»   »  நாகின் சீசன் 2 - மௌனிராய் ரசிகர்களே...

நாகின் சீசன் 2 - மௌனிராய் ரசிகர்களே...

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலர்ஸ் டிவியில் பரபரப்பான திருப்பங்களுடன் 'நாகின்' என்ற பெயரில் ஒளிப்பரப்பான இந்த சீரியல், ஐய்யய்யோ முடிஞ்சுருச்சே என்று இந்தி ரசிகர்களை தவிக்கவிட்டு கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது. டி.ஆர்.பி ரேட்டிங்கையும், இளசுகளின் பல்ஸ் ரேட்டையும் ஒருசேர ஏறவைத்த இந்த சீரியலின் 'சீசன் 2' மெளனி ராயின் ரசிகர்களுக்காகவே அக்டோபர் 8ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இந்த சந்தோச தகவலை மௌனிராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார்.

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாகின் டப்பிங் செய்யப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. நாகினி இரவு, பகல் என இரு நேரங்களிலும் ஒளிபரப்பாகி டிஆர்பியை அள்ளி வருகிறது. இது ஸ்ரீப்ரியா நடித்த நீயா பட கதைதான். ஆனால் சற்றே ரொமான்ஸ் நிறைந்த சுவாரஸ்யமான கதை

நாகமணியைக் காலம்காலமாக காப்பாற்றி வருகின்ற தன்னுடைய அப்பா, அம்மாவைக் கொன்ற நண்பர்கள் ஐந்து பேரைக் கொல்ல, ஆத்திரத்தில் துடித்து பெண்ணுருவம் எடுத்து வரும் நல்லபாம்புதான் ஷிவன்யா. கூடவே மற்றொரு நாகினியான 'சேஷா'. இந்த இருபாம்புகளுக்கும் இப்போது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

ஷிவன்யா - கார்த்திக்

ஷிவன்யா - கார்த்திக்

நாகமணியைத் திருடிக் கொண்டுவந்த நண்பர்களில் மெயின் வில்லனின் மகனுக்கு ஷிவன்யா மீது காதலோ காதல். கல்யாணத்தன்று ஏற்கனவே மணமகளாய் நிற்கும் நீண்ட நாள் தோழிக்கு டாட்டா காட்டிவிட்டு ஷிவன்யாவைக் கல்யாணம் கட்டிக் கொள்கிறார் ஹீரோ கார்த்திக்.

அழகான பாம்புகள்

அழகான பாம்புகள்

கார்த்திக் உடன் சிவன்யாவுக்கு இனிதே திருமணம் நடக்கிறது. சூர்யா ஊரிலிருந்து தன் இளம் மனைவி உடன் வருபவரை தன் தாய், தந்தையை கொன்ற ஐவரில் இவரும் ஒருவராக இருக்கலாம் என ஷிவன்யாவிடம் ஷிரேயா கூற, அவருக்கு கையில் ஆறு விரல் இருப்பதை தன் குருநாதர் கூறியதாகவும் சொல்லுகிறார். சூர்யாவை கொல்ல ஷிவன்யா திட்டமிட, சிவன் கோவிலுக்கு வரவழைத்து சூர்யாவை மணியால் அடித்து ஷிவன்யா, ஸ்ரேயா இருவரும் நாகங்களாக மாறி கொல்வது என வேகமான கதை ஓட்டம். யாகம் நடத்தி எல்லா இச்சாதாரி நாகங்களை கொல்ல, காளியிடம் தன் கதையை கூறி அனைத்து நாகங்களையும் காப்பாற்றுகிறார்.

ஷிவன்யாவிற்கு அடிபட்டிருச்சே

ஷிவன்யாவிற்கு அடிபட்டிருச்சே

கார்த்திக் தன் தந்தையை கொல்ல வந்த சிவன்யாவை ருத்ரம்மா கொடுத்த கத்தியை வீசி கொல்ல, காயத்துடன் தப்பி சென்றவளை, வீட்டில் இருந்து வெளியே போக முடியாமல் கட்டப்பட்ட தோரணத்தை எரித்து விட்டு ஸ்ரேயா அவரை காப்பாற்றி குருவிடம் ஒப்படைக்க, ஷிவன்யாவாக மாறிய அவரிடம் கார்த்திக் காதல் வசனம் பேச, இது ஷ்ரேயாவை கோபப்படுத்துகிறது.

காதல் காட்சிகள்

ஷிவன்யா தன் கணவனுடன் வந்து மகாலிங்கத்தை பூஜித்ததால் தான் பிழைக்க முடியும் என்பதால் ருத்ரம்மாவாக மாறி கார்த்திக் , சிவன்யா இருவரையும் கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு பல சோதனைக்கு பிறகு நல்லபடியாக பூஜை முடிந்து கார்த்திக் ஷிவன்யா உருவில் இருக்கும் ஷ்ரேயாவுடன் திரும்புகிறார். அவரின் காதல் லீலைகளில் மனம் தடுமாறுகிறார். கார்த்திக் முதுகில் இருக்கும் பச்சை குத்தப்பட்டதை பார்த்து எங்கோ பார்த்த ஞாபகமாக இருப்பதை உணர்கிறார். ருத்திரம்மா முன்பு காளி தோன்றி, பலத்தை இழந்து விட்டதாக கூறி , மீண்டும் பூஜை செய்ய முடிவு எடுக்கிறார்.

இச்சாதாரி நாகங்கள்

இச்சாதாரி நாகங்கள்

ஷிவன்யா நாகமாக மாறும் தன்மையை இழக்க, தன் வீட்டுக்கு வரும் போது ஷிவன்யா உருவில் இருக்கும் ஷ்ரேயா பாம்பாக மாறி வெளியேறுவதை பார்த்து விட்ட கைலாஷ் மனைவி ரம்யா, அனைவரையும் அழைத்து ஷிவன்யா தான் நாகினி என கூற, சக்தி இழந்த ருத்திரம்மா , பாம்பாக மாற முடியாமல் போன ஷிவன்யாவை சோதனைக்கு உள்ளாக்கி, அவர் நாகினி இல்லை என கூறுகிறார்.

ரொமான்ஸ் அதிகம்தான்

ரொமான்ஸ் அதிகம்தான்

கைலாஷ் உறவை முறித்து கொள்ள நினைக்கும் ஹரிஷ்சை சமாதானப்படுத்தி அவரை கொல்லுவதற்கு வீட்டிலேயே தங்க வைக்கிறார்.
தான் இல்லாத போது கார்த்திக்கு அதிகம் இடம் கொடுத்து விட்டதாக ஸ்ரேயாவிடம் கூற, அவரோ கார்த்திக்குடன் தனக்கு எதோ ஒரு உறவு இருப்பதாக நினைக்கிறார். ஷிவன்யா, கார்த்திக் இடையேயான காதல் காட்சிகள் சினிமாவைப் போல உள்ளது. இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த நாகினி இப்போது சன்டிவியில் மதியம் நேரத்திலும் ஒளிபரப்பாகிறது.

மௌனிராய்

மௌனிராய்

காதல் காட்சிகள் பெரிய திரையைப் போல உள்ளது. நம்ப முடியாத பல விஷயங்கள் நம்பும் படி பிரம்மாண்டமாக காட்டியிருப்பது தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சாதனை. இதில் ஹைலைட்டே நாகினியாக வரும் மெளனி ராயும், குட்டி நாகினியான அடா கானும்தான். இந்தி சீரியல் டப்பிங் என்பதால் எந்த சென்சாரும் பெரிதாக கிடையாது. ஒற்றை பீஸ் மாடர்ன் டிரெஸ்சில் கூட இளவரசியாக ஜொலிக்கிறார் மெளனி ராய்

நாகினி சீசன் 2

ஷிவான்யாவும் கார்த்திக்கும் ஒன்றாக இணைந்தார்களா? ஷேசாவும், ஷிவன்யாவும் என்னவானார்கள் என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே இரண்டாவது சீசன் தொடங்கப் போகிறது. அதற்கான புரமோ, டீசரை நாயகிகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகின்றனர்.

English summary
Mouni Roy-starrer Naagin 2’s fans are all excited and the reason is that the new season is all set for its premiere. The show’s promo teased us with the 25-year time leap the show will witness, along with Mouni now in double roles. The show will kick-start on October 8.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil