twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரீமிக்ஸ் என்பது கற்பழிப்புக்கு சமம் - எம்.எஸ்.வி. கடுப்பு

    By Shankar
    |

    MSV turns against remixing old hits
    சென்னை: புகழ்பெற்ற பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது கற்பழிப்புக்கு சமம் என்று மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் வேதனை தெவித்துள்ளார்.

    இன்றைக்கு புகழ்பெற்ற பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.

    பெரும்பாலான ரசிகர்கள், மூத்த கலைஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ரீமிக்ஸ் மட்டும் நிற்கவே இல்லை.

    இந்த நிலையில் ஜெயா டிவியின் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சிக்காக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவரிடம் ரீமிக்ஸ் குறித்து கேட்கப்பட்டது. அவர் பதிலளிக்கையில், "பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது ரொம்ப தப்பான காரியம். அதை பண்ண தைரியம் வேண்டும். ரீமிக்ஸ் என்றால் கற்பழிப்பு என்று அர்த்தம். எல்லோருக்கும் திறமை இருக்கிறது. புதுசா பண்ணுங்க. சொந்த கற்பனையை பயன்படுத்துங்க. ரீமிக்ஸ் பண்ண வேண்டாம். ரீமிக்ஸ் என்பது சில நேரம் தப்பாக போய்விடும். அவரவர் கற்பனையில் நல்லது செய்யுங்கள்," என்றார்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி போன்றோரின் பாடல்களுக்கு இசையமைத்தது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், "நான் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினியை நினைத்து பாடல்களை உருவாக்கவில்லை. படத்தின் கேரக்டர்களுக்கு என்ன மெட்டு தேவையோ அதைப் போட்டு கொடுத்தேன். பொருத்தமான பாடல் வரிகளையும் அதில் சேர்த்தேன்.

    அந்த காலத்து பாடல்களை போல் இப்போது இல்லையே என்று பலரும் கேட்கிறார்கல். அந்தக் காலத்துப் பாடல்களைப் போல இப்போதும் போட முடியும். ஆனால் அப்படி கேட்டு யாரும் பாட்டு வாங்குவதில்லையே.

    முன்பெல்லாம் இசைக் கலைஞர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்து பாடல்களை உருவாக்கினோம். இப்போது மிஷின் வந்துவிட்டது. மிஷினே பாட்டு வேலைகளையெல்லாம் செய்கிறது. மிஷினை வைத்து பாட்டுபோட எனக்கு தெரியாது," என்றார்.

    English summary
    Mellisai Mannar MS Viswanatha turned furious against the remix of old hit songs. He says that remixing old hits is equal to rape.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X