»   »  சென்னைக்கு 5 .. ஹைதராபாத்துக்கு 25.. தெலுங்கு சீரியலில் ரொம்பப் பிசியாம் "சின்னப் பாப்பா"!

சென்னைக்கு 5 .. ஹைதராபாத்துக்கு 25.. தெலுங்கு சீரியலில் ரொம்பப் பிசியாம் "சின்னப் பாப்பா"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் அம்மா, அத்தை, வில்லி கதாபாத்திரங்களில் நடித்தாலும் டிவி காமெடி சீரியல்களிலும் நடித்து வருகிறார் நளினி. இப்போது தெலுங்கு சீரியலிலும் பிஸியாகிவிட்டாராம். ஏற்கனவே ஒரு தெலுங்கு சீரியலில் நடித்து வரும் நளினி மீண்டும் ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதால் மாதத்திற்கு 25 நாட்கள் ஹைதராபாத்திலேயே இருக்கிறாராம். சின்னப்பாப்பா சீரியலுக்காக சென்னை வந்து போகிறாராம்.

பெரிய திரையில் அறிமுகமாகி கதாநாயகியாக நடித்து, இப்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டிருப்பவர் நளினி. சன் டிவியில் வில்லத்தனமான மாமியாராக நடித்து இல்லத்தரசிகளின் திட்டுக்களை வாங்கிக்கட்டினார்.

இப்போது சின்ன பாப்பா பெரிய பாப்பா நகைச்சுவை தொடரில் நடித்து வருகிறார். சனிக்கிழமை இரவு சன்டிவியில் ஒளிபரப்பாகிறது இந்த தொடர்.

தெலுங்கு சீரியல்கள்

தெலுங்கு சீரியல்கள்

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நளினி ஏற்கனவே கதாநாயகியாக தெலுங்கு மக்களுக்கு அறிமுகமானவர்தான். இதனால் அவருக்கு தெலுங்கு சீரியல் வாய்ப்புகள் பல வந்தது. ஆனால் குடும்ப பணிகள் காரணமாக ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.

சீரியல்களில் பிஸி

சீரியல்களில் பிஸி

தற்போது குழந்தைகள் திருமணம் முடிந்து செட்டிலாகிவிட்டதால் குடும்ப பணிகளிலிருந்து விடுபட்டுவிட்டதால் ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார். கோலங்கள் தொடரில் மாமியாராக நடித்தது அவருக்கு சீரியலில் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றுத்தந்தது.

2 சீரியல்கள்

2 சீரியல்கள்

தெலுங்கு சீரியலில் அம்மா நா கூடாலா தொடரில் நடித்தவர் இப்போது மேலும் ஒரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் பிசியாகிவிட்டதால்தான் தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சின்னப்பாப்பா பெரிய பாப்பா

சின்னப்பாப்பா பெரிய பாப்பா

நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக உள்ள நளினி, தெலுங்கில் இரண்டு தொடர்களில் நடித்து வருவதால் மாதத்தில் 25 நாட்கள் ஹைதராபாத்திலும், 5 நாட்கள் சின்ன பாப்பா பெரிய பாப்பாவுக்காகவும் சென்னையிலும் இருந்து நடித்து வருகிறார்.

English summary
Actress Nalini seems to be enjoying this phase of her career. After all, she is getting to play a variety of characters on screen on television.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil