»   »  ‘மானாட மயிலாட’ மனதிற்கு உற்சாகம் தருகிறது – நமீதா

‘மானாட மயிலாட’ மனதிற்கு உற்சாகம் தருகிறது – நமீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil
" 'மச்சான் சூப்பர் மச்சான்' டான்ஸ்ல கலக்கிட்டே'' என்று கூறி பறக்கும் முத்தத்தை கொடுத்து பங்கேற்பாளரை உற்சாகப்படுத்துவார் மானாட மயிலாட ஜட்ஜ் நமீதா. இது போன்ற பாராட்டினை பெறவேண்டும் என்பதற்காகவே நடனப்போட்டியில் பங்கேற்பவர்கள் இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் தன் கவர்ச்சியான நடிப்பால் கலக்கி அதனால் எக்கச்சக்க ரசிகர்களை தக்கவைத்திருக்கும் நமீதா மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக வந்து பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் பேசும் கொஞ்சும் தமிழை கேட்பதற்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தனது சின்னத்திரை பயணம் குறித்து அவர் சொல்வதை படியுங்களேன்.

'மானாட மயி​லாட' ஒரு வெற்றிகர​மான நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி மூல​மாக பாராட்​டு​கிற வேலையை நான் செய்து வருகி​றேன்.இதை யார் வேண்டுமானா​லும் செய்ய​லாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, போட்டியாளர்க​ளுக்​கும், அந்த நிகழ்ச்​சியை பார்க்​கும் ரசிகர்க​ளுக்​கும் இன்​னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது.

சினிமாவை தவிர இன்று எனக்கு கிடைத்தி​ருக்​கும் ரசிகர் பட்டாளத்​தில் பெரும்பாலானவர்கள் சின்னத்​திரை மூலம் கிடைத்தவர்கள்​தான்.அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேரு​கிற சாதன​மாக இன்று சின்னத்​திரை இருக்கிறது. ரசிகர்க​ளின் இடத்​திற்கே சென்று, அவர்க​ளைச் சந்​திப்பது என்பது சின்னத்​திரை மூலம்​தான் முடி​யும்.

வட இந்​திய நடிகர்கள்​தான் இது​போன்ற நிகழ்ச்சிக​ளில் கலந்து​கொண்டு போட்டியாளர்களை​யும்,ரசிகர்களை​யும் உற்சாகப்ப​டுத்து​வார்கள்.

தென்​னிந்தியா​வில் இந்த வேலையை முத​லில் நான் இறங்கி செய்​த​தால் எனக்கு நடிப்ப​தில் கிடைக்​கிற திருப்​தியை விட​வும் அதி​க​மாக "மானாட மயி​லாட' மூலம் கிடைக்கிறது. தற்​போது என்​னைத் தொடர்ந்து இது​போன்ற நிகழ்ச்சிக​ளில் குஷ்பு, பூஜா,ரம்பா, ஆகி ​யோர்க​ளும் கலந்து​கொண்டு வருகி​றார்கள். சின்னத்​திரை நிகழ்ச்சிக​ளில் கலந்து கொள்வ​தால் நடிகைக​ளுக்கு மார்க்​கெட் போய்வி​டும் என்பதை நான் உடைத்தி​ருக்கி​றேன். மானாட மயிலாட நிகழ்ச்சி என்னு​டைய மன​திற்கு நிறை​வை​யும், குதூகலத்தை​யும் கொடுக்கிறது.

என்னை நம்பி எடுக்கப்படு​கிற படங்க​ளுக்கு ரசிகர்க​ளின் ஆதரவு நிச்சயம் இருக்கிறது.அத​னால் என்​னு​டைய ரசிகர்கள் எதை விரும்பு​வார்கள்?என்று யோசித்து,அதற்​கேற்ற​வாறு கதைக​ளைத் தேர்ந்தெ​டுக்கி​றேன். தயா​ரிப்பாளர்க​ளும் இந்த விஷயத்​தைப் புரிந்து வைத்தி​ருப்ப​தால்​தான் எனக்​கேற்ற கதைக​ளைத் தேர்வு செய்து​கொண்டு வந்து என்னை அணுகுகி​றார்கள். எனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் எனக்கு அமைந்​தால் தொடர்ந்து நடிப்​பேன்.ஏனெ​னில்,என்னை வைத்து படமெ​டுக்​கும் தயா​ரிப்பாளர்கள் என்​னால் நஷ்டமடையக்கூ​டாது! என்று பரந்த மனதோடு கூறி ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தார் நமீதா.

English summary
Glamour doll Namitha is the celebrity judge on "Maanada Mayilada", a dance based reality show on Kalaignar TV. This dance show is the Namitha's debut on the small screen. The show is the brainwave of veteran choreographer Kala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil