twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Kanmani Serial: வாடகைத் தாய்...சிக்கலோ சிக்கல்...பாவம் முத்துச்செல்வி

    |

    சென்னை: முத்துச்செல்வி, கண்ணன் சவுந்தர்யா குழந்தைக்கு வாடகைத் தாயா இருந்தாலும் இருந்தா... படும் பாடு பார்க்கையில் ஐயோ பாவம்னு இருக்கு. ஓடி ஒடி ஒளிந்து கடைசியில் மாட்டிக்கிட்டான்னு நினைக்கற மாதிரியே ஒரு கனவு.

    சன் டிவியின் கண்மணி சீரியலில் பிள்ளையை சுமந்தத்துக்கு சொத்து கேட்டு சொந்தம் கொண்டாடுவாளோன்னு நினைச்சு. கிருஷ்ணவேணி அவள் முடியைப் பிடித்து இழுத்து வெளியில் கொண்டு வந்து தள்ளிவிடும்போது பகீர் என்று இருக்கிறது.

    விஜயலட்சுமி அம்மாவின் காலைப் பிடிச்சுக்கிட்டு, சவுந்தர்யா அம்மா குழந்தையை நல்லபடியா பெத்துக் குடுத்துட்டு, பேசாம போயிடறேன்மான்னு முத்துச்செல்வி அழும்போது, வாடகைத் தாய்னு ஈஸியா சொல்லிடறோம்...இவ்ளோ சிக்கல் இருக்கான்னு மலைப்பா இருக்கு.

    தத்து எடுப்பது வாடகைத் தாய்

    தத்து எடுப்பது வாடகைத் தாய்

    பிராக்டிகலாக ஒரு விஷயத்தை செய்யும்போதுதான் அதில் எவ்வளவு சிக்கல்கள் ... பிரச்சனைகள் வரும் என்பதை அறிய முடியும். வாடகைத் தாய், பிள்ளைகளைத்த தத்து கொடுப்பது, எடுப்பது என்பதில் இப்படித்தான் பலத்தையும் யோசித்து செய்ய வேண்டியதாக ...அப்படியே செய்தாலும் சில சமயம் சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கிறது.

    கண்மணி சீரியல்

    கண்மணி சீரியல்

    கண்மணி சீரியலில் நல்ல வெயிட்டான கதை, அப்படியான காட்சிகள் என்று சீரியல் இருந்தாலும், ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கத்தும் காட்சிகள் இல்லை. ஒருவருக்கு ஒருவர் கோபமாகப் பேசிக்கொண்டாலும், பார்ப்பவர்களை அந்த கோபமோ எதாவது ஒரு வகையில் பாதிக்கும் அளவுக்கும் காட்சிகள் இல்லை. ஒரு தெளிந்த நீரோடை போல எபிசோட் நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.

    எமோஷன் உண்டு

    எமோஷன் உண்டு

    தேவையான இடத்தில் நம்மையும் மறந்து கண்கலங்கும் அளவுக்கான எமோஷன் காட்சிகள் பல எபிசோடுகளில் இருந்தது.. இருந்தும் வருகிறது. முத்துச்செல்வி என்கிற கிராமத்து வெள்ளந்தியான பெண்ணை வாடகைத் தாயா ஆக்கி, அவள் பயந்து ஓடுவது. சின்னவர் குடும்பத்துக்கு நல்லது மட்டுமே செய்ய நினைப்பது என்று முத்துச்செல்வி கதாபாத்திரம் செம!

    கண்ணன் சவுந்தர்யா

    கண்ணன் சவுந்தர்யா

    முத்துச்செல்வியோடு கூடவே பயணிக்கும் படியாக சின்னவர், சவுந்தர்யா அம்மா என்று நல்ல முக்கோண கதையை கொண்டு வந்து இருக்கார் இயக்குநர். முத்துச்செல்வி இனியும் பயந்து வெளியில் எங்கும் ஒடி ஒளிந்துக் கொள்ளாமல் மூவரும் ஒரே வீட்டில் இருக்கும்படியான காட்சிகளை இனி வரும் எபிசோடுகளில் நேர்த்தியாக காண்பித்தால் உண்மையில் இயக்குநர் சாமர்த்தியசாலிதான்.

    English summary
    kanmani serial is a good weight story, such scenes are not so romantic, but very emotional. There are no scenes in which people are angry at one another, but at least in some way. The episode moves like a clear stream.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X