருமணத்திற்குப் பிறகு, இவருக்கு சினிமா மீதான ஆர்வம் குறையவே, சீரியலின் பக்கம் கவனம் செலுத்தினார். சீரியலுக்கு இந்த ஆண்டின் புதுவரவு மித்ரா குரியன் ஜீ டிவியில் பிரியசகி தொடரின் அழகு நாயகியாக வலம் வருகிறார்.

குலதெய்வம் – அலமு

குலதெய்வம் – அலமு

நாதஸ்வரம் தொடரின் மூலம் சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் மலராக நடித்த ஸ்ருதிகா. இப்போது குலதெய்வம் தொடரில் அலமுவாக வந்து அழாமல் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

பிரியமானவள் – அவந்திகா

பிரியமானவள் – அவந்திகா

கொஞ்சம் திமிர் கலந்த நடிப்பு... இப்படி ஒரு மருமக வந்தா எப்படி சமாளிக்கிறது என்று யோசிக்க வைத்திருக்கிறார் பிரியமானவள் தொடரில் நடிக்கும் அவந்திகா. இவர் இதற்கு முன் சில பல சீரியல்களில் வந்து போனாலும் பிரியமானவள் சீரியல்தான் அவந்திகாவை அடையாளம் காட்டியிருக்கிறது.

வாணி ராணி – பூஜா, செல்வி

வாணி ராணி – பூஜா, செல்வி

ராதிகா சீரியலில் ராதிகாதான் கெத்து காட்டுவார்... வாணி ராணி சீரியலில் இளமை பட்டாளங்கள் கெத்து காட்டுகின்றனர். பூஜா, செல்வி, நக்ஷத்திரா என பல இளம் நடிகைகள் மகளாகவும், மருமகளாகவும், வில்லியாகவும் வந்து வீட்டில் இருப்பவர்கள் மிரட்டி செல்கின்றனர். இதில் பூஜாவின் ரொமான்ஸ், செல்வியின் பாசமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளதாம்.

அபூர்வ ராகங்கள் – பவித்ரா

அபூர்வ ராகங்கள் – பவித்ரா

தென்றல் மூலம் துளசியாக அறிமுகமான ஸ்ருதி 5 ஆண்டுகள் அழுது அழுது கண்கள் எல்லாம் வீங்கிப்போனார். இப்போது ஜீ தமிழில் அன்னக்கொடியும், ஐந்து பெண்களும் தொடரில் வக்கீல் கவுரியாவும், சன் டிவியின் பாசமலர் தொடரில் பவித்ராவாகவும் வந்து மிரட்டுகிறார்.

வாணி ராணி – நக்ஷத்திரா

வாணி ராணி – நக்ஷத்திரா

டிவி தொகுப்பாளினியாக இருந்து சீரியலுக்கு நடிக்க வந்துள்ள புதுவரவு நக்ஷத்திரா. ஆரம்பமே அமர்களம் என்பது போல ராடான் நிறுவனத்தின் வாணி ராணி சீரியலில் அறிமுகம், யார்யா இது என்று கேட்க வைத்துள்ளது. இவர் இன்னும் அழ ஆரம்பிக்கவில்லை... வரும்காலங்களில் அழகான கண்களில் குடம் குடமாய் கண்ணீர் ஊற்றுவார் என்று எதிர்பார்க்கலாம். சீரியல் நடிகைகளைப் பற்றி பட்டியலிட்டால் ஒரு பக்கம் போதாது... இருந்தாலும் ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்த சில நட்சத்திரங்களை மட்டுமே எழுதியுள்ளோம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The television industry of TamilNadu is equally famous as Kollywood. The beautiful and talented celebs of this industry are appreciated by the TamilNadu fans. Let us check the list of top 10 most beautiful Tamil tv serial actresses 2015

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more