twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாம்பு கடிக்கு பக்காவான பச்சிலை வைத்தியம் நம்ம முத்து செல்வி கையில இருக்குதே...!

    |

    சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் கிராமத்து வாடை வீசுகிறது என்றாலும், நவீனகளும் இல்லாமல் இல்லை. அது சரி இப்போ நவீனங்கள் இல்லாத இடம் எது?

    சவுந்தர்யாவுக்கு மாமா மேல ரொம்ப ஆசை வந்திருச்சுமா... வீட்டுல நடக்கறது எல்லாம் உனக்கு தெரியுதா இல்லையான்னு சவுந்தர்யாவின் அக்கா கேட்கறா. என்ன நடக்குதுன்னு எனக்கு தெரிஞ்ச வரைக்கும் தெரியுது... அதுக்கு மேல என்ன நடக்குதுன்னு நீ சொன்னாத்தானே தெரியும்னு அம்மா சொல்றாங்க.

    கண்ணன் மாமாவுக்கு சவுந்தர்யா ஆசையா வாங்கி குடுத்த பிரேஸ்லெட்டை காணோம்னு சொன்னவுடனே பதறிப் போய் அழ ஆரம்பிச்சுட்டா. கையில முத்தமெல்லாம் குடுக்கறாம்மா.. இதை காணோம்னு சொன்ன உடனே நீயே என்னைவிட்டு போன மாதிரி ஆயிருச்சு மாமான்னு சொன்னாம்மா. அதனால மாமா தனியாதான் தோப்புல இருக்கும். பேசி முடிச்சுருமான்னு அம்மாவை தோப்புக்கு அனுப்பி வைக்கறா.

    மறக்க முடியாத சகுந்தலா தேவி.. இப்ப டிவியில் வலம் வருது.. பார்த்தீங்களா! மறக்க முடியாத சகுந்தலா தேவி.. இப்ப டிவியில் வலம் வருது.. பார்த்தீங்களா!

    முத்த செல்வி

    முத்த செல்வி

    தோப்பில் சின்னவரின் அக்காவை கண்ட முத்துச்செல்வி, ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, மோர் குடிங்கம்மான்னு வீட்டுக்குள்ள ஓடறா. பொறுமையா பானையில் இருக்கும் மோரை தம்ளரில் ஊத்தி, அதில் உப்பு, கொத்து மல்லித் தழை , கறிவேப்பிலை போட்டு ஆற்றி கொண்டுவர

    அம்மாவை பாம்பு

    அம்மாவை பாம்பு

    அதற்குள் எஜமானி அம்மாவை பாம்பு கடித்து, நுரை தள்ள கீழே விழுந்துடறாங்க. அக்கா, எஜமானி அம்மாவை பாம்பு கடிச்சுருச்சுன்னு சொன்னதுதான் தாமதம், சினிமாவில் வருவது போல, தாவணியைக் கிழித்து காலில் கட்டிவிட்டு, அந்த இடத்தை அரிவாளால் கீறி, ரத்தத்தை உறிஞ்சு எடுக்கிறாள்.

    அங்கும் இங்கும்

    அங்கும் இங்கும்

    அது காட்டு, தோப்பு என்பதால் அங்கும் இங்கும் ஒடி பச்சிலையைத் தேடுகிறாள். பறித்து வந்து, தங்கையிடம் கொடுத்து இடிச்சு தர சொல்கிறாள்.தங்கை ஒரு புறம் இடிக்க, அவசர அவசரமாக இரு உள்ளங்கைகளிலும் பச்சிலையை வைத்து பிழிந்து கடிபட்ட இடத்தில் பிழிஞ்சு விடறா. அடுத்து நசுக்கிய பச்சிலை சாற்றை ஒரு டீஸ்பூன் அளவு வாயில் விட்டு குடிக்க சொல்கிறாள்.

    அம்மா பிழைச்சுட்டாங்க

    அம்மா பிழைச்சுட்டாங்க

    அவ்வளவுதான் ... எஜமானி அம்மா பிழைச்சுக்கறாங்க. இதை அறியாத கண்ணன் அக்காவைக் காப்பாத்த வைத்தியரை அழைச்சு வர, அவரும் பார்த்துவிட்டு, ஒரு துளி விஷம் கூட இல்லைங்க. இந்த பொண்ணு எல்லா வேலையும் பார்த்துருச்சுன்னு சொல்லிட்டு கிளம்பறார்.

    இப்படித்தான்

    இப்படித்தான்

    அந்த காலத்துல இப்படித்தான் மக்கள் தொகை கம்மி. பெரும் கட்டமைப்பு இல்லை., தார் சாலைகள் போட்ட இடங்களில் வசிக்கலை. எல்லாம் காடு மேடுகளில் குடிசை கட்டித்தான் வாழ்ந்தாங்க. அப்போ யாரையும் பாம்பு கடிச்சிடுக்காதா?

    பச்சிலைகள்

    பச்சிலைகள்

    முத்துச்செல்வி மாதிரி பச்சிலை வைத்தியம் மூலம்தான் அப்போது வைத்தியர்கள் எனப்படுபவர்கள் காப்பாத்தி இருப்பார்கள். ஆனால், இனி வரும் காலங்களில் எப்போதும் இதுபோல காட்சிகள் நிஜத்தில் நடக்க வாய்ப்பில்லை எனும்போது நாம் தொலைத்தவைகள் அதிகம் என்றே தோன்றுகிறது.

    English summary
    Sun TV's belly serial is the smell of the village, but with modernity. Which is the place where there is nothing now?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X