»   »  சாதரணமாக தமிழில் சொன்னதே புரியலையாம்.... டிரான்ஸ்லேட் பண்ணனுமாம்.. எரிச்சல் நடிகை "டிம்பிள்"

சாதரணமாக தமிழில் சொன்னதே புரியலையாம்.... டிரான்ஸ்லேட் பண்ணனுமாம்.. எரிச்சல் நடிகை "டிம்பிள்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி நிகழ்ச்சியில் நடிகையும் தொகுப்பாளினியுமாக நீலிமா (வாணி ராணி டிம்பிள்) தமிழில் சொன்ன ஒரு வார்த்தையை டிரான்ஸ்லேட் செய்து சொல்லுங்க என தொகுப்பாளரிடம் கேட்டது பார்வையாளர்களை எரிச்சலடைய வைத்தது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சன் டிவியில் சிறப்பு சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. இதில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

Neelima don't know Tamil

வழக்கமாக சன் டிவியில் ஒளிபரப்பும் சீரியல் குடும்பங்கள்தான் 2 அணிகளாக பிரிந்து சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியில் பங்கேற்பர். சிறப்பு சூப்பர் சேலஞ்ச் என்பதால் வம்சம் பூமிகா( சந்தியா)- மாதவன், வாணி ராணி டிம்பிள் (நீலிமா)- சரவணன், குலதெய்வம் அலமு(ஸ்ரிதிகா) -நாதன் என முக்கிய கதாபாத்திரங்கள் 2 அணிகளாக பிரிந்து பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் சீரியரலில் நாயகன், நாயகிகள்.. ஆனால் டிம்பிள்மட்டுமே தம் வாணி ராணி 'கதாபாத்திரம்' போலவே நடந்து கொண்டார். அதுவும் நடிகர், நடிகைகளின் பெயர்களை கண்டுபிடிக்க க்ளூ கொடுத்தபோது அவர் உச்சகட்ட 'வாணிராணி' கதாபாத்திரத்தை வெளிப்படுத்தினார்.

Neelima don't know Tamil

அந்த கேள்வி ஐஸ்வர்யா தனுஷ் பற்றியது.. மொத்தம் 10 க்ளூவில் முதல் சில க்ளூவிலேயே விடை சொல்லப்பட்டுவிட்டது.. இருப்பினும் எஞ்சிய க்ளூக்களும் வாசிக்கப்பட்டது. அதில் ஒன்று ஐ.நா. சபையில் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டவர் என்பது ஒன்று... இதற்கு அர்த்தம் டிம்பிளுக்கு தெரியவில்லையாம்.. அதை கொஞ்சம் டிரான்ஸ்லேட் பண்ணி சொல்லுங்க என உரக்க சொன்னார்...

தமிழ் நடிகை.. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிற டிம்பிள் என்ற நீலிமாவுக்கு தமிழில் சொல்லப்பட்ட க்ளூவுக்கு அர்த்தம் தெரியாது ஆங்கிலத்தில் டிரான்ஸ்லேட் செய்துதான் சொல்ல வேண்டுமாம்... அப்படி ஒரு செயற்கைத்தனமான 'மேதாவித்தன'த்தை வெளிப்படுத்தினார் டிம்பிள்...

ஆனால் விடை சொல்லப்பட்டுவிட்ட காரணத்தால் டிம்பிளின் இந்த மேதாவினத்தனம் கேலிக்குரியதாகிப் போய் யாரும் கண்டுகொள்ளவே இல்லை...

English summary
Actress Neelima told that she don't know tamil in TV Programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil