»   »  அடடே.. நம்ம நமீதா.. பிக் பாஸ் வீடு சும்மா சூடேறுதுங்க!

அடடே.. நம்ம நமீதா.. பிக் பாஸ் வீடு சும்மா சூடேறுதுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக வந்து நடனமாடிய நமீதா பிக் பாஸ் வீட்டிற்குள் குடியேறியுள்ளார். விஜய் டிவியில் நடிகர் கமல் நடத்தும் பிக்பாஸ் வீட்டிற்குள் 15 பிரபலங்கள் குடியேறியுள்ளனர்.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று கூறி 15 பேரையும் கண்காணிக்கப் போகிறார் கமல். இந்த நிகழ்ச்சி ஜூன் 25 முதல் தொடங்கியுள்ளது.

Namitha heats up Big Boss house

நடிகர்கள் ஸ்ரீ, வையாபுரி, கணேஷ் வெங்கட்ராம், சினேகன், சக்தி வாசு, கஞ்சாகருப்பு, ஆரார், பரணி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் குடியேறியுள்ளனர்.

அனுயா, ஆர்த்தி கணேஷ், ரெய்ஷா, காயத்ரி ரகுராம், ஓவியா, நமீதா ஆகிய நடிகைகளுடன் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஜூலினாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் குடியேறியுள்ளார்.

தினசரி இரவு 8.30 மணிமுதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பு

Namitha heats up Big Boss house

நமீதாவின் வரவு நிச்சயம் யாருமே எதிர்பார்க்காத ஒன்றுதான். ஏனெனில் பிக்பாஸ் வீட்டிற்குள் குடியேறப்போகும் பிரபலங்கள் பற்றி கடந்த 2 தினங்களாகவே சமுக வலைத்தளங்களில் ஒரு லிஸ்ட் உலா வந்தது. அதில் கூட 14 பேர் என்றுதான் கூறியிருந்தனர்.

ஆனால் 15வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் குடியேறியுள்ள நமீதா மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்துவார் என்றே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Actress Namitha was the surprise addition to the the Big boss house and it has created the hype

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil