»   »  இசையும் பயணமும்தான் என் பொழுதுபோக்கு… பிரகதி

இசையும் பயணமும்தான் என் பொழுதுபோக்கு… பிரகதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரகதி... பட்டாம்பூச்சியாய் நாடு விட்டு நாடு பறந்து பாட்டுப் பாடும் இந்த சிறுமி விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலம்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்தாலும் அழகாய் தமிழ் பேசுகிறார். இப்போது கர்நாடக இசை மேடைகளில் மார்கழிக் கச்சேரிகளை நடத்துகிறார்.

பரதேசி படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் பின்னணி பாடியதன் மூலம் சினிமாவிலும் அடி எடுத்து வைத்துள்ளார். தன்னுடைய பொழுது போக்கே இசையும் பயணமும்தான் என்கிறார் பிரகதி.

இசைக்குடும்பம்

இசைக்குடும்பம்

பிரகதியின் குடும்பத்தினர் இசையை சுவாசிக்கும் இசைக்குடும்பமாம். எனவேதான் இசையை நேசிக்கும் பெண்ணாக வளர்ந்தேன் என்கிறார்.

கலிபோர்னியாவில் பிறந்தேன்

கலிபோர்னியாவில் பிறந்தேன்

அப்பாவிற்கு அமெரிக்காவில் வேலை என்பதால் பிறந்து வளர்ந்த தெல்லாம் அமெரிக்காதான். ஆனால் வீட்டில் தமிழ் பேசி, பழகி, சென்னையில் பாட்டி வீட்டுக்கு வரும் போது அதை முழுமையாக கற்றுக் கொண்டிருக்கிறார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர்

சூப்பர் சிங்கர் ஜூனியர்

சிறுவயதிலேயே மேடையில் பாடிய அனுபவம் உண்டாம் பிரகதிக்கு, அதுதான் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3யில் இரண்டாம் இடம் வெல்லக் காரணமாக அமைந்ததாம்.

ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு

ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு

சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதிச் சுற்றின் போது நடுவராக வந்த ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டியது சிறகுகள் விரித்த சந்தோசத்தை ஏற்படுத்தியதாம்.

சினிமாவில் பின்னணி

சினிமாவில் பின்னணி

தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷ் பரதேசி படத்தில் பாடிய பிரகதி, அனிருத் இசையில் வணக்கம் சென்னை படத்தில் பாடியுள்ளாராம்.

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

பிரகதி தனியாக பட்டாம்பூச்சி என்ற ஆல்பத்தை தனியாக வெளியிட்டுள்ளார். விரைவில் காதல் வைரஸ் என்ற ஆல்பத்தை பாடியுள்ளாராம்.

இசைக்காக பயணம்

இசைக்காக பயணம்

அமெரிக்காவில் 10ம் வகுப்பு படித்தாலும் லண்டன், ஆஸ்திரேலியா, சென்னை என்று பறந்து பறந்து பாடுகிறார். கேட்டால், இசையும், பயணமும்தான் என் பொழுது போக்கு என்கிறார்.

சினிமாவில் நடிக்க?

சினிமாவில் நடிக்க?

மணிரத்னம், ராஜீவ் மேனன் ஆகியோர் படங்களில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாம் ஆனாலும் யோசித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். இப்போது இசையில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம் பிரகதி.

English summary
Pragathi Guruprasath is an Indian playback singer from Califonia. She was the runner up in the third season of the Super singer show. She has sung for music composers such as Anirudh Ravichander and G. V. Prakash Kumar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil