»   »  வெள்ளித்திரைக்கு ஒரு பாகுபலின்னா...சின்னத் திரைக்கு ஒரு நந்தினி! - இயக்குநர் ராஜ்கபூர்

வெள்ளித்திரைக்கு ஒரு பாகுபலின்னா...சின்னத் திரைக்கு ஒரு நந்தினி! - இயக்குநர் ராஜ்கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்து கொண்டிருக்கும் நந்தினி மெகா தொடரின் நூறாவது எபிசோடை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

இதை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. தொடரை இயக்கி வரும் ராஜ்குமார் பேசுகையில், "நந்தினி என்ற பிரமாண்டத்தை இயக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு எபிசோடு எடுக்க ஒரு வாரம் முன்கூட்டியே முடிவு செய்வோம். இது ஒரு நாளில் செய்யக் கூடியது இல்லை. இதில் இரண்டு குழுவாக உள்ளோம். சினிமா போன்றே இங்கேயும் கிட்டதட்ட நூறுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள். சுந்தர் சி அவர்கள் இத்தொடரை ஆர்வத்துடன் பார்த்துவிட்டு தனது கருத்தை தெரிவித்து சில திருத்தங்கள் செய்வார். எபிசோடு எவ்வளவு என்று சொல்லமுடியாது. அது ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்தது. வெள்ளித் திரைக்கு ஒரு பாகுபலி என்றால் சின்னத் திரைக்கு ஒரு நந்தினி என்று சொல்கிறார்கள் பலரும்.

Nandhini is a 'Baahubali of Small Screen '!

நந்தினி தொடர் கன்னடம், தெலுங்கு. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எங்களது கடுமையான உழைப்பு உள்ளது. மாதத்தில் 25 நாட்கள் வேலை இருக்கும். ஒரு மணி நேரத்தில் எடுத்த காட்சியை கூடுதலாக நேரம் ஒதுக்கி எடிட் செய்வேன். கிளாமர் அதிகமாக உள்ளது என்ற விமர்சனம் இருக்கிறது. இளைஞர்களிடம் நந்தினி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. குஷ்பூ இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அது மட்டும் அல்லாமல் மற்றுமொரு பிரபலமும் இத்தொடரின் முக்கிய பகுதி ஒன்றில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்," என்றார்.

நித்யாராம்

நந்தினி கதாநாயகி நித்யாராம் பேசுகையில், "முதலில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் நடிக்கும்போது தயக்கமாக இருந்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் கூட மிகவும் பயமாக இருந்தது. ஆனால் எந்த ஒரு பயமும் இல்லாமல் சகஜமான மனநிலை இப்போது வந்துவிட்டது.

Nandhini is a 'Baahubali of Small Screen '!

எனது தாய்மொழி கன்னடம். தற்போது தமிழ் எனக்கு நன்கு பழகிவிட்டது. தற்போது எனக்கு என்னுடைய தாய் மொழியை விட தமிழில் நடிப்பது எளிதாக உள்ளது. இது சினிமாவில் நடிப்பது போன்ற உணர்வுதான் தருகிறது . மேலும் எனது உடை மற்றும் சிகை அலங்காரம் அனைத்தையும் குஷ்பு மேம்தான் தேர்வு செய்வார்கள். இங்கு வந்து நான் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். என்னிடம் பல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டு நந்தினி தொடரை பற்றி ரசிகர்கள் பேசுகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புகழ் அனைத்தும் ராஜ் கபூர் சார் அவர்களையே சேரும். இந்த தொடரில் நடிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்," என்றார்.

Nandhini is a 'Baahubali of Small Screen '!

நந்தினி கதையை இயக்குநர் சுந்தர்சி எழுதியுள்ளார். பத்ரி கேஎன் நடராஜன் திரைக்கதை அமைத்துள்ளார். யு.கே செந்தில் குமார் ஒளிபதிவு செய்ய, ராஜ்கபூர் இயக்கியுள்ளார்.

English summary
Mega serial Nandhini crew celebrated its 100th episode.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil