Just In
- 37 min ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
- 47 min ago
கமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்!
- 1 hr ago
என்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்!
- 2 hrs ago
வாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க!
Don't Miss!
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Nayagi Serial: நாயகி... என்னமோ ஆரம்பிச்சு எப்படியோ கதை போகுது...!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் கதையை என்னமோ ஆரம்பிச்சு... எப்படியோ கொண்டு போறாய்ங்க. என்ன சொல்லியும் அனன்யாவைக் கல்யாணம் பண்ணிக்க ஒரு இளிச்ச வாயன் இருக்கானேன்னு காண்பிச்சாங்க.
ஒரு மாசத்துக்கு இப்படியே கொண்டு போன கதையில் திடீர்னு டிவிஸ்ட் வச்சு கொண்டு போறாங்க. அனன்யாவை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி டிவோர்சாம்.. பிஸினஸும் டவுனாம்.
அனன்யா சொத்தோட அவளை கல்யாணம் செய்துகிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கே மறுபடியும் அனன்யாவின் சொத்துக்களை வச்சு. பிசினெஸ் செய்வானாம். ஆரம்பிக்கும்போது ஒரு கதை... டிவிஸ்டுக்கு ஏத்த மாதிரி ஒரு கதைன்னு சீரியல் எடுப்பவர்கள் கைத்தேர்ந்து விட்டார்கள்.

நாயகி ரேட்டிங்
நாயகி சீரியலை ஆரம்பிச்சதில் இருந்தே அது சன் டிவியின் அனைத்து சீரியல்களை விட ரேட்டிங்கில் முதலிடத்தில் மட்டுமே இருக்கு. நாயகி பார்த்துட்டு சாப்பிடலாம்.. நாயகி பார்த்துகிட்டே சாப்பிடலாம். நாயகி முடியட்டும் சாப்பிடலாம் என்று மக்கள் மூன்று மன நிலைகளில் இந்த சீரியல்களை பார்த்து ஹிட்டாக்கி உள்ளனர். என்றாலும், சீரியல் கதை எத்தனை மட்டமாக இருக்கணுமோ அந்த அளவுக்கும் லெவல் இறங்கித்தான் போகுது.

ஆனந்தி மனசில்
நாயகி சீரியலில் ஆனந்தி கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. சீரியல் ஆரம்பித்த புதிதில், வேறு வில்லத்தனங்கள் மட்டுமே ஆனந்திக்கு எதிராக நடக்கும் சதியாக இருந்தது. ஆனந்தி திருவின் கல்யாணம் எப்போது முடியும் என்று மக்கள் எதிர்பார்த்து நாயகியைப் பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.

ஆனந்தி அனன்யா
திரு ஆனந்திக்கா, அனன்யாவுக்கா என்று கதையும் போட்டியில் நகர, மக்களும் ஆனந்திக்கு திருவுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் நாயகி சீரியலை பார்த்து வந்தனர். இப்போது கலி வரதன், துரையரசன் வில்லத்தனம் எடுபடாமல் போரடிக்க, அனன்யா வில்லத்தனம் என்று ஒரு பெண் செய்யக் கூடாத, செய்யத் துணியாத பல தவறுகளை செய்வதை வைத்து சீரியல் கதையை நகர்த்தி வருகிறார்கள்.

சற்குணம் குடும்பம்
நாயகி சீரியலில் சற்குணமாக அம்பிகா குடும்பத்தின் கதை மட்டும்தான் நார்மலான குடும்பக் கதை போல நகர்ந்து வருகிறது. சீரியலுக்கு கொஞ்சமாவது ரிலாக்ஸ் தருகிறது என்றால், அது சற்குணம் குடும்பத்தை காண்பிக்கும் போதுதான் கிடைக்கிறது. சற்குணம் குடும்பம், கண்மணியின் குடும்பம் என்று இவர்கள் குடும்ப கதை ஓகே.
மற்றபடி கதை என்னமோ ஆரம்பிச்சு.. எங்கியோ என்று பயணித்துக்கொண்டுதான் இருக்கு!