இப்போவும் டச்லதான் இருக்கோம்.. அதுக்குதான் வெயிட் பண்றேன்.. நாதஸ்வரம் சண்முக பிரியா ஓபன் டாக்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி சண்முக பிரியா. இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் உடல்நல குறைவால் அரவிந்த் கடந்த 2024அம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டகியிருக்கிறது.
கோவையை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ருதி சண்முக பிரியா நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு முயற்சி செய்தார். அந்த முயற்சிக்கு பலனாக சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. திருமுருகனுக்கு தங்கைகளில் ஒருவராக் ராகிணி கேரக்டரில் நடித்திருந்தார். அது அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கல்யாண பரிசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார்.
திருமணம்: சின்னத்திரை உலகில் கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலைமையில் அரவிந்த் சேகர் என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் திருமண வாழ்க்கையை சுமூகமாக ஓட்டிக்கொண்டிருந்தார்கள். கணவரோடு சேர்ந்து சோஷியல் மீடியாக்களில் ரீல்ஸ் போடுவது, வீடியோ போடுவது என்று இருந்தார்.

உயிரிழந்த கணவர்: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த 2024ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார் அரவிந்த். பாடி பில்டரான அவர் ஓவராக ஒர்க் அவுட் செய்ததால்தான் உயிரிழந்துவிட்டார் என்று பேச்சுக்கள் கிளம்பின. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்தார் சண்முக பிரியா. கணவரின் இறப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்துவிட்டார்.
அதனால் இல்லை: அவர் ஒரு பாடி பில்டர், ஜிம் பயிற்சியாளர். அதனால்தான் உயிரிழந்தார் என்று சொல்வதில் எல்லாம் உண்மை இல்லை' என்று குறிப்பிட்டிருந்தார். அரவிந்த் சேகரின் உயிரிழப்பு ஸ்ருதியை மொத்தமாக தாக்கியது. கணவரின் இழப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த அவர்; சன் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் தற்போது அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஸ்ருதியின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "என்னுடைய கரியர் ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதும் என்னை ராகிணி என்றுதான் அடையாளம் காண்கிறார்கள். இப்போது நடிக்கும் சீரியல்களிலும் எனக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் என்னுடைய பிராண்ட் என்பது நாதஸ்வரம்தான். அந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பான பிறகு அதற்கான ரிசப்ஷன் மேற்கொண்டு அதிகமாகியிருக்கிறது. அந்த சீரியலில் என்னுடன் நடித்தவர்கள் இன்னமும் டச்சில்தான் இருக்கிறார்கள்.
நாதஸ்வரம் 2: அவர்கள் எனக்கு சொந்த தங்கைகள் மாதிரிதான் இருக்கிறார்கள். இப்போவும் நாங்கள் மீட் செய்துகொள்வோம். எல்லோரும் வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள். இடையில் ஒரு கெட் டூ கெதர் வைத்தோம். திருமுருகன் புதிதாக ஒரு சீரியல் எடுக்கப்போகிறார் என்று சொல்கிறார்கள். அதற்குத்தான் நாங்கள் வெயிட் செய்துகொண்டிருக்கிறோம். ஒருவேளை அது நாதஸ்வரம் சீரியலின் இரண்டாவது பாகமாக இருந்தால் நான் கண்டிப்பாக இருப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











