»   »  குஷ்பு, ஊர்வசி, கீதா, லட்சுமி ராமகிருஷ்ணன் 2016ல் சர்ச்சையை கிளப்பிய டிவி பஞ்சாயத்துக்கள்

குஷ்பு, ஊர்வசி, கீதா, லட்சுமி ராமகிருஷ்ணன் 2016ல் சர்ச்சையை கிளப்பிய டிவி பஞ்சாயத்துக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் நடித்து போர் அடித்துப் போன நடிகைகள் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ நடுவர்களாக வரத் தொடங்கிவிட்டனர். அதை விட ஒருபடி மேலே தற்போது குடும்ப பிரச்சினையை பஞ்சாயத்து செய்து பரபரப்பை கிளப்பி வருகின்றனர்.

கள்ளக்காதல், குடும்ப தகராறு, இருதார மணம் என தினசரியும் ஏதாவது ஒரு பஞ்சாயத்து டிவி ஸ்டியோவிற்கு வந்து விடுகிறது. இந்த பஞ்சாயத்தை பேச வருபவர்களிடம் நடுவர்கள் வாய் துடுக்காக பேசி அதுவே சர்ச்சையை கிளப்பி புது பஞ்சாயத்தை கொண்டு வந்து விடுகிறது.

2016ம் ஆண்டில் தொலைக்காட்சிகளில் நடந்த பஞ்சாயத்து நிகழ்ச்சிகளில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியவை சிலவற்றை திரும்பி பார்க்கலாம்.

மீண்டு வந்த லட்சுமி ராமகிருஷ்ணன்

மீண்டு வந்த லட்சுமி ராமகிருஷ்ணன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணன், திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா என்ற வார்த்தை டிரெண்ட் ஆகவே மீண்டும் இந்த ஆண்டு லட்சுமி ராமகிருஷ்ணனே பஞ்சாயத்து செய்து வருகிறார்.

தற்கொலையும் வழக்குப் பதிவும்

தற்கொலையும் வழக்குப் பதிவும்

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த பஞ்சாயத்தால் நாகப்பன் என்ற லாரி டிரைவர் தற்கொலை செய்து கொள்ளவே, அவர் மீது டிரைவரின் மகள்கள் போலீசில் புகார் கொடுக்கும் அளவிற்கு பஞ்சாயத்தானது.

நடிகை ஊர்வசி சர்ச்சை

நடிகை ஊர்வசி சர்ச்சை

நடிகை ஊர்வசி பிரபல மலையாள டிவி சேனலில் தம்பதிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஊர்வசி குடிபோதையில் ஆண்களை அவதூறாக பேசுவதாக கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ஒருவர் புகார் அளித்தார். ஊர்வசி மீது பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளார். இதுபற்றி மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வருகிறது.

கீதாவின் பஞ்சாயத்து

கீதாவின் பஞ்சாயத்து

ஜீ தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் நடிகை கீதா பதுக்கு ஜதகா பன்டி என்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓரினச்சேர்க்கையாளர்களான பெண்கள் பெற்றோர்களுடனான பிரச்சனையை தீர்த்து திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதற்கு பஞ்சாயத்து செய்த கீதா, உனக்கு வெட்கமாக இல்லையா, செருப்பால் அடிப்பேன் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

சட்டையை பிடித்த குஷ்பு

சட்டையை பிடித்த குஷ்பு

சன்டிவியில் நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் குஷ்பு. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை தாறுமாறாக பேசுவது, அறிவிருக்கா என்று கேட்பது, சட்டையை பிடித்து அடிக்கப் பாய்வது என ஆரம்பம் முதலே பரபரப்பை கிளப்பி வருகிறார் குஷ்பு. குஷ்பு செய்யும் பஞ்சாயத்தை விட அவரது உடைகளும், அவரது ஹேர் ஸ்டைலும்தான் படு பிரபலம்.

ஸ்ரீ பிரியாவின் குமுறல்

ஸ்ரீ பிரியாவின் குமுறல்

கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நினைத்தால் கேமராவுக்கு பின்னால் செய்யலாம். அவர்களை வழக்கறிஞர் அல்லது கவுன்சிலிங் அளிப்பவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஸ்ரீபிரியா கேட்டார்.

ராதிகாவின் பஞ்சாயத்து

ராதிகாவின் பஞ்சாயத்து

டிவி சேனல்களில் நடக்கும் குடும்ப பஞ்சாயத்துகளை புத்தியில்லாதவர்கள்தான் பார்ப்பார்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார் ராதிகா சரத்குமார். படிப்பறிவில்லாத மக்கள் தான் சிக்குகிறார்கள். புத்தியில்லாதவர்கள் இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதால் இதற்கு ஒரு முடிவு இல்லை என்று பதிவிட்டார் ராதிகா.

நீளும் பஞ்சாயத்து

நீளும் பஞ்சாயத்து

குடும்ப பிரச்சினையை தீர்க்க பஞ்சாயத்து செய்கிறேன் என்று கிளம்பி இப்போது பஞ்சாயத்து செய்பவர்களை பஞ்சாயத்தில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த பஞ்சாயத்துக்கள் இந்த ஆண்டோடு முடியுமா? இல்லை நீளுமா என்பது ரசிகர்களின் மனநிலையைப் பொருத்தது.

English summary
Here is the list of most controversial tv talk show 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil