»   »  சன் சூப்பர் குடும்பத்தில் நடனமாடும் நந்திதா!

சன் சூப்பர் குடும்பத்தில் நடனமாடும் நந்திதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன் டிவியில் சின்னத்திரை கலைஞர்கள் பங்கேற்றும் ரியாலிட்டி ஷோ சன் சூப்பர் குடும்பம். இந்த நிகழ்ச்சி சீசன் 2 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பிள்ளைநிலா,பொம்மலாட்டம், வாணி ராணி, இளவரசி, என சன் டிவியில் ஒளிபரப்பாகும் 18 சீரியல்களின் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடுகின்றனர்.

இப்போது அரையிருதிச்சுற்று நடைபெற்று வருகிறது. இதில் வாணி ராணி, பொம்மலாட்டம் போன்ற சீரியல் குடும்பங்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

டி.ராஜேந்தர் - மீனா

டி.ராஜேந்தர் - மீனா

இந்த நிகழ்ச்சியின் நடுவராக டி.ராஜேந்தர், மீனா பங்கேற்று சின்னத்திரைக் கலைஞர்களின் நடனம், பாட்டு ஆகியவற்றைப் பார்த்து மதிப்பெண்களைப் போடுகின்றனர். கமெண்ட் சொல்கிறேன் பேர்வழி என்று நடனமாடி பக்கத்தில் இருக்கும் மீனாவையும் பார்வையாளர்களை அச்சுறுத்துகிறார் டி.ராஜேந்தர்.

பாதியில் போன சங்கீதா

பாதியில் போன சங்கீதா

சூப்பர் குடும்பத்தில் மூன்றாவது நடுவராக இருந்த சங்கீதா, புதுயுகம் தொலைக்காட்சியில் நட்சத்திர ஜன்னல் நடத்தப் போய்விட்டார். இதனால் மீனாவும், ராஜேந்தரும் மட்டுமல்லாது அவ்வப் போது சில திரை நட்சத்திரங்களும், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

அசந்து போன டி. ராஜேந்தர்

அசந்து போன டி. ராஜேந்தர்

சின்னத்திரை கலைஞர்களில் சிறுமிகளின் நடனம்தான் மிகவும் அசத்தலாக உள்ளது. ஒரு சிறுமியின் நடனத்தைப் பார்த்து அசந்து போன டி.ராஜேந்தர், தான் படம் இயக்கும் போது தன்னுடைய படத்தின் நாயகியாக நடிக்க சம்மதிக்க வேண்டும் என்று அந்த சிறுமியிடம் கோரிக்கை விடுத்தார்.

எல்லாம் டிராமாதான்

எல்லாம் டிராமாதான்

பிரம்மாண்டமான செட், அசத்தலான தொகுப்பாளர்கள், நடுவர்கள் என இருந்தாலும், அவ்வப்போது நிகழ்ச்சியின் டிஆர்பிஐ உயர்த்த சில டிராமா சண்டைகளும் போடுகின்றனர்.

நந்திதா நடனம்

நந்திதா நடனம்

இறுதிச் சுற்றில் சின்னத்திரை நட்சத்திரங்களுடன் பல சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று நடனமாட உள்ளனர். ‘அட்டகத்தி', ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா' போன்ற படங்களில் நடித்த நந்திதா நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நந்திதா ஹேப்பி

நந்திதா ஹேப்பி

சன் டிவி சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார் நந்திதா. இறுதிப் போட்டி இன்னும் சில தினங்களில் சன் டிவியில் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

English summary
Actress Nandita who made her K-town debut with Attakathi has danced for the finale of the popular television show 'Super Kudumbam' in Sun TV. The prety actress who was last seen in Vijay Sethupathi starrer 'Idharkuthane Aasaipattai Balakumara' expressed her happiness performing for the show.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil