»   »  உமா மாதிரி பிரியமான மாமியார் கிடைப்பாங்களா? ஆசைப்படும் மருமகள்கள்

உமா மாதிரி பிரியமான மாமியார் கிடைப்பாங்களா? ஆசைப்படும் மருமகள்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமியாரோ மருமகளோ ரொம்ப நல்லவங்களா இருந்துட்டா அந்த இடத்தில் பிரச்சினைக்கே எடமில்லை. ஆனால் தமிழ் சீரியலைப் பொருத்தவரை பிரச்சினைதான் கதையே. மாமியார் மருமகள் பிரச்சினை, அண்ணி, கொழுந்தன் பிரச்சினை என எத்தனையோ பிரச்சினைகள், கூட இருந்தே குழி பறித்தல்தான் அனைத்து சீரியல்களிலும் கதையாக இருக்கிறது.

மகளுக்காக மருமகளின் ஆசைகளை நிராசையாக்கும் மாமியார்கள், மகனுடன் வாழ விடாமல் செய்யும் மெட்டி ஒலி டெரர் மாமியார் தொடங்கி, வாணி ராணியில் மருமகளின் நிம்மதியை கெடுக்க அவளுடைய மருமகளை தூண்டிவிடும் வில்லத்தனம் செய்யும் சாந்தி வில்லியம்ஸ் வரை இன்னமும் டிவி சேனல்களில் வந்து செல்கின்றனர்.

சில டிவி சீரியல்களில்தான் அன்பான, அமைதியான மாமியார்கள் வந்து இதே போல நமக்கு மாமியாரோ, மருமகளோ அமைய மாட்டார்களா என்று ஏங்க வைத்து விடுவார்கள். அப்படி ஏங்க வைக்கும் மாமியார்களில் ஒருவர்தான் பிரியமானவள் தொடரின் நாயகி உமா. மருமகள்களை, மகளாக பாவிக்கும் பாங்கு, அமைதியான பேச்சு என்று மருமகள்கள் மத்தியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

அதேபோல மருமகள்கள் வரிசையில் சொத்துக்காக குடும்பத்தை பிரிக்க நினைக்கும் வில்லி காயத்ரி தொடங்கி, சுயநினைவை இழந்த மாமியாரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த அமைதியான மருமகள் லட்சுமி வரை பலவித மருமகள்கள் சீரியல்களில் வந்து மாமியார்களின் மனதில் அச்சத்தையும், ஆசையையும் விதைத்துச் செல்கின்றனர்.

பிரியமானவள் உமா

பிரியமானவள் உமா

சன் டிவியில் பிரியமானவள் தொடரில் வரும் உமாதான் மாமியார்களில் பெஸ்ட் என்ற பெயரை எடுத்துள்ளார். அந்த அழவிற்கு அழகோடு, அமைதியோ அமைதியான மாமியார்தான் உமா.

அவந்திகா, கவிதா, பூமிகா

அவந்திகா, கவிதா, பூமிகா

உமாவின் மூன்று மகன்களுக்கு திருமணமாகிவிட்டது. அதில் மூத்த மருமகள் அவந்திகா அடாவடி என்றால், கவிதாவோ அப்பாவி, பூமிகாவோ இன்னமும் சின்னப்பிள்ளைதான்.

குலதெய்வம் வடிவுக்கரசி

குலதெய்வம் வடிவுக்கரசி

கண்ணீரும் கம்பலையுமாக டிவி சீரியர்களில் காட்சி தரும் வடிவுக்கரசிக்கு குல தெய்வம் சீரியலில் போல்டான கிராமத்து பெண்மணி வேடம். சும்மா பொளந்து கட்டுகிறார். மகளுக்கு பிடித்த நல்ல அம்மா, மருமகள்களுக்கு பிடித்த நல்ல மாமியாராக வலம் வருகிறார் குல தெய்வம் ஞானாம்பாள்.

 சாந்தி வில்லியம்ஸ்

சாந்தி வில்லியம்ஸ்

மெட்டி ஒலி சீரியலில் இருந்தே அடாவடி மாமியாராய் வந்து டெரர் காட்டுவார் சாந்தி வில்லியம்ஸ். வாணி ராணி, கேளடி கண்மணி சீரியல்களில் வந்தும் அதே வில்லத்தனம்தான் என்பதால் மருமகள்களுக்கு பிடிக்காத மாமியாராகிப் போனார் சாந்தி வில்லியம்ஸ்.

வாணி - ராணி

வாணி - ராணி

வாணியும், ராணியும் இப்போது டீன் ஏஜ் பிள்ளைகளின் அம்மாக்கள். மருமகள்கள், மருமகன்களுக்கு நல்ல மாமியாராக இருக்கின்றனர். வாணியின் தைரியம் சிலருக்கு பிடிக்கும் என்றால் ராணியின் வெகுளித்தனம்தான் நிறைய மருமகள்களுக்கு பிடித்திருக்கிறது.

பூஜா, டிம்பிள்

பூஜா, டிம்பிள்

வாணியின் மருமகள்கள் பூஜாவும், டிம்பிளும்தான் சீரியலில் கெத்து பார்டிகள். டிம்பிள் செய்யும் வில்லத்தனங்களுக்கு சரியான பதிலடி கொடுக்க பூஜாவினால் மட்டும்தான் முடியும்.

சுலோக்சனா

சுலோக்சனா

தெய்வம் தந்த வீடு, லட்சுமி வந்தாச்சு தொடர்களில் நடிக்கும் சுலக்சனா அன்பான அமைதியான மாமியார்தான்.

லட்சுமி, தேன்மொழி

லட்சுமி, தேன்மொழி

லட்சுமி வந்தாச்சு தொடரில் நடிக்கும் மருமகள்கள் தேன்மொழி வில்லி என்றால், லட்சுமியின் அமைதியான நடிப்புதான் அனைவரையும் அட்ராக்ட் செய்கிறது.

தெய்வமகள் மாமியார்கள்

தெய்வமகள் மாமியார்கள்

சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் தொடரில் காந்தியாவதியின் மனைவி சத்யாவின் மாமியார் ஜானகி அமைதியானவர் என்றால், மாமியார் சரோஜாவின் வில்லத்தனமான நடிப்பு கொஞ்சம் ஓவர்தான். அதேபோல சுஜாதாவின் மாமியார் அனுராதாவின் கெத்து, மகன் மீதான பாசம் என கலவையான நடிப்பு சிலருக்கு பிடிக்கத்தான் செய்கிறது.

காயத்ரி, சத்யா

காயத்ரி, சத்யா

தெய்வமகளில் மூத்த மருமகள் காயத்ரி வில்லி என்றால், கடைசி மருமகள் சத்யாதான் ஹீரோயின். இவர்களுக்கு நடுவே ராஜூவின் மனைவியாக வந்து அமைதியான மருமகளாய் நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார் இரண்டாவது மருமகள்.

வம்சம் மாமியார்கள்

வம்சம் மாமியார்கள்

ரொம்ப ரொம்ப மோசமான மாமியார் என்றால் அது வம்சம் வசந்தாதான். தனது மருமகள் உயிரோடு இருக்கும் போதே துரத்தி விட்டு விட்டு மகனுக்கு பலமுறை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யும் மோசமான மாமியார் என்றால் அது வசந்தாதான். சோலையம்மாவும் மோசமான வில்லி மாமியார் என்று பெயரெடுத்துள்ளனர்.

அப்பாவி பூமிகா

அப்பாவி பூமிகா

மலைஜாதி பெண்ணாக இருந்தும் டாக்டர் மதனை திருமணம் செய்து கொண்ட பின்னர் மச்சான் பூமிகாவாகி, பின்னர் அதிரடி அவதாரம் எடுக்கும் பூமிகா இன்னும் எத்தனை முறைதான் தன்னுடைய கணவன் கையினால் தாலி வாங்கிக் கொள்வாரோ தெரியலையே.

தெய்வம் தந்த வீடு மாமியார்கள்

தெய்வம் தந்த வீடு மாமியார்கள்

விஜய் டிவியின் தெய்வம் தந்த வீடு சீரியலிலும் நிறைய மாமியார்கள் வருகின்றனர். அதில் சுதாசந்திரன் அசத்தல் மாமியார் என்றால் வில்லத்தனம் செய்ய இருக்கவே இருக்கிறார் கன்யா பாரதி.

மரகத வீணை மாயாக்கா

மரகத வீணை மாயாக்கா

எம் மருமவளே என்று வாய் நிறைய கூப்பிட்டு அப்ளாஸ் அள்ளுவதில் கிள்ளாடி, வெகுளித்தனமான மாமியார் மரகத வீணை மாயாக்காவிற்கு நிகர் மாயாக்காதான். மாயாக்காவின் பாசத்தை புரிந்து கொள்ளத்தான் சரியான மருமகள் அமையவில்லை.

வள்ளி

வள்ளி

சன் டிவியின் வள்ளி தொடரில் அடாவடி குடும்பத்தில் திருமணமாகி வந்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்து அன்பான மருமகள் என்று பெயரெடுத்திருக்கிறார் வள்ளி.

காமெடி மாமியார்

காமெடி மாமியார்

கோலங்கள் சீரியலில் வில்லி மாமியாராக அறிமுகமாகி இப்போது சின்னப்பாப்பா பெரியபாப்பா சீரியல் மூலம் காமெடி மாமியாராக மாறியுள்ளார் நளினி. அவரது மருமகள்களும் நளினிக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. இவர்களைப் போல இன்னும் நிறைய மாமியார், மருமகள்கள் டிவி சீரியல் மூலம் வீட்டின் வரவேற்பரைக்கு தினசரி வந்து போகின்றனர். அவர்களை எழுதினால் ஒரு பக்கம் போதாது. இல்லத்தரசிகளை அதிகம் பாதித்த மாமியார், மருமகள்களைப் பற்றியே இங்க நாம் எழுதியுள்ளோம்.

English summary
Tamil Nadu TV serials normally called the Mother in Laws and Daughter in laws sagas, are perhaps one of the most damaging in the world. Television has the capability to influence even those in the remote corners of the country. But instead of doing something progressive, these serials show a regressive India.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil