பிராச்சியை ஏமாத்துன மகத்துக்கு உன்னை ஏமாத்துவது கஷ்டமா?: யாஷிகாவுக்கு மும்தாஜ் அட்வைஸ்

By Siva

Recommended Video

மும்தாஜ் மடியில் யாசிகா, ஐஸ்வர்யா | biggboss program house mates lying down on Mumtaz lap

சென்னை: பிராச்சியை விட்டுவிட்டு உன்னை காதலித்த மகத்துக்கு உன்னை மறப்பது கடினம் அல்ல என்று மும்தாஜ் யாஷிகாவிடம் தெரிவித்துள்ளார்.

துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை காதலித்த மகத் பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்த இடத்தில் யாஷிகாவை காதலித்தார். இதில் விசேஷம் என்னவென்றால் யாஷிகாவுக்கும் ஒரு காதலர் இருக்கிறார்.

யாஷிகாவின் காதல் துவங்கிய வேகத்தில் மகத் வெளியேற்றப்பட்டார்.

சட்டை

சட்டை

பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற மகத்தின் சட்டையை மோந்து மோந்து பார்த்துக் கொண்டிருந்தார் யாஷிகா. முடியலடா சாமி என்று நாம் கூறியது பிக் பாஸ் காதில் கேட்டுவிட்டது போன்று. உடனே ஒரு ஜோக்கரை அனுப்பி அந்த சட்டையை எடுத்து வர வைத்துவிட்டார். மேலும் அவரின் செல்லம் ஐஸ்வர்யாவின் கரடி பொம்மையும் ஜோக்கர் எடுத்துச் சென்றுவிட்டார்.

அறிவுரை

அறிவுரை

படுக்கையில் படுத்துக் கொண்டு மகத்தை நினைத்து ரொம்பவே ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தார் யாஷிகா. ஐஸ்வர்யா சொல்லியும் கேட்காத யாஷிகா அருகில் வந்து பேட்டா, இப்படி இருக்காதே. இது மன அழுத்தத்தின் அறிகுறி என்று பாசமாக பேசினார் மும்தாஜ். யாஷிகாவும் மும்தாஜின் பாச மழையில் சுகமாக நனைந்து கொண்டார்.

காதல்

காதல்

இங்கே உருவான ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியே வருவது ரொம்ப ரொம்ப ஈஸி. 3 வருஷமாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து இங்கே வந்து உங்களுடன் மூவ் ஆன் ஆகிவிட்டார். உங்களுடன் 70 நாட்கள். வெளியே போய் மூவ் ஆன் ஆவது பெரிய விஷயம் இல்லை என்று மகத்தின் லட்சணத்தை யாஷிகாவிடம் புட்டு புட்டு வைத்தார் மும்தாஜ். இதை மகத் பார்த்தால் மும்தாஜை சபிக்காமல் விட மாட்டார். பிராச்சி பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

அதை பற்றி இப்ப யோசித்து உன்னுடைய நாளை கெடுக்காதே. எனக்கு இந்த மாற்றம் தேவைப்பட்டது. அதனால் தான் இங்கு வந்தேன். வெளியே நிறைய பேர் இந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை வீணடிக்க வேண்டாம் என்று மும்தாஜ் யாஷிகாவுக்கு அறிவுரை வழங்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X