»   »  நான் நடிகர் விஜய் ரசிகை… பின்னணிப் பாடகி ராகினிஸ்ரீ

நான் நடிகர் விஜய் ரசிகை… பின்னணிப் பாடகி ராகினிஸ்ரீ

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil
Raginisri
ஜெயா டிவியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொகுத்து வழங்கிய 'என்னோடு பாட்டுப் பாடுங்கள்' நிகழ்ச்சியில் அறிமுகமாகி, விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008ல் பிரபலமானவர் ராகினிஸ்ரீ. இன்றைக்கு திரைப்படப் பின்னணிப் பாடகியாக உயர்ந்துள்ள அவர், துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வாலுக்கு குரல் கொடுத்துள்ளார். தன்னுடைய இந்த பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

டி.வி. சேனல்கள் நடத்தின இசை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டேன். பாராட்டுகள், அங்கீகாரம்னு என்னை அறியாம, என் வாழ்க்கை இசை உலகத்துக்குள்ள வேகமெடுக்க ஆரம்பிச்சது.

திடீரென்று யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 'காதல் டூ கல்யாணம்' படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி படத்தில் கதாநாயகி காஜல் அகர்வாலுக்கு பின்னணி பேச வாய்ப்பு கிடைத்தது.

படம் பார்த்த எல்லாரும் ஹீரோயின் குரல் நல்லாருக்குன்னு பாராட்டறாங்க. அத்தனை கிரெடிட்டும் முருகதாஸ் சாருக்குத் தான்...'' என்கிறார் ராகினி. திரைப்படப்பாடல், பின்னணிக்குரல் என்று அசத்துகிற ராகினிஸ்ரீ நடிகர் விஜய்யின் ரசிகையாம். பிரசாத் ஸ்டூடியோவில் 'துப்பாக்கி' பட பிரமோஷன் நடந்தபோது அங்கு சென்ற ராகினி ஸ்ரீயை விஜய்யிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். அப்போது விஜய், காஜலோட நடிப்புக்கு உங்க குரல் கரெக்ட்டாக மேட்ச் ஆயிருந்தது' என்று பாராட்டி கை கொடுத்தாராம். அப்போது விஜய் உடன் போட்டோ எடுத்த ராகினிஸ்ரீ, அது கனவா, நனவான்னு இன்னும்கூட என்னால நம்ப முடியலீங்க என்கிறார்.

எப்படியோ தமிழ் திரைப்படத்துறைக்கு ஆண்ட்ரியா, சின்மயி வரிசையில் இன்னும் ஒரு பாடகி, ப்ளஸ் பின்னணி குரல் கிடைத்திருக்கிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Raginisri bascially good carnatic singer and rendered many live stag performance in various grounds even one in China..Stepped in to Television media when she was doing philosphy through Spb " ennodu paatu paadungal" which turned out to be super duper debut for her in media. Then came "airtel super singer" in Vijay Tv won many rounds as best singer and a finalist with flying colours.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more